CSK vs KKR: ஐபில் 2022 முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்ளும் கொல்கத்தா! நேரலை விவரங்கள்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் போட்டியை ஆன்லைனிலும் டிவியிலும் எப்போது, ​​எங்கு பார்க்கலாம்? 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 26, 2022, 09:15 AM IST
  • IPL 2022 முதல் போட்டி இன்று
  • சிஎஸ்கேவுடன் மோதும் கேகேஆர்
  • தோனி வெறும் விக்கெட் கீப்பராக களம் இறங்கும் முதல் ஐபிஎல் போட்டி
CSK vs KKR: ஐபில் 2022 முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்ளும் கொல்கத்தா! நேரலை விவரங்கள் title=

சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் லைவ் கிரிக்கெட் ஸ்ட்ரீமிங் இந்தியன் பிரீமியர் லீக் 2022 போட்டியை ஆன்லைனிலும் தொலைக்காட்சியிலும் எப்போது, ​​எங்கு பார்க்கலாம் என்ற விவரங்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள்...

கடந்த ஆண்டு இறுதிப் போட்டியின் தொடர்ச்சியாக, சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணிகள் தங்கள் புதிய கேப்டன்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தலைமையில் களம் இறங்குகின்றன.

ஐபிஎல் 2022 இன் தொடக்கப் போட்டியில் களமிறங்கி, தங்கள் இந்த ஆண்டு வெற்றிப் பயணத்தை தொடங்கவிருப்பது சி.எஸ்.கேவா? கே.கே.ஆரா? சனிக்கிழமை (2022, மார்ச் 26) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் அதை தெரிந்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | ஜடேஜாவை புகழந்து தோனியை புறக்கணித்த ரெய்னா

ஐபிஎல் 2022 தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, சி.எஸ்.கே கேப்டன் எம்.எஸ் தோனி சிஎஸ்கே கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். 

2012 ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) இன் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் நட்சத்திர ஆல்ரவுண்டர், தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவுக்குப் பிறகு சென்னையை தளமாகக் கொண்ட உரிமையை வழிநடத்தும் மூன்றாவது வீரர் ஜடேஜா என்பது குறிப்பிடத்தக்கது.

sports

ஐபிஎல் போட்டியில் தோனி, விக்கெட் கீப்பர் பேட்டராக மட்டுமே விளையாடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

சி.எஸ்.கேவின் பரபரப்பான கேப்டன்சி மாறுதலுக்கு பிறகு இன்று அந்த அணி களம் காணும் போட்டியை எப்போது, ​​​​எங்கு பார்க்க வேண்டும் என்ற விவரங்கள்:

CSK vs KKR இந்தியன் பிரீமியர் லீக் 2022 போட்டியின் நேரம்
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இந்தியன் பிரீமியர் லீக் 2022 போட்டி இந்திய நேரப்படி மாலை 7:30 மணிக்கு தொடங்குகிறது.

CSK vs KKR இந்தியன் பிரீமியர் லீக் 2022 போட்டி எங்கு நடைபெறுகிறது?
CSK vs KKR இந்தியன் பிரீமியர் லீக் 2022 போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியம்.

sports

CSK vs KKR இந்தியன் பிரீமியர் லீக் 2022 போட்டியை எந்த டிவி சேனல் ஒளிபரப்பும்?
CSK vs KKR IPL 2022 போட்டி ஸ்டார் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஒளிபரப்பு செய்கிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் வெவ்வேறு மொழிகளில் போட்டிகளை நேரலையில் பார்க்கலாம்.

CSK vs KKR இந்தியன் பிரீமியர் லீக் 2022 போட்டியை எங்கு நேரடியாக ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது?
CSK மற்றும் KKR இடையேயான இந்தியன் பிரீமியர் லீக் 2022 போட்டி டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆப்ஸ் மற்றும் இணையதளத்தில் நேரலையாக ஸ்ட்ரீம் செய்யப்படும்.

CSK vs KKR அணிகள்

sports
சென்னை சூப்பர் கிங்ஸ்: ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட், டுவைன் பிராவோ, அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா, தீபக் சாஹர், கேஎம் ஆசிப், துஷார் தேஷ்பாண்டே, கேஎம் ஆசிப், சிவம் துபே, மகேஷ் தீக்ஷனா, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், சமர்வோ ஹங்கர்கேகர், கான்வே, டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், சுப்ரான்சு சேனாபதி, ஆடம் மில்னே, முகேஷ் சவுத்ரி, பிரசாந்த் சோலங்கி, சி ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன், கிறிஸ் ஜோர்டான், கே பகத் வர்மா.

sports

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ஆண்ட்ரே ரசல், வருண் சக்ரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர், சுனில் நரைன், ஷ்ரேயாஸ் ஐயர், பாட் கம்மின்ஸ், நிதிஷ் ராணா, ஷிவம் மாவி, ஷெல்டன் ஜாக்சன், அஜிங்க்யா ரஹானே, ரிங்கு சிங், அனுகுல் ராய், ரசிக் தர்ஜித், சமிகா கருணாரத்னே, அஷ்பக் கருணாரத்னே சர்மா, பிரதம் சிங், அபிஜீத் தோமர், சாம் பில்லிங்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ், ரமேஷ் குமார், முகமது நபி, அமன் கான், உமேஷ் யாதவ்

மேலும் படிக்க |  ஐபிஎல்-ல் கடைசி ஓவரில் அதிக சிக்ஸ்சர்கள் அடித்தது இவரா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News