விமான போக்குவரத்துறையில் சாதிக்க விருப்பமா...? மாணவர்களுக்கு ஜாக்பாட் வாய்ப்பு

Chennais Amirtha International Aviation College: சென்னைஸ்  அமிர்தா சர்வதேச விமானப் போக்குவரத்துக் கல்லூரியும், மலேசியாவின் University college of Aviation (UniCAM) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

Written by - Sudharsan G | Last Updated : May 17, 2024, 07:31 PM IST
  • சென்னையில் மவுண்ட் ரோட்டில் இந்த கல்லூரி செயல்படுகிறது.
  • மூன்று வருட Bsc Aviation படிப்பை அங்கு படிக்கலாம்.
  • மேலும், BBA Airline and Airport Management படிப்பை அங்கு படிக்கலாம்.
விமான போக்குவரத்துறையில் சாதிக்க விருப்பமா...? மாணவர்களுக்கு ஜாக்பாட் வாய்ப்பு title=

Chennais Amirtha International Aviation College: சென்னை நகரின் மையப்பகுதியான மவுண்ட் ரோட்டில் ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அடுத்ததாக, 40000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான உட்கட்டமைப்புடன் அற்புதமான லேப் வசதியுடன் உள்ள சென்னைஸ் அமிர்தா நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் இருந்து வந்து படிக்கும் மாணவர்களை கொண்ட உலகப் புகழ்பெற்ற விமானப் பல்கலைக்கழகமான Univeristy college of Aviation(UniCAM) உடன்  புரிந்துணர்வு ஒப்புதலை இன்று அறிவித்தது.

இன்று கையொப்பமிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MOU)கீழ், தகுதியுடைய சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானப் போக்குவரத்துக் கல்லூரி மாணவர்கள் தங்கள் மூன்று வருட Bsc Aviation மற்றும் BBA Airline and Airport Management படிப்பில் முதல் இரண்டு வருடம் சென்னையிலும் மூன்றாம் ஆண்டு படிப்பின் போது மலேசியாவில் ஆறு மாத காலம் university college of Aviation-இல் வகுப்பறைக் கல்வியும் ஆறு மாத காலம் மலேசியன் சர்வதேச விமான நிலையத்தில் பயிற்சியும் பெறுவார்கள். 

மதிப்பு கூட்டு பயிற்சிகள்

இதனுடன் மாணவர்களுக்கு ஹிந்தி மொழி பயிற்சி, Grooming, Personality development, IATA Certification, Air ticketing ஆகியவை  மதிப்பு கூட்டு பயிற்சிகளாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் படிக்கும்போது ஆர்வமுள்ள மாணவர்களுக்கு 8 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையிலான சம்பளத்துடன் பகுதி நேர வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தவறை உணர்ந்துவிட்டேன்... சவுக்கு சங்கரின் பரபரப்பு வாக்குமூலம் - முழு விவரம் இதோ!

சென்னைஸ் அமிர்தா இண்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரியின் தலைவர் ஆர்.பூமிநாதன் கூறுகையில், சென்னைஸ் அமிர்தா நிறுவனத்தின் வளர்ச்சியில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு மிக பெரிய மைல்கல் என மகிழ்ச்ச்சியுடன் தெரிவித்தார். மேலும்,"விமானக் கல்வியில் மாணவர்கள் படிக்கும் போது சர்வதேச விமான நிலையங்களில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும் முதல் கல்லூரி நிறுவனம் சென்னைஸ் அமிர்தாதான்" என்றும் கூறினார்.

மாணவர்களுக்கான பயிற்சி

University College of Aviation(UniCAM), மலேசியாவின் தலைவர் மற்றும் Asia Aviation President Prof Dr.Captain Ab Manan Bin Mansor கூறுகையில், "தான் சென்னைஸ் அமிர்தாவுடன் இணைவதில் மிகவும் மகிழிச்சியடைவதாகவும் இந்த ஒப்புதலினால் மாணவர்கள் சர்வதேச விமான நிலையத்தில் பயிற்சியடையும் வாய்ப்பினை பெறுவார்கள்" என்றார் .

கையொப்பமிடும் நிகழ்ச்சில் University College of Aviation (UniCAM), Malaysia சார்பில் Madam Salina Binti Ahmad Advisor UniCAM மற்றும் Assoc PRof Dr.Faiz Aizat Bin Ab Manan- CEO UniCAM ஆகியோருடன் சிறப்பு விருந்தினர்களாக தர்ஷல் அகாடமிகலை நிறுவனர் அரசன், ட்ரைனிங் மைண்ட்ஸ் நிறுவனர் ஜெய்நானக் சிங் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். இவர்களுடன் சென்னைஸ் அமிர்தா குழும நிறுவனங்களின் பிரமுகர்கள் கவிதா நந்தகுமார் சிஇஓ, டீன் டாக்டர். மில்டன்  உடன் இருந்தனர்.

பொறியியல், மருத்துவம் தவிர...

இன்றைய காலகட்டத்தில் பலரும் பொறியியல், மருத்துவம் மட்டுமின்றி பல்வேறு துறைகளில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள் எனலாம். பெற்றோரை தாண்டி பல்வேறு துறைகள் குறித்து அறிந்துகொள்ளவும் மாணவர்கள் முயற்சிக்கின்றனர். அந்த வகையில், பெற்றோரும் தற்போது பொறியியல், மருத்துவம் தாண்டி வேறு துறைகளில் சாதிக்கவும் மாணவர்களை ஊக்குவித்து வருகின்றனர். அதில் விமான போக்குவரத்துத் துறையில் சாதிக்கவும் பல மாணவர்கள் தயாராக உள்ளனர் என தெரிகிறது. 

மேலும் படிக்க | கனமழை எதிரொலி: தேனி மாவட்டத்திற்கு இயற்கை பேரிடர் புகார் எண் அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News