செய்தியாளர் கேள்விக்கு ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் என பதிலளித்த பாஜக எல்.முருகன்!

இந்தியா-பாகிஸ்தான் போட்டியின்போது ஜெய் ஸ்ரீராம் என ரசிகர்கள் எழுப்பியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் என பதிலளித்த மத்திய தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் எல்.முருகன்.  

Written by - RK Spark | Last Updated : Oct 16, 2023, 11:07 AM IST
  • ஜெகத்ரட்சகன் வீட்டில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய்.
  • முறையாக வரி செலுத்தி இருந்தால் மக்கள் திட்டத்திற்கு செயல்படுத்தி இருக்கலாம்.
  • மத்திய தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சு.
செய்தியாளர் கேள்விக்கு ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் என பதிலளித்த பாஜக எல்.முருகன்! title=

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது ஜெய் ஸ்ரீராம் என ரசிகர்கள் எழுப்பியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் என சரணம் எழுப்பி பதிலளித்த மத்திய தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் எல்.முருகன் சனாதனத்தின் காரணமாக தான்  தேச முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள மலையை கல்வாரி மலையாக மாற்றுவோம் என சர்ச்சை பேச்சு எழுந்துள்ள நிலையில் இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னிமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மத்திய தகவல் தொழில்நுட்பம், மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு பாரமபரிப்பு துறை அமைச்சர் எல் முருகன் சாமி தரிசனம் செய்தார். இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சாமி முருகன் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தார்.

மேலும் படிக்க | அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 வழங்கக்கோரி பாஜக போராட்டம்-அண்ணாமலை அறிவிப்பு!

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல் முருகன், தமிழகத்தில் முருகனின் கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசிய போது அரசு நடவடிக்கை எடுக்காததால் தற்போது சென்னிமலையில் தமிழ் கடவுளை அவமரியாதை செய்யும் வகையில் விரும்பத்தகாத வகையில் சென்னிமலை புனித தலத்தின் பெயரை கல்வாரி மலையாக மாற்றுவோம் கருத்து எழுந்துள்ளது. இது குறித்து இந்து அமைப்பினர் போராட்டம் செய்வதற்கு முன்பே காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து இருக்கலாம் என்றும் காவல்துறையினர் உரிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காதது இது தமிழக அரசு தோல்வியை வெளிப்படுத்துகிறது என்றார். சனாதனம் ஒழிப்போம் என இன்றைய இளவரசர்கள், மன்னர்கள் பேசி வருகிறார்கள் ஆனால் சனாதனத்தின் காரணமாக தான் இந்த தேசம் முன்னேறிக் கொண்டு உள்ளது. சனாதனம் தான் வாழ்க்கை நெறிமுறைகளை கற்பித்து வருகிறது என்றார். 

முந்தைய மத்திய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் திமுக இருந்தபோது தினந்தோறும் தமிழகத்தில் மீனவர்கள் தாக்குதல் சம்பவம் இருந்த நிலையில் தமிழகத்தில் 2104ம் ஆண்டுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதில்லை,மாறாக இலங்கையில் கைது செய்யப்பட்டு உள்ள தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர் என்றார். மத்திய அரசு ஆழ்கடல் மீன்பிடியை ஊக்கப்படுத்தும் வகையில் 1கோடி 60லட்சம் ரூபாய் மதிப்புள்ள படகு மானியத்துடன் மத்திய அரசு மீனவர்களுக்கு வழங்கி வருவதாக கூறினார். மேலும் நாகை மீனவர்கள் கடற்கொள்ளையர்கள் தாக்குதல் சம்பவத்தில் கடல் பகுதியில் 12 நாட்டிகல் மைல் தூரம் வரை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தொடர்பான சம்பவத்திற்கு அந்தந்த மாநில அரசு தான் சட்ட ஒழுங்கு கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய எல் முருகன் குஜராத் மாநிலத்தில் அரசின் அமுல் பால் நிர்வாகத்தில் ஆண்டுதோறும் கிடைக்கும் லாபத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு லாபம் வழங்கப்பட்டு  வருகிறது. அதனால் விவசாயிகள் அமுல் நிறுவனத்தை நாடுகின்றனர். 

ஆனால் தமிழகத்தில் உள்ள ஆவின் நிர்வாகம் முறையைப் பயன்படுத்த மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை, பால் உற்பத்தியாளர்களுக்கு லாபம் வழங்கினால் ஆவின் நிர்வாகம் தானாகவே மேம்படும் என கருத்து தெரிவித்தார். தமிழகத்தில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை திமுக அமைச்சர் வீட்டில் சோதனை மற்றும் எம்பி ஜெகத்ரட்சகன் வீட்டில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் மேல் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது முறையாக வரி செலுத்தி இருந்தால் அந்த பணத்தை மக்கள் திட்டத்திற்கு செயல்படுத்தி இருக்கலாம் என்றும் மற்றும் எம்பி ஆ ராசா சொத்து பட்டியல் முடக்கம் போன்ற அமலாக்கத்துறை நடவடிக்கைகள் தமிழக மக்களுக்கு தான் வேதனைக்குரியது என்றும் திமுக என்றாலே ஊழல், கட்ட பஞ்சாயத்து என்ற நிலைமையில் திமுக செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள் என கூறினார். 

இதன் பின்னர் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்  போது பாகிஸ்தான் வீரர் முன்பு ஜெய் ஸ்ரீராம் என ரசிகர்கள் எழுப்பியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஒற்றை வரியில் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் என்று தொடர்ந்து ஜெய் ஸ்ரீராம் என சரணத்தை மட்டுமே எழுப்பினார். மத்திய அரசு 33 இடஒத்துக்கீடு குறித்து தெளிவாக திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி முன்பு பாராளுமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் எந்த தொகுதி எந்த சமூகத்திற்கு ஒதுக்கீடு செய்வது போன்ற சிக்கல் இருப்பதால்  அதற்கான அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  2024ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமையும் அதில் தமிழகத்தில் இருந்தும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பவர்கள் என தெரிவித்தார்.

மேலும் படிக்க | மகன் கண்முன்னே எரித்துக்கொல்லப்பட்ட கர்ப்பிணி! கணவன் வெறிச்செயல்! என்ன நடந்தது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News