54 ஆண்டுக்குப் பிறகு நிகழும் முழு சூரிய கிரகணம்.. இந்த ராசிகளின் தலைவிதி தலைகீழாக மாறும்

Solar Eclipse Horoscope : இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை அதாவது ஏப்ரல் 8ஆம் தேதி மீன ராசியில் நிகழப் போகிறது. சூரிய கிரகணத்தின் தாக்கத்தால் எந்த ராசிகளின் வாழ்க்கையில் சிரமங்களை ஏற்படத் தொடங்கும் என்பதை பார்ப்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 7, 2024, 01:12 PM IST
  • சூரிய கிரகணத்தில் அரிதான தற்செயல் நிகழ்வு.
  • சூரிய கிரகணம் எப்போது நிகழும்?
  • எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும்?
54 ஆண்டுக்குப் பிறகு நிகழும் முழு சூரிய கிரகணம்.. இந்த ராசிகளின் தலைவிதி தலைகீழாக மாறும் title=

Solar Eclipse Horoscope 2024 april: சூரிய கிரகணத்திற்கான கவுண்டவுன் தொடங்க உள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணம் நாளை அதாவது 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி திங்கட்கிழமை நிகழவுள்ளது. இந்த நாள் அமாவாசை மற்றும் சில மணிநேரங்களுக்குப் பிறகு சைத்ரா நவராத்திரியும் தொடங்கும். இந்த சூரிய கிரகணம் மீன ராசியின் ரேவதி நட்சத்திரத்தில் நடைபெறுகிறது. இத்துடன் அனைத்து ராசிகளுக்கும் சுப, அசுப பலன்களை ஏற்படுத்தப்போகும் இந்த சூரிய கிரகணத்தில் இதுபோன்ற பல யோகங்களின் அரிய கலவையும் உருவாகி வருகிறது.

சூரிய கிரகணத்தில் அரிதான தற்செயல் நிகழ்வு:
இந்த சூரிய கிரகணத்தில் பல அரிய யோகங்கள் உருவாகி வருகின்றன. இந்த ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணம் மிக நீண்டது. கடந்த 54 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மிக நீண்ட சூரிய கிரகணம் இதுவாகும். இந்த கிரகணம் சுமார் 5 மணி நேரம் 25 நிமிடங்கள் வரை நீடிக்கும். இதற்கு முன்னதாக கடந்த 1970 ஆம் ஆண்டில் இது போன்ற நீண்ட சூரிய கிரகணம் ஏற்பட்டது. இந்த முழு சூரிய கிரகணத்தில் பூமியின் பல பகுதிகளிலும் முழு இருள் சூழ்ந்திருக்கும்.

மேலும் படிக்க | இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்.. பாதிப்பு ஏற்படுத்துமா? ஜோதிடம் சொல்வது என்ன?

சூரிய கிரகணம் எப்போது நிகழும்?
நாளை அதாவது  ஏப்ரல் 8 ஆம் தேதி சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இரவு 9:12 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 2:22 வரை நீடிக்கும். இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது. ஆனால் இந்த சூரிய கிரகணமானது மேற்கு ஐரோப்பா, அட்லாண்டிக், ஆர்க்டிக் மெக்சிகோ, வட அமெரிக்கா, கனடா, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, இங்கிலாந்தின் வடமேற்கு பகுதி மற்றும் அயர்லாந்து ஆகிய பகுதிகளில் தெளிவாகத் தெரியும்.

இந்த ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் அசுப பலன்களை தரும்:
மேஷம், விருச்சிகம், கன்னி, கும்பம், தனுசு ராசிக்காரர்களுக்கு நாளை நிகழப்போகும் சூரிய கிரகணம் நல்ல பலனைத் தராது. இந்த நேரத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு சற்று கவனமாக இருக்க வேண்டும். நிதி இழப்பீடு ஏற்படலாம். வியாபாரத்தில் பிரச்சனைகள் வரலாம். பணியிடத்தில் கவனமாக இருக்க வேண்டும். கவனமாக வாகனத்தை ஓட்டவும். 

சூரிய கிரகணத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்-

கடகம்: இந்த ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணம் கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் கஷ்டங்களை தரும். உத்தியோகத்தில் ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம். நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். செலவுகள் அதிகரிக்கலாம். தேவையற்ற மன அழுத்தத்தை தவிர்க்கவும்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு, இந்த ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணம் சாதகமான பலனைத் தராது. வாழ்க்கையில் பண கஷ்டம் ஏற்படும். சவால்களை சந்திக்க நேரிடலாம். வேலையில் தடைகள் வரலாம். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

கும்பம்: இந்த ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணம் கும்ப ராசியினருக்குப் பலன் அளிக்காது. நிதி நிலையில் ஏமாற்றம் ஏற்படலாம். நிதி இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உடல்நலம் மோசமடையலாம்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | 50 வருடங்களுக்கு பிறகு சதுர்கிரஹி யோகம்.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம் அதிகரிக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News