இந்திய அணியில் இந்த வீரரின் கேரியர் முடிந்துவிட்டது! பிசிசிஐ திடீரென எடுத்த முடிவு!

India vs Australia ODI: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. பிசிசிஐ திடீரென ஹர்ஷல் படேலை அணியில் இருந்து நீக்கியுள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 23, 2023, 10:20 AM IST
  • பிசிசிஐயின் நடவடிக்கைக்கு பிறகு இந்த வீரரின் கேரியர் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.
  • ஒருநாள் உலகக் கோப்பைக்கு கருத்தில் கொண்டு அணியில் முக்கிய மாற்றங்கள்.
  • இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் மார்ச் 17 முதல் தொடங்கும்.
இந்திய அணியில் இந்த வீரரின் கேரியர் முடிந்துவிட்டது! பிசிசிஐ திடீரென எடுத்த முடிவு! title=

கிரிக்கெட் செய்திகள்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே மார்ச் 17 முதல் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரில் திடீரென ஒரு வீரர் புறக்கணிக்கப்பட்டு உள்ளார். இந்திய அணியின் இந்த வீரரின் கேரியர் தற்போது முடிந்துவிட்டதாக கருதப்படுகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. 

இதற்கிடையில் வரவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு கருத்தில் கொண்டு, இந்த அணியில் பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பிசிசிஐயின் சில முக்கியமான முடிவுகளுக்குப் பிறகு, சில வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். அதே சமயம் சில புதிய முகங்களும் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். ஆனால் பிசிசிஐயின் இந்த நடவடிக்கைக்கு பிறகு இந்த வீரரின் கேரியர் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக தெரிகிறது. பிசிசிஐ திடீரென இந்த வீரரை அணியில் இருந்து நீக்கியுள்ளது. வரும் நாட்களில், இந்த வீரருக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை தவிர அவருக்கு வேற வாய்ப்பில்லை. 

இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேலை பிசிசிஐ திடீரென நிறுத்தியுள்ளது. கடந்த மாதம் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஹர்ஷல் படேலுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை, தற்போது இந்த வீரரும் மார்ச் 17 முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சேர்க்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. . இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணியில் ஹர்ஷல் படேலுக்கு வாய்ப்பு இல்லை என்று தேர்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஹர்ஷல் படேல் இதுவரை டீம் இந்தியாவுக்காக 25 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார், அதில் இந்த வேகப்பந்து வீச்சாளர் 29 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார்.

மேலும் படிக்க: IND vs AUS: 3ஆவது டெஸ்டில் ராகுல் கிடையாது - வேறு கணக்கு போடும் பிசிசிஐ!

32 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேலின் பந்து வீச்சு பெரிதாக எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த வேகப்பந்து வீச்சாளர் மீண்டும் டீம் இந்தியாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவிப்பார் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் இப்போது முகமது சிராஜ், உம்ரான் மாலிக், ஷர்துல் தாக்கூர் மற்றும் சிவம் மாவி போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

முகமது சிராஜ், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி மற்றும் ஷர்துல் தாக்கூர் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் தற்போது இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், தற்போது 32 வயதாகும் ஹர்ஷல் படேலுக்கு எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைக்காது. ஹர்ஷல் படேலுக்கு ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை வாய்ப்பு கிடைக்காவிட்டால், அவர் கட்டாயத்தின் பேரில் ஓய்வு பெற நேரிடலாம். 

ஹர்ஷல் படேல் கடைசியாக விளையாடிய 8 டி20 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். அதே நேரத்தில், ஹர்ஷல் படேல் தனது கடைசி 12 டி20 சர்வதேச போட்டிகளில் 5 முறை 40 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். 

மேலும் படிக்க: நான் நிச்சயம் இந்த ஆண்டு விளையாடுவேன்! அப்டேட் கொடுத்த சிஎஸ்கே வீரர்!

ஒருநாள் இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, முகமது ஷமி முகமது சிராஜ், உம்ரான் மாலிக், ஷர்துல் தாக்கூர், அக்ஷர் படேல், ஜெய்தேவ் உனத்கட்

இந்தியா vs ஆஸ்திரேலியா ஒரு நாள் தொடர் விவரம்:

முதல் ஒருநாள் போட்டி, மார்ச் 17, மதியம் 1.30, மும்பை

இரண்டாவது ஒருநாள் போட்டி, மார்ச் 19, மதியம் 1.30 மணி, விசாகப்பட்டினம்

மூன்றாவது ஒருநாள் போட்டி, மார்ச் 22, மதியம் 1.30, சென்னை

மேலும் படிக்க: IPL 2023: முக்கிய வீரர் மீண்டும் காயம்! சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News