நீண்ட நாள் காத்திருப்பு! ஐபிஎல் 2024 அட்டவணை வெளியானது.. ஆரம்பமே நாம தான்.. CSK vs RCB

List Of IPL 2024 Schedule: பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு முதல் 21 போட்டிகளுக்கான ஐபிஎல் 2024 தொடருக்கான அட்டவணை மட்டுமே தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அதன் முழு அட்டவணை குறித்து பார்ப்போம். முதல் போட்டியில் சென்னை, பெங்களுரு மோதுகின்றன.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 22, 2024, 06:55 PM IST
நீண்ட நாள் காத்திருப்பு! ஐபிஎல் 2024 அட்டவணை வெளியானது.. ஆரம்பமே நாம தான்.. CSK vs RCB title=

Indian Premier League 2024 Schedule: ஐபிஎல் 2024 அட்டவணை வெளியிடப்பட்டது. இந்த சீசனில் முதல் போட்டியில் சென்னை (சிஎஸ்கே) மற்றும் பெங்களூர் (ஆர்சிபி) மொத உள்ளன. அதுவும் அந்தபோட்டி சென்னையில் நடைபெறவுள்ளதால், சிஎஸ்கே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருகின்றனர் தல தோனியை காண. 

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடருக்கான அட்டவணை இன்று (பிப்ரவரி 22) வெளியானது. ஐபிஎல் அட்டவணை. அதன் முழு விவரத்தையும் அறிந்துக் கொள்ளுங்கள். 

ஐபிஎல் 2024 தொடருக்கான அட்டவணை: 

ஐபிஎல் தொடரின் முதல் போட்டி மகேந்திர சிங் தோனியின் (எம்எஸ் தோனி) சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது. பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு, முதல் 21 போட்டிகான அட்டவணை (மார்ச் 22 முதல் ஏப்ரல் 7 வரை) மட்டும் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

ஐபிஎல் 2024 இன் தொடக்க ஆட்டம் மார்ச் 22 அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. ஐபிஎல் இறுதிப் போட்டி மே 26 ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளது. ஐபிஎல் 2024 சீசன் ஐபிஎல் 2023 சீசனைப் போலவே இருக்கும்.

இதில் 74 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், கடந்த ஆண்டு 60 நாட்களுக்குப் பதிலாக இம்முறை 67 நாட்கள் போட்டிகள் நடைபெறவுள்ளன. பொதுத் தேர்தல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்ற போது, ​​இதேபோன்ற அணுகுமுறை பின்பற்றப்பட்டது, அப்போதும் ஐபிஎல் அட்டவணை இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டது.

மேலும் படிக்க - தல தோனி சென்னைக்கு திரும்புவது உறுதி! ஐபிஎல் 2024 தொடக்க போட்டியில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

மீதமுள்ள அட்டவணை எப்போது அறிவிக்கப்படும்?

ஏற்கனவே ஐபிஎல் தலைவர் அருண் துமால், 'மார்ச் 22 முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என்று கூறியிருந்தார். மேலும் ஐபிஎல் அட்டவணை இரண்டு பகுதிகளாக வரும் என்றும், முதலாவதாக, ஐபிஎல் முதல் கட்ட அட்டவணை அறிவிக்கப்படும், பின்னர் பொதுத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு, ஐபிஎல்லின் இரண்டாவது அட்டவணை அறிவிக்கப்படும் என்றார்.

மேலும் படிக்க - IPL 2024: சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு! முக்கிய வீரர் மீண்டும் காயம்!

இதுவரை ஐபிஎல் சீசனில் வெற்றி பெற்ற அணிகளின் விவரங்கள்

ஐபிஎல் 2008: ராஜஸ்தான் ராயல்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஐபிஎல் 2009: டெக்கான் சார்ஜர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஐபிஎல் 2010: சென்னை சூப்பர் கிங்ஸ் 22 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வென்றது.

ஐபிஎல் 2011: சென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஐபிஎல் 2012: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஐபிஎல் 2013: மும்பை இந்தியன்ஸ் 23 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வென்றது.

ஐபிஎல் 2014: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பஞ்சாப் கிங்ஸை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஐபிஎல் 2015: மும்பை இந்தியன்ஸ் 41 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வென்றது.

ஐபிஎல் 2016: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஐபிஎல் 2017: மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியை வென்றது.

ஐபிஎல் 2018: சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வென்றது.

ஐபிஎல் 2019: மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வென்றது.

ஐபிஎல் 2020: மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸை வென்றது.

ஐபிஎல் 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸை 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வென்றது.

ஐபிஎல் 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வென்றது.

மேலும் படிக்க - சென்னை சூப்பர் கிங்ஸ் 13வது முறையாக இதனை நிச்சயம் செய்யும்: சுனில் கவாஸ்கர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News