அட்சய திருதியில் தன யோகம்.. இந்த ராசிகளுக்கு செல்வம், பணம், வெற்றி மேல் வெற்றி

Askhaya Tritiya 2024: இந்த ஆண்டு அட்சய திருதியை அன்று பல மங்களகரமான ராஜயோகங்கள் உருவாகின்றன. இதனால் பல ராசிகளுக்கு சுப பலன் உண்டாகும். அந்த ராசிகளைப் பற்றி பார்ப்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 17, 2024, 06:13 PM IST
  • அட்சய திருதியை மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.
  • மூன்று ராசிக்காரர்களுக்கு பணம், புகழ் போன்றவற்றை தரக்கக்கூடும்.
  • நிலம், வாகனம் போன்றவை வாங்கலாம்.
அட்சய திருதியில் தன யோகம்.. இந்த ராசிகளுக்கு செல்வம், பணம், வெற்றி மேல் வெற்றி title=

Akshaya Tritiya 2024: அட்சய திருதியை பொதுவாக திருமணம் செய்ய மிகவும் உகந்த காலமாக கருதப்படுகிறது. இந்நாளில் திருமணம் செய்வது, தங்கம் மற்றும் வெள்ளி வாங்குதல், புதிய செயல்களைத் தொடங்குவது போன்ற சுப காரியங்கள் சுப நேரம் இல்லாமல் செய்யலாம். ஆனால், அட்சய திருதியை அன்று சுக்கிரன் அஸ்தமனமாவதால் திருமணம் வைபோகம் நடத்தக் கூடாது என்பது ஜோதிட ஐதீகமாகும். சித்திரை மாத வளர்பிறையில் வரும் திரிதியை திதியில் கொண்டாடப்படுகிறது. 2024ம் ஆண்டில் மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. அன்று காலை 06.33 மணி துவங்கி, மே 11ம் தேதி காலை 04.56 மணி வரை திரிதியை திதி உள்ளது. இந்த நாளில், லட்சுமி தேவியை வணங்கி தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவது மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.

அட்சய திருதியை அன்று மங்களகரமான யோகம் உருவாகிறது:
மறுபுறம் மே 10 ஆம் தேதி அட்சய திருதியை நாளில் பல மங்களகரமான யோகங்கள் உருவாகின்றன. குறிப்பாக அட்சய திருதியை நாளில், கஜகேசரி யோகம் மற்றும் தனயோகம் உருவாகிறது, இந்த யோகம் மூன்று ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். உண்மையில், அட்சய திருதியை அன்று, மேஷத்தில் சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நடக்கப் போகிறது, இதன் காரணமாக சுக்ர ஆதித்ய யோகம் உருவாகிறது. இதனுடன் மீனத்தில் செவ்வாயும் புதனும் சேர்க்கையாகப் போவதால் தனயோகமும், மூல திரிகோண ராசியான கும்பத்தில் சனி இருப்பதால் ஷஷ யோகமும், செவ்வாய் உச்ச ராசியான மீனத்தில் இருப்பதால் மாளவ்ய ராஜயோகமும் உருவாகின்றன. இது தவிர ரிஷப ராசியில் சந்திரனும் குருவும் இணைவதால் கஜகேசரி யோகம் உருவாகி உள்ளது. இப்படி அட்சய திருதியை அன்று பல ராஜயோகங்கள் உருவாகயுள்ளதால் மூன்று ராசிக்காரர்களுக்கு பணம், புகழ் போன்றவற்றை தரக்கக்கூடும்.

மேலும் படிக்க | சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்

மேஷம்: அட்சய திருதியை தினமானது மேஷ ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாகவும், சுபமாகவும் அமையும். ஒவ்வொரு செயலிலும் வெற்றி கிடைக்கலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளை அனைத்தும் முடிவுக்கு வரும். குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரலாம். நிலம், வாகனம் போன்றவை வாங்கலாம்.

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை நாள் சிறப்பாக இருக்கும். இந்த 5 ராசி மக்கள் பெரும் நிதி நன்மைகளைப் பெறலாம். அன்னை லட்சுமியின் அருளால், வேலையிலும் அதிர்ஷ்டம் உண்டாகும். பாராட்டுகளைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். சம்பளம் உயர்வு கூடலாம். புதிய தொழில் தொடங்கவும், வியாபாரத்தில் லாபம் ஈட்டவும் சிறந்த நேரம். பழைய முதலீடுகளால் லாபம் பெறுவீர்கள்.

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை நாள் சிறப்பான வெற்றியைத் தரும். கடின உழைப்புக்கு ஏற்ப முழு பலன் கிடைக்கும். பணியிடத்தில் உள்ள அனைத்து சூழ்நிலைகளும் உங்களுக்கு சாதகமாக அமையும், இதனால் அலுவலகத்தில் வெற்றி அடைவீர்கள். சக ஊழியர்களுடன் நல்ல உறவு இருக்கும். உங்களது இலக்கை அடைவதில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத நிதி ஆதாயம் உங்களுக்கு உண்டாகும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி மே 1: இந்த ராசிகளுக்கு அரச வாழ்க்கை, பணம், புகழ், அதிர்ஷ்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News