பழனியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் முக்கிய நிர்வாகி கைது..!

பழனியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முன்னாள் மதுரை மண்டல தலைவர் முகமது கைசரை வீட்டில் இருந்து என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து அழைத்து சென்றனர்.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 9, 2023, 10:22 AM IST
  • தேசிய முகமை தமிழகத்தில் சோதனை
  • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி கைது
  • பல்வேறு இடங்களில் தொடரும் சோதனை
பழனியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் முக்கிய நிர்வாகி கைது..! title=

திண்டுக்கல் மாவட்டம் பழனி நேதாஜி நகரை சேர்ந்தவர் முகமது கைசர்(50). பழனியில் டீக்கடை நடத்திவரும் முகமதுகைசர் தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மண்டல தலைவராக உள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 15 ம் தேதி அன்று டீக்கடையில் இருந்த முகமது கைசரை என்.ஐ.ஏ என்றழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரிகள் பழனி நகர காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று மூன்று நாட்களாக விசாரணை நடத்திய நிலையில்  எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த சதாம் என்பவரிடமும் விசாரணை நடத்தினர். 

மேலும் படிக்க | தமிழகம் முழுவதும் 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை!

மேலும், பழனி சண்முகநதி அருகே உள்ள தக்வா பள்ளிவாசல் மற்றும் ஈத்கா மைதானம் ஆகிய பகுதிகளுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். டில்லியில் இருந்து வந்துள்ள 5 பேர் கொண்ட என்.ஐ.ஏ அதிகாரிகள் குழுவினர்  ஜனவரி மாதம்  விசாரணையில் தடைசெய்யபட்ட  பாப்புலர் ப்ர்ண்ட் ஆஃப் இந்தியா மதுரை மண்டல தலைவர் முகமது கைசர், கட்சியின் உறுப்பினர்கள் சதாம், ஜியாவுல்ஹக் மற்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த ஹபீப் ரகுமான் ஆகிய நால்வரிடம் ஜனவரி மாதம் விசாரணை நடத்தினர். 

இந்நிலையில், என்ஐஏ அதிகாரிகள் பழனியில் மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் முகமது கைசர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள்  இரண்டு மணி நேர சோதனைக்கு பின் முகமது கைசரை கைது செய்து சென்னைக்கு  அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த பாப்புல் பிரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் பழனியில் திரண்டனர். 

மேலும் படிக்க | ஓ பன்னீர்செல்வத்தை வெக்கங் கெட்டவர்கள் என கூறிய அதிமுக கேபி முனுசாமி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News