வரும் வாரம் எப்படி இருக்கும்? திங்கள் முதல் ஞாயிறு வரையிலான வார ராசிபலன் அறிவோம்!

Rasipalan For One Week: கிரக நிலைகளை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படும் ஜாதக கணிப்புகளில், வார ராசிபலன்களும் முக்கியமானவை. ஒரு வாரத்தை திட்டமிட உதவும் ராசிபலன்கள் இவை...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 18, 2024, 08:54 AM IST
  • இது, 12 ராசிகளுக்குமான ஒரு வாரத்திற்கான ராசிபலன்
  • பிப்ரவரி 19 முதல் 25 வரையிலான வார ராசிபலன்
  • 4 ராசிகளுக்கு கவனம் தேவை
வரும் வாரம் எப்படி இருக்கும்? திங்கள் முதல் ஞாயிறு வரையிலான வார ராசிபலன் அறிவோம்! title=

Weekly Horoscope 2024 Feb 19th - 25th February: மனதில் நினைத்த பணிகளை செய்து முடிக்க முடியுமா என்ற கேள்வி யாருக்குத் தான் இருக்காது? நாளை முதல் ஒரு வாரத்திற்கான ராசிபலன்களை தெரிந்துக் கொண்டால், ஞாயிற்றுக்கிழமையான இன்றே அடுத்த வாரத்தில் செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிடலாம்.

இது, 12 ராசிகளுக்குமான ஒரு வாரத்திற்கான ராசிபலன்

மேஷம்
உத்தியோகம் தொடர்பான பயணங்கள் நல்ல பலன்களைக் கொடுக்கும்.. உறவினர்களுடன் அனுசரித்துச் செல்லவும். எதிர்காலம் தொடர்பான கவலைகள் அதிகரிக்கும். பிரச்சனைகள் குறையும், மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள், உணவு மீதான விருப்பம் அதிகரிக்கும்

ரிஷபம்
தந்தை வழி சொந்தங்களுடன் நெருக்கம் ஏற்படும். ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் நல்ல நேரத்தைக் கொண்டுவரும். பிறருக்கு உதவி செய்து மகிழும் காலம் இது.. 

மிதுனம்
வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் நல்ல பலனைக் கொடுக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். வாழ்க்கையில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படுவது இயல்பு என்பதை புரிந்துக் கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படும். உங்கள் மீதான பிறரின் நம்பிக்கைகள் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: எந்த எந்த ராசிகளுக்கு இன்று நல்ல நேரம்?

கடகம்
காரியத்தடைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். தொழில் சார்ந்த எண்ணங்கள் மனதில் மேலோங்கும். வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு நகர்வதற்கான உத்வேகம் பிறக்கும்.    

சிம்மம்
உடலை வருத்திய சில பிரச்சனைகள் விலகும். ஆனால், எதிலும் திருப்தியற்ற மனநிலை உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும்.

கன்னி 
உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.  குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் விலகும்.  மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் மேலும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். இறைவனை பிடித்துக் கொள்வதே ஒரே வழி என்பது புரியும். 

துலாம் 
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத சில நிகழ்வுகளின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும், பணம் பொருள் சொத்து தொடர்பான பிடிப்பு விட்டுப்போவது போல் தோன்றினாலும் மீண்டும் வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படும். 

மேலும் படிக்க | கல்வி அறிவுக்கு காரகர் புதன்! புதன் பெயர்ச்சியானால் என்ன? தீமைகளை குறைக்க இப்படி வழிபடலாம்! 

விருச்சிகம் 
உடன் பிறந்தவர்களுடன் மனக்கசப்பு ஏற்படும் வாய்ப்புகள் உண்டு என்பதால், கவனமாக செயல்படவும். பழகும் விதத்தில் சில மாற்றங்களை மேற்கொள்வது பலனளிக்கும். உங்களுடைய பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொண்டால் பிரச்சனைகள் குறையும். பணிபுரியும் இடத்தில் கிடைக்கும் புதிய வாய்ப்புகள் வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்லும். 

தனுசு 
கண்ணோட்டங்கள் மாறும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும்ம். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும்.  திடீர் பணவரவு மகிழ்ச்சியை உண்டாக்கும். வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்லவும்.  

மகரம் 
தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டாக்கும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இனம்புரியாத உற்சாகம் உண்டாகும். பதற்றமின்றி பொறுமையுடன் செயல்படவும்.  

கும்பம் 

தொழில் செய்பவர்களுக்கு நல்ல வாரமாக இருக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாவதால், இதுவரை நினைத்துவந்தது சரியா என்ற கேள்விகள் எழும்பும். மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு ஏற்படும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.  

மீனம்
பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். ஃபேஷன் தொடர்பான துறைகளில் ஆர்வம் ஏற்படும்.பயணங்களால் புதிய அனுபம் உண்டாகும். தகவல் தொடர்பை மேலும் அதிகரித்துக் கொள்ளவும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும் வாய்ப்புகள் உள்ளன  

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | எல்லா திசைகளில் இருந்தும் பணம் மழையாய் பொழிய வந்துவிட்டது உபயாச்சாரி ராஜயோகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News