10th Exam Result: தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

TN 10th Exam Result 2024: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8-ம் தேதி வரை  நடைபெற்றது. தற்போது திருத்தும் பணிகள் நிறைவு பெற்று முடிவுகள் வெளியாக உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 29, 2024, 12:36 PM IST
  • பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் நிறைவு பெற்றது.
  • மதிப்பெண்களை சரிபார்க்கும் பணி துவங்கியுள்ளது.
  • மே 10ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு.
10th Exam Result: தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? title=

Tamil Nadu Board exam 2024: தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு தற்போது பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. கடந்த மார்ச் 1 முதல் மார்ச் 22 வரை பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. மேலும் மார்ச் 4 முதல் மார்ச் 25 வரை பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும், மார்ச் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது.  தேர்வு முடிந்ததும் ஏப்ரல் 12ம் தேதி முதல் ஏப்ரல் 22ம் தேதி வரை திருத்தும் பணிகள் நடைபெற்று வந்தது. இதற்கென மொத்தம் 88 முகாம்களில் 50 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 

மேலும் படிக்க | அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின்

விடைத்தாள் திருத்தமும் நிறைவு பெற்று வரும் மே 6ம் தேதி அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. அதே போல பிளஸ்-1க்கு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில், 10ம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தமும் நேற்றுடன் நிறைவு பெற்றது. மாநிலம் முழுதும், 103 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்பட்டது.  மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிட்டது. இதைத்தொடர்ந்து, மதிப்பெண்களின் பட்டியல் தயாரிப்பு, மதிப்பெண் சரிபார்ப்பு, மாணவர்களின் விபரங்களுடன் கணினி வழியில் மதிப்பெண் இணைப்பு பணிகள் துவங்கியுள்ளன. எனவே, திட்டமிட்டப்படி மே 10-ஆம் தேதி தேர்வு முடிவை வெளியிட அரசு தேர்வுத்துறை தயாராகி வருகிறது.

தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது?

மாணவ, மாணவியர் தேர்வு முடிவுகளை அரசின் இணையதளமான www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரியில் பார்த்து கொள்ளலாம். மேலும் SMS மூலமாகவும் தேர்தல் முடிவுகளை அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இவை தவிர பள்ளி மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும், அனைத்து நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை கட்டணமின்றி தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைனில் முடிவுகளை சரிபார்க்க

படி 1: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

படி 2: தமிழ்நாடு ரிசல்ட் போர்ட்டலுக்கு செல்லவும்.

படி 3: SSLC/HSE பிளஸ் 2 ரிசல்ட் லிங்கை கிளிக் செய்யவும்.

படி 4: பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.

படி 5: தற்போது தேர்தல் முடிவுகளை பார்த்துக்கொள்ளலாம். 

படி 6: இதனை பள்ளிகளுக்கு நேரில் சென்று உறுதிப்படுத்தி கொள்ள முடியும்.

மேலும் படிக்க | அசுர வேகத்தில் காரை ஓட்டிய சிறுவன்! சிதறிய கடை... திக்திக் CCTV காட்சிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News