125 ஆண்டுகளுக்கு பின் அபூர்வ நிகழ்வு... அட்சய திரிதியையில் பன்மடங்கு அதிகரிக்கும் பலன்கள்!

Akshaya Tritiya 2023: இந்தாண்டு அட்சய திருதியை அன்று, 125 ஆண்டுகளுக்குப் பிறகு, மேஷ ராசியில் பஞ்சகிரஹி யோகம் உருவாகிறது, இது சில ராசிக்காரர்களுக்கு, மகாலட்சுமியின் அபரிமிதமான ஆசீர்வாதங்களைத் தரும்.  

Written by - Sudharsan G | Last Updated : Apr 19, 2023, 06:40 AM IST
  • வரும் ஏப். 22ஆம் தேதி அட்சய திருதியை நாளாகும்.
  • இந்த நாளில் தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவது சுப பலன்களைத் தரும்.
125 ஆண்டுகளுக்கு பின் அபூர்வ நிகழ்வு... அட்சய திரிதியையில் பன்மடங்கு அதிகரிக்கும் பலன்கள்! title=

Akshaya Tritiya 2023: அட்சய திரிதியை பண்டிகை வைஷாக சுக்லாவின் மூன்றாம் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உங்கள் செய்யும் வேலை நீடித்த பலனைத் தரும். இந்த ஆண்டு, அட்சய திருதியை நாளில் அபூர்வ கிரகங்களின் சேர்க்கையால் இந்த நாளின் முக்கியத்துவம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. 

ஏப்ரல் 22ஆம் தேதி அட்சய திருதியை நாளில் மேஷ ராசியில் பஞ்சகிரஹி யோகம் உருவாகிறது. அட்சய திருதியை அன்று, 125 ஆண்டுகளுக்குப் பிறகு, அத்தகைய பஞ்சகிரஹி யோகம் உருவாகிறது, இது 4 ராசிக்காரர்களுக்கு, மகாலட்சுமியின் அபரிமிதமான ஆசீர்வாதங்களைத் தரும். இவர்களுக்கு நிறைய பணம் கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. அதிக பலன்களைப் பெற, இந்த நாளில் தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவது சுப பலன்களைத் தரும். 

பலன்களை பெறும் 4 ராசிகள்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை நாள் மிகவும் பலனளிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொறுப்பு கிடைக்கும். வருமானத்தில் உயர்வு இருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். மரியாதை கிடைக்கும். தங்கம், சொத்துக்கள் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | அட்சய திரிதியை இந்தாண்டு எப்போது வருது? நல்ல நேரம் எப்போது?

ரிஷபம்

அட்சய திருதியை அன்று உருவாகும் பஞ்சகிரஹி யோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். பொருளாதார நெருக்கடி நீங்கும். மன அழுத்தம், பிரச்சினைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். நீங்கள் பெரிய அளவில் சேமிக்க முடியும். பதவி, பணம் இரண்டையும் பெறுவீர்கள். முதலாளி உங்களைப் குறித்து மகிழ்ச்சியடைவார்.

கடகம்

அட்சய திருதியை அன்று சுப யோகம் உண்டாகும் கடக ராசிக்காரர்கள் செல்வம் பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சம்பள உயர்வு கூடும். வியாபாரத்தை பெருக்கலாம். புதிய திட்டத்தில் வேலை செய்யலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் அட்சய திருதியை அன்று புதிய வீடு, வாகனம் வாங்கலாம். சொத்துக்களில் முதலீடு செய்ய இதுவே சிறந்த நேரம். உத்தியோகத்திலும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பணம் சாதகமாக இருக்கும். நிறுத்தப்பட்ட வேலைகள் முன்னேறும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அக்ஷய திருதியையில் உருவாகும் 7 யோகங்கள்! 3 மடங்கு பலன் கொடுக்கும் பரிகாரங்கள்!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News