7 ஆண்டுகள் முன்பு நடந்த கொலைக்கு பழி தீர்த்தோம்.. பாஜக பிரமுகர் கொலையில் திருப்பம்

நசரத்பேட்டையின்  பிரபல ரவுடியும், பாஜக பிரமுகருமான ஊராட்சி மன்ற தலைவர் பி.பி.ஜி சங்கர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 9 பேர் நீதிமன்றத்தில் சரண்டைத்துள்ளனர்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 28, 2023, 02:20 PM IST
7 ஆண்டுகள் முன்பு நடந்த கொலைக்கு பழி தீர்த்தோம்.. பாஜக பிரமுகர் கொலையில் திருப்பம் title=

ஊராட்சி மன்ற தலைவர்

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புறம் பகுதியைச் சேர்ந்தவர் பி.பி.ஜி சங்கர். பிரபல ரவுடியான இவர் மீது பதினைந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.  வளர்பிறை ஊராட்சி மன்ற தலைவராகவும், பாஜகவில்  எஸ்.சி,எஸ் டி,மாநில பொருளாளராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் காரில் சென்னையில் இருந்து சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த  அவரை நசரத்பேட்டையில்  வழி மறித்த மர்ம கும்பல், காரின் மீது நாட்டு வெடி குண்டு வீசியுள்ளனர். இதில் நிலை குலைந்த கார் சிறிது தூரத்தில் நின்றது. 

மேலும் படிக்க | பிரபல ரவுடியும், பாஜக பிரமுகருமான பி.பி.ஜி சங்கர் படுகொலை!

வெடிகுண்டு வீசி கொலை

பின்னர் காரில் இருந்து  வெளியேறிய பி.பி.ஜி சங்கர் சாலையில் ஓடியுள்ளார்.அப்போது அங்கு பதுங்கியிருந்த மற்றொரு கும்பல் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் அவரை வெட்டி கொலை செய்து தப்பி சென்றனர். மக்கள் அதிகம் கூடும் பகுதியில் சினிமா பாணியில் நடைபெற்ற இந்த கொலையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க ஐந்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் இறங்கினர்.

நீதிமன்றத்தில் பரபரப்பு வாக்குமூலம்

இதனைத் தொடர்ந்து பாஜக மாநில நிர்வாகியும், முன்னாள் ரவுடியுமான சங்கர் கொலை வழக்கில் தொடர்புடைய 9 பேர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரண்டைந்தனர். அப்போது, வார்டு கவுன்சிலரான சாந்தகுமார் என்பவர் தலைமையில் கொலை நடந்துள்ளது தெரிய வந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைக்கு பழிதீர்க்கும் வகையில் சங்கர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர். சங்கர் மீது 5 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி வழக்குகள் மற்றும் மிரட்டி பணம் பறித்த வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | 2 வருடங்களாக துப்பாக்கி ஏந்திய போலீசுடன் வாழும் விவசாயி! ஏன் தெரியுமா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News