நேற்று ஒரே நாளில் இவ்வளவு தங்கம் விற்பனையா? அதிர்ச்சி ரிப்போர்ட்!

அட்ஷய திருதியை நாளான நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் டன் கணக்கில் தங்கம் விற்பனையாகியுள்ளதாக தங்க நகை விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 4, 2022, 12:35 PM IST
  • அட்ஷய திருதியை முன்னிட்டு ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 18 டன் தங்கம் விற்பனை
  • 2019ம் ஆண்டை விட 30 விழுக்காடு தங்கம் கூடுதல் விற்பனை
நேற்று ஒரே நாளில் இவ்வளவு தங்கம் விற்பனையா? அதிர்ச்சி ரிப்போர்ட்! title=

தமிழகம் முழுவதும் நேற்று அட்ஷய திருதியை நாளாக கடைப்பிடிக்கப்பட்டது.

இந்த நன்நாளில் தங்க நகை வாங்கினால் அது மேன்மேலும் பெருகும் என்ற ஐதீகம் தமிழக மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையே நேற்றைய தங்க நகைகள் விற்பனை வெளிப்படுத்துகிறது.

இது குறித்து தங்க நகை விற்பனையாளர்கள் கூறுகையில், அட்ஷய திருதியை நாளான நேற்று எதிர்பார்த்த அளவை விட கூடுதலாகவே விற்பனை இருந்ததாக தெரிவிக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் சுமார் 18 டன் தங்கம் விற்பனையாகியுள்ளதாக கூறும் தங்க நகை விற்பனையாளர்கள், இது 2019 ம் ஆண்டை விட 30 விழுக்காடு கூடுதல் விற்பனை என்கின்றனர்.

கொரோனா காரணமாக 2020, 2021ஆம் ஆண்டு விற்பனை குறைவாக இருந்த நிலையில், இந்த ஆண்டுக்கான விற்பனை அதிகரித்துள்ளது. 

சாதரணமாக மற்ற நாட்களில் தினசரி 7 முதல் 8 டன் வரையில் தங்கம் விற்பனையாகும் என்றும் வியாபரிகள் தெரிவித்துள்ளனர்.

தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 4,810 ஆக குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம், ரூ. 48 குறைந்து 38,480-க்கு விற்பனையில் உள்ளது. 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 3,940 ஆக விற்கப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க | அட்சய திருதியை: இந்த 4 வழிகளில் தங்கத்தில் முதலீடு செய்யுங்கள் 

வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று காலை நிலவரப்படி, ஒரு கிராம் வெள்ளி 67.00 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 67,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

பல்வேறு நகரங்களில் அந்தந்த பகுதிகளுக்கான வரி வகைகளைப் பொறுத்து தங்கத்தின் விலை மாறுபடுகிறது. மேலும், செய்கூலி மற்றும் சேதாரத்தின் அடிப்படையில் கடைக்கு கடை தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும்.

தேசிய அளவில் தங்கத்தின் விலை பற்றி பல ஊகங்கள் உள்ளன. எனினும், உலகெங்கிலும் உள்ள பல பொருளாதார நிபுணர்கள், தங்கத்தின் மீது நேர்மறையான அணுகுமுறையையே கொண்டுள்ளனர். அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் தங்கம் ஒரு அவுன்ஸ் 3,000-5,000 டாலராக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோரது ஆர்வத்தை இது அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க | அட்சய திருதியை 2022: தரமான தங்கம் - போலி தங்கம் கண்டுபிடிக்கும் முறை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News