பாஸ்பாலை கைவிட்ட இங்கிலாந்து...? பும்ரா இல்லாமல் ஜோ ரூட் சதம் - இன்று நடந்தது என்ன?

IND vs ENG 4th Test: ராஞ்சியில் நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்களை எடுத்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Feb 23, 2024, 06:10 PM IST
  • ஆகாஷ் தீப் இங்கிலாந்தின் டாப் பேட்டர்களின் விக்கெட்டை கைப்பற்றினார்.
  • ஆகாஷ் தீப் 3, சிராஜ் 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
  • ஜோ ரூட் இந்த தொடரில் முதல் சதத்தை பதிவு செய்தார்.
பாஸ்பாலை கைவிட்ட இங்கிலாந்து...? பும்ரா இல்லாமல் ஜோ ரூட் சதம் - இன்று நடந்தது என்ன? title=

IND vs ENG 4th Test: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் வென்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றும், மறுபுறம் இங்கிலாந்து வென்றால் தொடரின் வெற்றியை தரம்சாலாவில் நடைபெறும் 5ஆவது போட்டிதான் தீர்மானிக்கும்.  

அந்த வகையில், முக்கியத்துவம் வாய்ந்த இந்த நான்காவது போட்டியில் இந்திய அணி ஒரே ஒரு மாற்றத்தை செய்தது. பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டு, ஆகாஷ் தீப் அறிமுகம் செய்யப்பட்டார். இங்கிலாந்து அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆல்-ரவுண்டர் ரெஹான் அகமது நாடு திரும்பும் நிலையில் அவருக்கு பதில் சோயப் பஷீர் மீண்டும் அணிக்குள் அழைக்கப்பட்டார். மார்க் வுட்டுக்கு பதில் ஒல்லி ராபின்சன் அணியில் இடம்பெற்றார். 

டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங்

முதல் போட்டியில் டாஸையும் வென்று போட்டியும் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் டாஸையும் தோற்று, போட்டிகளையும் கோட்டைவிட்டார். அந்தளவிற்கு டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் சூழலில், இந்த முக்கிய போட்டியின் டாஸை இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். 

மேலும் படிக்க | 'சேப்பாக்கம் இப்போது சிஎஸ்கேவின் கோட்டை இல்லை...' முன்னாள் சென்னை வீரர் - காரணம் என்ன?

சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோர் ஓப்பனிங் ஸ்பெல்லை தொடங்கினர். சிராஜ் சற்று அங்கிங்குமாக வீச, ஆகாஷ் தீப் ஒரே லைன் மற்றும் லெந்தில் தொடர்ந்து வீசி வந்தார். ஒரு கட்டத்தில் ஸாக் கிராலியின் ஆப் ஸ்டம்ப் பறக்க ஆகாஷ் தீப் அவரை போல்டாக்கினார். ஆனால், துரதிருஷ்டவமாக அது நோ-பால் ஆனது. இருப்பினும், ஆகாஷ் தீப் விடாமல் முயற்சித்தார். சிராஜின் 4ஆவது ஓவரில் கிராலி 3 பவுண்டரிகள், 1 சிக்ஸர்களை பறக்கவிட மொத்தம் 19 ரன்கள் குவிக்கப்பட்டது. 

ஆகாஷ் தீப் அதிரடி

இருப்பினும், 10ஆவது ஓவரில் இந்திய அணிக்கும், ஆகாஷ் தீப்பிற்கும் பெரிய கொண்டாட்டமான தருணங்கள் அமைந்தன. வழக்கத்திற்கு மாறாக பொறுமை காட்டிய பென் டக்கெட் 11 ரன்னிலும், துணை கேப்டன் ஒல்லி போப் டக்அவுட்டிலும் அதே ஓவரில் பெவிலியன் திரும்பினர். அடுத்த 12ஆவது ஓவரிலேயே ஸாக் கிராலியும் ஆகாஷ் தீப்பிடம் மீண்டும் போல்டாகி, இம்முறை நடையை கட்டினார். அவர் 42 ரன்களை குவித்தார். 

அடுத்து சுழற்பந்துவீச்சிலும், வேகப்பந்துவீச்சிலும் ஜானி பேர்ஸ்டோவ் அதிரடி காட்ட, ஜோ ரூட் பாஸ்பால் ரூட்டை விட்டுவிட்டு தனது பழையை பாணியை இன்று கையில் எடுத்தார். அஸ்வினின் ஓவரிலும் பவுண்டரிகளை பறக்கவிட்ட பேர்ஸ்டோவ், அவரின் 2ஆவது ஓவரில் ஸ்வீப் அடிக்க முயன்று எல்பிடபிள்யூ முறையில் வீழ்ந்தார். அவர் 38 ரன்களில் நடையைக்கட்ட அடுத்து வந்த ஸ்டோக்ஸ் ஜடேஜாவிடம் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாகி 3 ரன்களில் வெளியேறினார். உடனே உணவு இடைவெளி விடப்பட்டது. 

நங்கூரமாக நின்று ஜோ ரூட்

உணவு இடைவெளிக்கு முன்னர் வரை 24.1 ஓவர்களில் 112 ரன்களை குவித்து 5 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்திருந்தது. ஆனால், இரண்டாவது இன்னிங்ஸை ஜோ ரூட், பென் ஃபோக்ஸ் அற்புதமாக விளையாடி விக்கெட்டை கொடுக்கவே இல்லை. தேநீர் இடைவெளிக்கு முன்னர் வரை, இங்கிலாந்து 198 ரன்களுக்கு அதே 5 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருந்தது. அந்த செஷனில் 86 ரன்கள் எடுக்கப்பட்டது. ஜோ ரூட் அரைசதம் கடந்திருந்தார். 

மூன்றாவது இன்னிங்ஸிலும் அதே பார்ட்னர்ஷிப்பை தொடர்ந்தாலும், சிராஜ் ஃபோக்ஸின் விக்கெட்டை எடுத்து 47 ரன்களில் வெளியேற்றினார். 26 பந்துகள் தாக்குபிடித்த டாம் ஹார்ட்லி 13 ரன்களில் சிராஜிடம் வீழ்ந்தார். இதன்பின், ரூட் உடன் ஒல்லி ராபின் இணைந்து ரன்களை சேர்த்தார். இந்த இணை கடைசி வரை அவுட்டாகவே இல்லை. ரூட் சதம் அடித்து மிரட்டினார். பும்ரா இல்லாததாலும், பாஸ்பால் முறையில் ஷாட் ஆடாமல் தனது பழைய நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் பும்ரா சதம் அடித்தார். கடைசி ஓவரை ஜெய்ஸ்வால் வீச அதில் 6 ரன்கள் எடுக்கப்பட்டது.

முதல் நாள் முடிவில் (90 ஓவர்கள்) இங்கிலாந்து அணி 302 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜோ ரூட் 106 ரன்களுடனும், ராபின்சன் 31 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். பென் ஃபோக்ஸ் 47 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியின் பந்துவீச்சில் அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். 

மேலும் படிக்க | IPL 2024 Tickets: ஐபிஎல் டிக்கெட்டை ஆன்லைனில் புக் செய்வது எப்படி? எப்போது புக் செய்யலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News