2024 ஜனவரி மாதம் கடைசி நாளுக்கான ராசிபலன்: 4 ராசிகளுக்கு ஜாக்பாட்

Rasipalangal 31st January 2024: இன்று நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? 2024 ஜனவரி 31ம்ம் நாளுக்கான மேஷம், முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 31, 2024, 06:18 AM IST
  • நண்பர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும் மேஷ ராசிக்காரரே
  • எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும் கடக ராசியினரே
  • கும்ப ராசிக்கு தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம்
2024 ஜனவரி மாதம் கடைசி நாளுக்கான ராசிபலன்: 4 ராசிகளுக்கு ஜாக்பாட் title=

Astrology Predictions: இன்றைய நாளும் கோளும் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? ஜனவரி 30, 2024ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.

31-01-2024 சோபகிருது, தை 17  ராசி பலன்கள்

மேஷம் 
உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நெருக்கமானவர்களின் மூலம் புதுவிதவிதமான அனுபவம் ஏற்படும். இழுபறியில் இருந்துவந்த காரியங்கள் முடிவுக்கு வரும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். 

ரிஷபம் 
அடமான பொருட்களை மீட்பதற்கான சூழல் உண்டாகும். புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். கலைப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.  

மிதுனம் 
வீடு, மனை வாங்குவது தொடர்பான சிந்தனை மேம்படும். மக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலை உண்டாகும். பேச்சுவன்மையின் மூலம் காரியசித்தி உண்டாகும். சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். 

கடகம் 
வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். வேலையாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். பாகப்பிரிவினைகளில் எதிர்பார்ப்பு நிறைவேறும்.  

மேலும் படிக்க | மகரத்தில் புதன் பெயர்ச்சி: பிப்ரவரி 1 முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்

சிம்மம் 
சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். திடீர் தனவரவு உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். கலைத்துறைகளில் மேன்மை உண்டாகும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். புதுவிதமான ஆடை சேர்க்கை உண்டாகும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும்.  

கன்னி 
முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். வியாபாரப் பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். வாக்குறுதிகள் அளிக்கும்போது சிந்தித்துச் செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் அவசியம். தியான பயிற்சிகளை செய்வதால் மன சங்கடம் குறையும்.  

துலாம் 
மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதுவிதமான துறைகளின் மீது ஆர்வம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் மாற்றம் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இழுபறியில் இருந்துவந்த வழக்குகளுக்கு முடிவு கிடைக்கும். 

விருச்சிகம்
சேமிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சி அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த தகவல் சாதகமாகும். மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும்.  வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் மேன்மை உண்டாகும்.  

மேலும் படிக்க | குரு அருளால் 2024 இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டமாய் இருக்கும், கேட்டது எல்லாம் கிடைக்கும்

தனுசு 
தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கன்னி ராசிக்காரர்கள் சுப காரியம் தொடர்பான முயற்சிகளில் ஆக்கப்பூர்வமான முடிவுகளை எட்டலாம். நெருக்கமானவர்களின் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் ஏற்படும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படும்.  

மகரம் 
தந்தை வழி சொத்துக்களில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுற்று வட்டாரத்தில் மதிப்பு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.   

கும்பம் 
பழைய நினைவுகளின் மூலம் மனதில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். நண்பர்களின் வழியில் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். வீண்செலவுகளால் மனச்சஞ்சலம் ஏற்படும். எதிர்காலம் குறித்த சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கவனம் வேண்டும்.   

மீனம்
உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.  திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகளால் மதிப்பு அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். மனதில் புதுவிதமான இலக்கு பிறக்கும்.  

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 15 ஆண்டுக்குப் பின் இணைந்த புதன் ராகு, 3 ராசிகளுக்கு ராஜ கோடீஸ்வர யோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News