இப்படியுமா திருடுறாங்க! இரவில் திடீரென மாயமாகும் வாகனங்கள்.. பலே திருடன் சிக்கியது எப்படி?

Tamil Nadu Crime News: சென்னை குரோம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அசோக் லேலண்ட் நான்கு சக்கர வாகனங்களை மட்டுமே குறி வைத்து, தொடர்ந்து திருடி வந்த இருவரை குரோம்பேட்டை போலீசார் தஞ்சாவூரில் வைத்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Shiva Murugesan | Last Updated : May 2, 2023, 12:33 PM IST
இப்படியுமா திருடுறாங்க! இரவில் திடீரென மாயமாகும் வாகனங்கள்.. பலே திருடன் சிக்கியது எப்படி? title=

Crime News In Tamil: சென்னை குரோம்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில்  கடந்த சில நாட்களாக நான்கு சக்கர அசோக் லேலண்ட் லோடு வாகனத்தை சில மர்ம நபர்கள் திருடி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் அடிப்படையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடு பட்டு வந்தனர்.

குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் அசோக் லேலண்ட் வாகனத்தை ஒட்டி வருகிறார்.இவர் கடந்த மாதம் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் வருட பிறப்பு அன்று தனது அசோக் லே-லேண்டு வாகனத்தை  சாலையில் நிறுத்தி விட்டு மதிய உணவை சாப்பிட சென்றுள்ளார்.பிறகு அன்றிரவே வாகனத்தை பார்ப்பதற்கு வந்த போது தான் நிறுத்திய இடத்தில் வாகனம் இல்லாமல் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.உடனே பதறிபோய் அருகில் உள்ள குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும் படிக்க: CCTV Video: தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் திருட முயற்சி!

ஜெகதீசனின் புகாரை பெற்று கொண்டு குரோம்பேட்டை போலீசார் தனி படை அமைத்து விசாரணையை தொடங்கினர். வாகனம் திருடப்பட்ட இடமான குரோம்பேட்டை நியூ காலனி முதல் தெருவிற்கு சென்ற போலீசார் அங்குள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்ததில் வாகனத்தை திருடி சென்றவர் குரோம்பேட்டை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த 23 வயதுமிக்க இளைஞர் அருவின் என்று தெரிய வந்தது.

உடனடியாக போலீசார் அருவினின் தொலைபேசியை ட்ராக் செய்து அவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது, தான் ஒரு கார் ஏ.சி மெக்கானிக் என்றும், சென்னையில் நான் பணி புரிந்து கொண்டிருக்கும் போது தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்தை சேர்ந்த பார்வதி ராஜா என்பவருடன் நட்பு ஏற்பட்டதாகவும். பார்வதி ராஜா சென்னையில் நிறைய இடங்களில் இது போல பல வாகனங்களை திருடி தென் மாவட்டங்களுக்கு குறைந்த விலையில் வாகனத்தை விற்று வந்ததுள்ளது அருவினுக்கு தெரிய வந்ததும், இதே போல நீயும் எனக்கு வாகனங்களை திருடி கொடுத்தால் ஒரு வாகனத்திற்கு 1லட்சம் ரூபாய் வரை பணம் தருகிறேன் என்று பணத்தாசை காட்டினார் என்றும் அருவின் போலீசாரின் விசாரணையில் கூறியது போலீசாருக்கு மிகுந்த அதிர்ச்சியை  உண்டாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: வீட்டிலேயே டாஸ்மாக்... சூறையாடிய பெண்கள் - ஆறாக ஓடிய மதுபானம்; தர்மபுரியில் பரபரப்பு

எப்படி வாகனத்தை திருடுவீர்கள் என்று போலீசார் அருவினிடம் கேட்க, எங்களுடைய டார்கெட் அசோக் லேலண்ட் வாகனம் மட்டும் தான், நான் ஒரு கார் மெக்கானிக் என்பதால் எங்கெல்லாம் அசோக் லேலண்ட் வாகனம்  இருக்கிறதோ அதை போட்டோ எடுத்து பார்வதி ராஜாவுக்கு அனுப்புவேன் அவர் தூத்துக்குடியில் இருந்து அந்த வாகனத்திற்கு பொருந்தக்கூடிய போலியான மாஸ்டர் கீ ஒன்றை கொரியர் மூலமாக அனுப்பி வைப்பார். அதை நான் வாங்கி கொண்டு இரவு நேரத்தில் வாகனத்தை திருடி விட்டு நானே வாகனத்தை ஒட்டி சென்று பாரதி ராஜா இருக்கும் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வாகனத்தை ஒப்படைத்து விட்டு எனக்கான கமிசன் பணத்தை பெற்று கொண்டு சென்னைக்கு மீண்டும் வந்து விடுவேன். இதுவரை சங்கர் நகரில் ஒரு வண்டியும், சேலையூர் பகுதியில் இரண்டு வண்டியும் திருடி உள்ளதாகவும் தற்போது குரோம்பேட்டையில் திருடும் போது வசமாக போலீசாரிடம் மாட்டி கொண்டேன் என்றும் கூறினார்.

மேலும் நான் திருடிய வாகனத்தை பார்வதி ராஜா உடனடியாக ரீ பெயிண்ட் செய்தும் நம்பர் பிளேட்களை மாற்றியும் பொள்ளாச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட ஊர்களில் உள்ளவர்களுக்கு மிக குறைந்த விலையில் வாகனங்களை விற்பனை செய்து விடுவார் என்றும் போலீசார் விசாரணையில் அருவின் கூறினார்.

மேலும் படிக்க: மனைவி மீது ஆசிட் வீச்சு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

இதை தொடர்ந்து பார்வதி ராஜா தஞ்சாவூரில் இருப்பதாக அருவின் போலீசாரிடம் கூறியதும் தாம்பரம் துணை ஆணையர் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் ஸ்ரீனிவாசன் கண்காணிப்பில் குரோம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் தேவி, கதிர்வேலு, அண்ணாதுரை, காவலர்கள் செந்தில், கணேசன் மற்றும் தனிப்படை போலீசார் அனைவரும் பார்வதி ராஜாவை பிடிக்க தஞ்சாவூருக்கு விரைந்தனர்.

தஞ்சாவூரில் திடீரென போலீசாரை பார்த்த பார்வதி ராஜா ஓட்டம் பிடித்தார். சுற்றி வளைத்து பிடித்த போலீசார் அவரிடமிருந்து
ஒரு அசோக் லேலண்ட் வாகனம் மற்றும் வாகனத்தை திருட வைத்திருந்த மாஸ்டர் கீயையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் பார்வதி ராஜாவை சென்னைக்கு கூட்டி வந்து அவர் மேல் வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர். தொடர் வாகன திருட்டில் ஈடு பட்ட திருடர்களை அதிரடியாக பிடித்த குரோம்பேட்டை போலீசாரை தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலும் படிக்க: உளுந்தூர்பேட்டை: அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News