இன்று ‘இந்த’ 5 ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம்! யார் யாருக்கு தெரியுமா?

Today Rasi Palan 19th May 2024 : 12 ராசிகளின் ராசிப்பலன்களையும், எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் இருக்கப்போகிறது என்பதையும் இங்கு பார்க்கலாம்.   

Written by - Yuvashree | Last Updated : May 19, 2024, 06:21 AM IST
  • இன்றைய ராசி பலன்
  • 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்
  • மேஷம், விருச்சிகம், கடகம் உள்ளிட்ட ராசிகளுக்கான பலன்கள்
இன்று ‘இந்த’ 5 ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம்! யார் யாருக்கு தெரியுமா?  title=

Today Rasi Palan 19th May 2024 : தமிழ் ராசிகளில் இருக்கும் 12 ராசிகளுள், இன்று குறிப்பிட்ட 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை அடிக்கப்போகிறது. அவை எந்தெந்த ராசிகள் தெரியுமா? 

மேஷம்:

சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருப்பவர்கள் இன்று ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணலாம். நிதி நிலையில் எந்த மாற்றமும் இல்லை. உங்கள் மகிழ்ச்சிக்குரியவர்களுடன் சேர்ந்து நேரம் செலவிடுவீர்கள். இன்ப சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புள்ளது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள். 

ரிஷபம்:

தீயவர்களிடம் இருந்து விலகியிருப்பது நல்லது. நிதி ரீதியான ஆலோசனைகள் தேவைப்படலாம். உங்கள் குடும்பத்தினர் உங்களுக்கு தைரியமும் நம்பிக்கையும் கொடுப்பர். உங்களை பற்றி நீங்களே அறிந்து கொள்ளும் நிலை ஏற்படலாம். உங்கள் முன்னேற்றத்திற்கான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மிதுனம்:

ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் பிறருடன் கலந்து ஆலோசிக்கவும். இன்று பிறருக்கு உதவி செய்வதன் மூலம் உங்களைத்தேடி நன்மை வந்து சேரும். 

கடகம்: 

உங்களிடம் இருக்கும் தனித்திறமை பிறரது கண்களுக்கு தெரியும் நாள் இது. புண்ணிய காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் அதிர்ஷ்டம் கிட்டலாம். உங்கள் இல்லம் தேடி சில முக்கிய நபர்கள் வரலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். 

சிம்மம்:

சமூகத்திற்கு தேவையான செயல்களை செய்து மகிழ்வீர்கள். உங்கள் கைக்கு நெடுநாட்களாக வர வேண்டி இருந்த கடன் தொகை வந்து சேரலாம். எழுத்து துறையில் இருப்பவர்களுக்கு பணி ரீதியாக முன்னேற்றம் கிட்டலாம். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. 

கன்னி:

புதிய வாகனம் அல்லது வீடு வாங்கும் யோகம் சிலருக்கு உண்டு. நீங்கள் பிரபலமாவதற்கான வாய்ப்பு உங்களை தேடி வரலாம். உடலுக்கு உழைப்பு தரும் வேலையில் இன்று இணைவீர்கள். உங்கள் நண்பர்களுடன் இன்ப சுற்றுலா செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. அன்புக்குரியவர்களை இன்று சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். திடீர் பண வரவினால் மகிழ்ச்சி கொள்வீர்கள். 

துலாம்:

ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி, உங்கள் உடல் நலனை மெருகேற்றிக்கொள்வீர்கள். நிதி ரீதியாக முன்னேற்றம் காணும் நாள் இது. உங்கள் வீட்டில் அலங்கார பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களுக்கு பிடித்தவரின் ஆலோசனையால் தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள்.

விருச்சிகம்:

உங்கள் உடன் பிறந்தவர்களின் மீது இன்று உங்களுக்கு அக்கறை பெருகும். உங்கள் வாழ்வில் ஏற்படும் முக்கிய மாற்றம் உங்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும். நெடுந்தூர பயணங்களுக்கான திட்டத்தை வகுப்பீர்கள். நீங்கள் மிகவும் ஆசைப்படும் ஒரு சந்தர்ப்பம், இன்று உங்களை தேடி வரலாம். திடீர் செலவுகளால் குழப்பம் கொள்ள வேண்டாம், அது உங்களுக்கு எதிர்காலத்தில் கைக்கொடுக்கும். 

மேலும் படிக்க | மகாலட்சுமிக்கு பிடித்தமான 5 ராசிகள் இவை தான்! எப்பொழுதும் அதிர்ஷ்டம் இருக்கும்!

தனுசு:

இதுவரை உங்களால் அடைபடாமல் இருந்த கடன் தொகைக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்படலாம். உங்கள் அன்புக்குரியவர்கள் அனைவரையும் ஒன்றாக சந்தித்து மகிழ்வீர்கள். வாழ்வில் சாகசத்தை விரும்புபவர்களுக்கு இன்று அதை அனுபவிக்கும் நல்ல வாய்ப்பு கிட்டும். புதிதான விஷயங்களை கற்றுக்கொள்பவர்களின் முயற்சிகளில் இன்று முன்னேற்றம் தெரியும்.

மகர ராசி:

உங்களுக்கு நல்லது நடைபெறும் அதிர்ஷ்டமான நாள் இது. நீங்கள் நெடுங்காலமாக நினைத்து நடைபெறாமல் நடக்கும் ஒரு விஷயம், இன்று நடக்கலாம். புதிதான இடங்களுக்கு சென்று அங்கு புதிய நண்பர்களை உருவாக்கும் வாய்பு கிடைக்கலாம். சேமிப்பில் இன்று கவனம் செலுத்துவீர்கள். உங்களுக்கு பிடித்தவர்களுடன் வெளியில் சென்று சாப்பிட்டு மகிழ்வீர்கள்.

கும்பம்:

ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி, உடல் நலனில் முன்னேற்றம் காண்பீர்கள். இரண்டாம் தர பொருட்களை வாங்கும் வாய்ப்பு கிட்டலாம். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் சரியான ஆலோசனையை தகுந்த நபரிடம் இருந்து பெருவது நல்லது. 

மீனம்:

உங்கள் வாழ்க்கை குறித்த முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு உங்கள் குடும்பத்தினருடன் இது குறித்து கலந்தாலோசிப்பது நல்லது. உங்களின் திறமையை வெளிக்காட்டி அதன் மூலம் பிரபலமடையும் வாய்ப்பு கிட்டலாம். உங்கள் அன்புக்குரியவர்களுடன் வெளியில் சென்று மகிழ்வீர்கள். செலவுகளை இன்று குறைத்துக்கொள்வது நல்லது. 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

 

மேலும் படிக்க | உதயமாகிறார் குரு: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான ராஜயோகம்... வெற்றியின் உச்சம் தொடுவார்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News