மகரத்தில் புத-ஆதித்ய யோகம்... அனைத்து ராசிகளுக்கான முழு பலன்கள்!

புதன் கிரகம் ராசிக்கு பிப்ரவரி 1ம் தேதி பெயர்ச்சியாகிறது. சூரியன் ஏற்கனவே மகர ராசியில் உள்ள நிலையில், புதனும் சூரியனும் இணைந்து ஆதித்ய யோகம் உருவாகியுள்ளது. இது சிலருக்கு சுப பலன்களையும், சிலருக்கு அசுப பலன்களையும் வழங்குகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 1, 2024, 05:53 PM IST
  • சூரியன் ஏற்கனவே மகர ராசியில் உள்ள நிலையில், புதனும் சூரியனும் இணைந்து ஆதித்ய யோகம் உருவாகியுள்ளது.
  • உடல் நலம் தொடர்பான பிரச்சனை ஏற்படலாம்.
  • வேலை பளு அதிகரிக்கும் என்றாலும், உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைத்து விடும்.
மகரத்தில் புத-ஆதித்ய யோகம்... அனைத்து ராசிகளுக்கான முழு பலன்கள்! title=

ஜோதிடத்தில், கிரக பேச்சுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த வகையில், புதன் கிரகம் ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளது. சூரியன் ஏற்கனவே மகர ராசியில் உள்ள நிலையில், புதனும் சூரியனும் இணைந்து ஆதித்ய யோகம் உருவாகியுள்ளது. இது சிலருக்கு சுப பலன்களையும், சிலருக்கு அசுப பலன்களையும் வழங்குகிறது. மேஷம் முதல் மீனம் வரை இந்த புதன் பெயர்ச்சியும் புத ஆதித்ய யோகமும் வகையில் பாதிக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி புத-ஆதித்ய யோக பலன்கள்

மேஷ ராசியினர் வாழ்க்கையில் மாற்றங்களை சந்திக்க கூடும். இவை மகிழ்ச்சியை தரும் மாற்றங்களாக இருக்கும். பணியிடத்தில் வேலைக்கான அங்கீகாரம் கிடைக்கும். என்னிடம் தனிப்பட்ட வாழ்க்கையில் உறவில் பாதிப்பு ஏற்படலாம். வெளிப்படையாக பேசுவது பிரச்சனைகளை தீர்க்கும். முதலீடு செய்ய ஏற்ற காலமிது. இதன் மூலம் உங்கள் வருமானம் கூடி நிதிநிலைமை மேம்படும்.

ரிஷப ராசிக்கான புத ஆதித்ய யோக பலன்கள்

ரிஷப ராசியினருக்கு புத ஆதித்ய யோகம் சிறப்பான பலன்களை கொடுக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடுவீர்கள். வேலையில் சம்பள உயர்வு பதவி உயர்வு எதிர்பார்க்கலாம். செலவுகளை குறைத்து எதிர்காலத்திற்காக சேமிக்க முயற்சி செய்யவும். நிதி ரீதியாக நீங்கள் இருப்பீர்கள். உடல் நல ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

மிதுன ராசிக்கான புத ஆதித்ய யோக பலன்கள்

மிதுன ராசிக்கு திருப்பன வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழில் வாழ்க்கையில் தடைகள் வரலாம் என்றாலும் உங்கள் திறமையான அதனை விடுவீர்கள். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கும். இதன் காரணமாக செலவுகள் அதிகரிக்கும். 

கடக ராசிக்கான புத ஆதித்ய யோக பலன்கள்

கடக ராசியினரை பொறுத்தவரை, மாற்றங்கள் உருவாகும். பணியிடத்தில் சக ஊழியர்கள் இடையேயான புரிதல் நன்றாக இருக்கும். இதனால் பணிகள் எளிதில் முடிவடையும். குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும். நிதிநிலை சிறப்பாக இருக்கும்.

