12ம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்...? வேலைவாய்ப்பை அள்ளிவீசும் ஹாஸ்பிடாலிட்டி படிப்புகள்

Chennais Amirtha Hospitality Courses: சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனம், சிங்கப்பூர் பர்மிங்காம் அகாடமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : May 18, 2024, 09:19 PM IST
  • இந்த விழா தாஜ் கிளப் ஹவுஸ் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.
  • இதில் மூன்றாண்டு படிப்பு வழங்கப்படுகிறது.
  • இதில் படித்துக்கொண்டிருக்கும் போதே வேலை கிடைக்கும் என நிறுவனம் உறுதியளிக்கிறது.
12ம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்...? வேலைவாய்ப்பை அள்ளிவீசும் ஹாஸ்பிடாலிட்டி படிப்புகள் title=

Chennais Amirtha Hospitality Courses: சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனம், சிங்கப்பூர் பர்மிங்காம் அகாடமியுடன் வெளிநாடுகளில் படிக்கும் திட்டத்தை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MOU) சென்னையில் உள்ள தாஜ் கிளப் ஹவுஸ் ஹோட்டலில் இன்று கையெழுத்திட்டது.

ஹாஸ்பிடாலிட்டி (விருந்தோம்பல்) கல்வியின்  தரத்தை உயர்த்துவற்காக ஒரு முக்கிய நடவடிக்கையாக, சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் சிங்கப்பூரின் பர்மிங்காம் அகாடமி (Birmingham Academy) ஒரு புதுமையான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முலம் மாணவர்களுக்கு இணையற்ற சர்வதேச கற்றல் அனுபவத்தை வழங்கும் என சென்னைஸ் அமிர்தா நிறுவனம் உறுதியளித்துள்ளது.  

இன்று கையொப்பமிடப்பட்ட இந்த ஒப்புந்தம், ஹாஸ்பிடாலிட்டி துறை மாணவர்களின் தனித்துவமான கல்விப் பயணத்தின் தொடக்கத்திற்கு வழிவகுக்கும் என சென்னைஸ் அமிர்தா கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த படிப்பின் பயிற்சிகளை முறைகள் குறித்தும் விளக்கியுள்ளது, அதனை இங்கு காணலாம்.

மேலும் படிக்க | கோடை காலத்திலும் சளி பிடித்து மூக்கடைப்பா... குணப்படுத்த ஈஸி இதை செய்யுங்க!

முதலாம் ஆண்டு பயிற்சி முறை

சென்னைஸ் அமிர்தா கல்வி நிறுவனம் பர்மிங்காம் அகாடமியுடன் (Birmingham Academy) செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முலம் முதலாம் ஆண்டு பயிற்சியாக (Diploma in Hospitality Managment) படிப்பை மாணவர்களுக்கு வழங்கும். இதற்கான பயிற்சி வகுப்புகள் சென்னை நகரின் மையப்பகுதியான மவுண்ட் ரோட்டில் ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அடுத்ததாக, 40000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான உட்கட்டமைப்புடன் அற்புதமான லேப் வசதியுடன் உள்ள சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் வளாகத்தில் நடத்தப்படும். 

இங்கு படிக்கும் மாணவர்களுக்கு நட்சத்திர சமையல் கலைஞர்களாலும் தொழில் வல்லுநர்களாலும் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். ஆர்வமுள்ள மாணவர்களுக்கு 8000 ரூபாய் முதல் 15000 ரூபாய் வரை சம்பளத்தில் பகுதி நேர வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என சென்னைஸ் அமிர்தா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் ஆண்டு பயிற்சி முறை

சிங்கப்பூரில் படிப்பு தொடரும், அங்கு மாணவர்கள் மதிப்பிற்குரிய பர்மிங்காம் அகாடமியில் (Birmingham Academy) விருந்தோம்பல் மேலாண்மையில் மேம்பட்ட டிப்ளோமாவில் (Advanced Diploma in Hospitality Managment) சேருவார்கள். இந்த கட்டத்தில் ஆறு மாத கல்விப் படிப்பையும், ஆறு மாத ஊதியத்துடன் கூடிய பயிற்சியையும் பெறுவார்கள் மாணவர்கள் அனுபவத்தை பெறுவதோடு மாதம் 1,500 சிங்கப்பூர் டாலரை (இந்திய மதிப்பில் சுமாராக ரூபாய் ஒரு லட்சம்) சம்பளமாக பெறுவார்கள் என சென்னைஸ் அமிர்தா கல்வி நிறுவனம் கூறியுள்ளது. 

