மீனத்தில் உருவாகும் திரிகிரஹி யோகம்: இந்த ராசிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம்

Trigrahi Yogam: மீனத்தில் 3 கிரகங்கள் ஒரே நேரத்தில் இணைவதால் திரிகிரஹி யோகம் உருவாகும். இந்த ராஜயோகத்தின் பலன் அனைத்து ராசிகளிலும் தெரியும். எனினும் சில ராசிகளுக்கு இது மிகவும் மங்களகரமானதாகக் இருக்கும் என கருதப்படுகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 3, 2024, 03:43 PM IST
  • கடக ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோகத்தின் தாக்கத்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • உத்தியோகத்திற்கு இது நல்ல நேரமாக இருக்கும்.
  • நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகள் இப்போது நடந்து முடியும்.
மீனத்தில் உருவாகும் திரிகிரஹி யோகம்: இந்த ராசிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் title=

Trigrahi Yogam: ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்கள் முக்கிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. கிரகங்கள் பெயர்ச்சி ஆகும்போது சில சமயங்களில் ஒரே ராசியில் பல கிரகங்களின் சேர்க்கையும் ஏற்படுவதுண்டு. இந்த சேர்க்கைகளால் பல யோகங்கள் உருவாகின்றன. 

ஜோதிடத்தில், புதன் கிரகம் புத்திசாலித்தனம். பேச்சாற்றல், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணியாக கருபதப்படுகிறார். புதனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது. ஜோதிடக் கணக்கீடுகளின்படி, புதன் கிரகம் ஏப்ரல் 9 ஆம் தேதி மீன ராசியில் பெயர்ச்சி ஆகிறார். மீனத்தை ஆளும் கிரகம் குரு பகவான். புதன் மீனத்தில் நுழையும்போது அங்கு ஏற்கனவே சுக்கிரனும் சூரியனும் இருப்பார்கள். இந்த நிலையில் மீனத்தில் 3 கிரகங்கள் ஒரே நேரத்தில் இணைவதால் திரிகிரஹி யோகம் உருவாகும். இந்த ராஜயோகத்தின் பலன் அனைத்து ராசிகளிலும் தெரியும். எனினும் சில ராசிகளுக்கு இது மிகவும் மங்களகரமானதாகக் இருக்கும் என கருதப்படுகிறது. இவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பண வரவு அதிகமாகும். மூன்று கிரகங்களின் ஆசியால் மும்மடங்கு நன்மை கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இங்கே காணலாம். 

மிதுனம் (Gemini)

மிதுன ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோகம் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. மீனத்தில் உருவாகும் யோகத்தால் அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கலாம். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்கள் அல்லது வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பணி இடத்தில் மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். இந்த நேரத்தில் பொருளாதார நிலை மேம்படும். தொழிலதிபர்களுக்கு இது நல்ல நேரம். புதிய ஒப்பந்தங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். 

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், மே 1 முதல் பொற்காலம் ஆரம்பம்

கடகம்  (Cancer)

கடக ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோகத்தின் தாக்கத்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்திற்கு இது நல்ல நேரமாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகள் இப்போது நடந்து முடியும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு இந்த காலத்தில் லாபம் அதிகரிக்கும். உங்கள் வணிகம் விரிவடையும். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். உங்கள் கடின உழைப்பைக் குறைக்க வேண்டாம், உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். புதிய வழிகளில் பண வரவு இருக்கும். இதனால் நிதி நெருக்கடி தீரும். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். 

மகரம் (Capricorn)

மகர ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோகம் அற்புதமான பலன்களை அளிக்கும். வியாபாரிகள் பெரும் லாபம் பெறுவார்கள். குடும்ப உறவுகள் வலுவாக இருக்கும். உங்கள் பெற்றோருக்கு சேவை செய்யுங்கள். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். பணி இடத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஆஞ்சநேயருக்கு பிடித்த ராசிகள்: இவர்களின் துயரங்களை நிமிடத்தில் போக்கி அருள் மழை பொழிவார் அனுமன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News