எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரிகளே இருக்கக்கூடாது - ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு!

Edappadi Palanisamy: எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரிகளே இருக்கக்கூடாது என நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் மாவட்ட கழகச் செயலாளர் சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.  

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : May 11, 2024, 11:08 AM IST
  • மீண்டும் எடப்பாடி முதலமைச்சராக வரவேண்டும்.
  • அவர் உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும்.
  • ஆலந்தூர் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு.
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரிகளே இருக்கக்கூடாது - ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு! title=

Edappadi Palanisamy: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை புறநகர் மாவட்ட கழகம் சார்பில் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் சுவாமிக்கு 32 அடி உயரத்தில் வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகளை அதிமுகவினர் மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பேசிய மாவட்ட கழகச் செயலாளர் கந்தன், எடப்பாடியாரின் பிறந்த நாளை ஆலந்தூர் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பாக கொண்டாடியுள்ளோம். மீண்டும் அவர் முதலமைச்சராக வரவேண்டும், அவர் உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிராக எடப்பாடி போராடுவது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி : கல்லூரி ஆண்டு விழாவில் பஞ்ச் டையலாக் பேசிய நடிகர் பாலா

மக்களும் அதே தான் விரும்புகிறார்கள் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். அடுத்த பிரதமர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு பெற்றவர் தான் தேர்ந்தெடுக்கப்படுவார். திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி மக்களுக்கு விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எடப்பாடிக்கு எதிரிகள் யாரும் இருக்க கூடாது என சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

அதிமுக சார்பில் மோர் பந்தல்

முன்னதாக ஒசூரில் அதிமுக சார்பில் பேருந்து நிலையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் எந்த வருடம் இல்லாத அளவிற்கு கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் அதிமுக சார்பில் பேருந்து நிலையத்தில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. ஒசூர் பேருந்து நிலையத்தில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், ஓசூர் மாநகராட்சியின் மண்டல குழு தலைவருமான ஜெயபிரகாஷ் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி அவர்கள்  கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நுங்கு, மோர், வெள்ளரிக்காய், தர்பூசணி பழச்சாறு உள்ளிட்டவை வழங்கினார். பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி தங்களது தாக்கத்தை தணித்து சென்றனர், தொடர்ந்து கோடைகாலங்களில் நாள்தோறும் வழங்கப்படும் எனவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | Tamil Nadu 10th Result 2024 Latest Updates: 10 ஆம் வகுப்பு மறுதேர்வு எப்போது? மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News