மூன்றாம் ஆண்டு பயிற்சி முறை

மேம்பட்ட டிப்ளமோ முடித்தவுடன், மாணவர்கள் இங்கிலாந்தில் உள்ள டி மான்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகம் (De Montfort University) அல்லது ஹோட்டல் மேனேஜ்மென்ட்டில் உலகில் இரண்டாவது சிறந்த தரவரிசையில் உள்ள சுவிஸ் ஹோட்டல் மேனேஜ்மென்ட் ஸ்கூலில்  (The Swiss Hotel Management School,) பட்டப்படிப்பைத் (Degree) தொடர விருப்பம் தெரிவிக்கலாம். இங்கிலாந்தில் மாணவர்கள் வாரத்திற்கு 20 மணிநேரம் வரை வேலை செய்யலாம். மாதத்திற்கு 2,000 ஐரோப்பிய டாலர் (இந்திய மதிப்பில் ரூபாய் ரெண்டு லட்சத்திற்கும் மேல்) வரை சம்பாதிக்கலாம் என சென்னைஸ் அமிர்தா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னைஸ் அமிர்தா குழும நிறுவனங்களின் தலைவர் பூமிநாதன் பேசுகையில்,"இந்த இறுதிப் படியானது, பட்டதாரிகளை உலக ஹாஸ்பிடாலிட்டி துறையில் சிறந்து விளங்கச்செய்து தகுதி வாய்ந்த நிபுணர்களாக மாற்றுகிறது. நாங்கள் ஹாஸ்பிடாலிட்டி கல்வியில் முன்னோடிகளாக இருக்கிறோம், மேலும் இந்த முயற்சியால் மாணவர்கள் வெளிநாடுகளில் படிக்கும் திட்டத்தை வழங்குவதில் முன்னோடியாக சென்னைஸ் அமிர்தா திகழும்" என்றார். 

சிங்கப்பூர் பர்மிங்காம் அகாடமியின் தலைவரான டாக்டர் Ng Joon Peng கூறுகையில்,"சென்னைஸ் அமிர்தாவுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தத் திட்டம் மூன்று நாடுகளில் உள்ள பல்வேறு உயர்தர கல்வி அனுபவங்களை வழங்குவதன் மூலம் தொழில்துறை தலைவர்களை வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது" என்றார். 

சென்னைஸ் அமிர்தா ஹாஸ்பிடாலிட்டி கல்வியில் முன்னணியில் உள்ளது, இக்கல்வி நிறுவனம் செயல் முறை கல்வித் திட்டங்கள் மூலம் திறமையான பட்டதாரிகளை உருவாக்குவதன்றி  தொழில்துறைக்கு தகுதியானவர்களை தயார் செய்கின்றது என அந்த கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது. பர்மிங்காம் அகாடமி சிங்கப்பூரில் உள்ள ஒரு புகழ்பெற்ற கல்வி நிறுவனமாகும், இது ஹாஸ்பிடாலிட்டி மேலாண்மையில் மேம்பட்ட பயிற்சி மற்றும் கல்வியை வழங்குகிறது. புதுமையான கற்பித்தல் முறைகள் மூலம் அடுத்த தலைமுறை ஹாஸ்பிடாலிட்டியில் தலைசிறந்தவர்களை வளர்ப்பதில் இது உறுதிபூண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | திமுகவுக்கு அடுத்த சிக்கல்! பூதாகரமாகும் யானை தந்தம் கடத்தல் வழக்கு - பின்னணி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News