சிம்ம ராசிக்கான புத ஆதித்ய யோக பலன்கள்

சிம்ம ராசியினர் எதிரிகளையும் வீழ்த்தி சதியின் முறியடித்து வாழ்க்கையில் வெற்றிகளை குவிப்பார்கள். உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தாலும் அதனை எதிலும் சமாளிக்கலாம். தேவைகள் விருப்பங்கள் யாவும் நிறைவேறும். பதவி உயர்வு கிடைத்து அதன் மூலம் பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2024... ‘இந்த’ ராசிகளுக்கு பொன்னான காலம் ஆரம்பம்!

கன்னி ராசிக்கான புத ஆதித்ய யோக பலன்கள்

கன்னி ராசிக்காரர்கள் தடைகள் அனைத்தையும் தகர்த்து வெற்றியை நோக்கி பயணிப்பார்கள். குழந்தைகளால் சில சவால்களான சூழ்நிலையை சந்திக்க நேரிடலாம். எனவே எச்சரிக்கையாக இருக்கவும். பணியிடத்தில் வேலை பளு அதிகரிக்கும் என்றாலும், உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைத்து விடும்.

துலாம் ராசிக்கான புத ஆதித்ய யோக பலன்கள்

துலாம் ராசியினர் வேலையில் தொழிலில் சில தடங்கல்களை சந்தித்தாலும், தடைகளை வெற்றி கொண்டு சாதனை படைப்பீர்கள். மன மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கலாம். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். நிதிநிலை நன்றாகவே இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

விருச்சிக ராசிக்கான புத ஆதித்ய யோக பலன்கள்

விருச்சிக ராசிகள் உடல்நலம் காரணமாக சில பிரச்சனைகளை சந்திக்கலாம். மன அழுத்தம் அதிகரிக்கலாம். உடன் பிறந்தவர்களுக்கு பண உதவி செய்ய வேண்டியது ஏற்படலாம். பணியிடத்திலும் சவால்களை சந்திக்கலாம் எனவே எச்சரிக்கையாக இருக்கவும்.

தனுசு ராசிக்கான புத ஆதித்த யோக பலன்கள்

தனுசு ராசியை பொறுத்தவரை முழு உற்சாகத்துடன் அனைத்து விதமான சவால்களையும் எதிர்கொள்வீர்கள். புதிய முயற்சிகளை தொடங்க ஆர்வம் இருக்கும். பணியில் உங்கள் பாராட்டப்படும். கடின உழைப்பு பலன் தரும். ஊதிய உயர்வுக்கான வாய்ப்பு உண்டு.

மகர ராசிக்கான புத ஆதித்ய யோக பலன்கள்

மகர ராசிக்காரர்களுக்கு உடல் நலம் தொடர்பான பிரச்சனை ஏற்படலாம். குடும்பத்தில் சிறிது சச்சரவு அல்லது கருத்து வேறுபாடு ஏற்படலாம். அனைத்தையும் பொறுமையுடன் எதிர்கொள்வது. உங்கள் பேச்சு வார்த்தையில் கவனம் தேவை. பணியிடத்திலும் எச்சரிக்கையாக இருக்கவும்.

கும்ப ராசிக்கான புத ஆதித்ய யோக பலன்கள்

கும்ப ராசியினரின் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். எதிர்பாராத பயணம் காரணமாக செலவுகள் அதிகரிக்கலாம். பற்றாக்குறை ஏற்படலாம். எனினும் உறவினர் உதவியுடன் நிலைமை சமாளிக்கலாம். பொறுமையுடன் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவும்.

மீன ராசிக்கான புத ஆதித்ய யோக பலன்கள்

மீன ராசியினரை பொறுத்தவரை புதன் பயிற்சியும் புதன் அதிதியோகமும் மன உளைச்சலை அதிகரிக்கலாம். உடல் நலம் பாதிப்படைந்து அதற்காக பணம் செலவழிக்க நேரிடலாம். வீட்டு செலவுகளும் அதிகரிக்கும். எனினும் பண வரவின் மூலம் நிலைமையை சமாளித்து விடுவீர்கள். உங்கள் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும் அதனால் பொறுமை காக்கவும்.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | பிப்ரவரி மாத ராசி பலன்... மேஷம் முதல் மீனம் வரை... அதிர்ஷ்ட ராசிகள் எவை..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News