தமிழிசை பற்றி கனிமொழியிடம் விசாரித்த தூத்துக்குடி மக்கள்! பிரச்சாரத்தில் சுவாரஸ்யம்

Kanimozhi Karunanidhi Latest News : நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் வேட்பாளராக களமிறங்கியிருக்கும் கனிமொழியிடம், தமிழிசை சவுந்திரராஜன் ஏன் உங்களை எதிர்த்து இம்முறை போட்டியிடவில்லை என கேட்டனர்.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 6, 2024, 06:51 AM IST
  • கனிமொழி தூத்துக்குடியில் தீவிர பிரச்சாரம்
  • மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுக்கு ஆபத்து
  • பாஜகவை வீட்டுக்கு அனுப்ப மக்களிடம் வேண்டுகோள்
தமிழிசை பற்றி கனிமொழியிடம் விசாரித்த தூத்துக்குடி மக்கள்! பிரச்சாரத்தில் சுவாரஸ்யம் title=

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி எட்டயபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவரிடம் அங்கிருந்த மக்கள் தமிழிசை செளந்தரராஜன் ஏன் உங்களை எதிர்த்து போட்டியிடவில்லை என்று கனிமொழியிடம் மக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கனிமொழி, தமிழிசை ஆளுநராக பணியாற்றி அதை ராஜினாமா செய்து விட்டு தற்போது சென்னையில் போட்டியிட உள்ளதாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், விடியல் பயணம், காலை உணவு திட்டம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் என தினமும் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. நம்முடைய குழந்தைகள் வளர்ச்சிக்காக திட்டங்களை தருவது திராவிட மாடல் அரசு, பாஜக நமது தொடர்ந்து உரிமைகள் மற்றும் கல்வி ஆகியவற்றை பறிக்க முயற்சி செய்து வருகிறது என குற்றம் சாட்டினார். தமிழகத்திற்கு பாஜக ஒன்றிய அரசு போதிய நிதி தரவில்லை, பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி தருகின்றனர். மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க பிரதமர் நரேந்திர மோடி வரவில்லை, கேட்ட நிவாரண நிதியும் தரவில்லை என்றும் கனிமொழி குற்றம்சாட்டினார்.

மேலும் படிக்க | திமுக, பாஜக குறித்து கடுமையாக விமர்சித்த நடிகை விந்தியா

தேர்தல் வந்ததும் தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வருகிறார் என கூறினார். மேலும், நம்மை ஹிந்தி படிக்க சொல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் படிக்கவில்லை என்று வருத்தப்படுகிறார், நல்ல தமிழ் ஆசிரியரை தருகிறோம் அப்படியவது தமிழை படித்து தமிழ் மக்களின் பண்பாடுகளை பிரதமர் நரேந்திர மோடி புரிந்து கொள்ளட்டும் என கனிமொழி உரையாற்றினார். நம்ம கொண்டு வந்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கட்சி தான் அதிமுக என்றும், பெரிய ஸ்டிக்கர் ஒட்டும் கட்சி தான் பாஜக என்றும் சாடினார்.

மேலும், கனிமொழி பேசும்போது, பாஜக கொண்டு வந்த மக்கள் விரோத சட்டங்களுக்கு ஆதரவு தந்துவிட்டு தற்போது அதிமுக பிரிந்து விட்டதாக கூறுகிறது, நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுக, பாஜக இணைந்து செயல்படுவார்கள் என்று கூறினார். நாட்டை நான் தான் காப்பாற்றுவேன், நான் தான் பெரிய வீரன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார், அருணாசலப் பிரதேசம் மாநில பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சீனா பெயரை சூட்டி வருகின்றனர், இதனை கேட்டால் பிரம்மர் மோடியிடம் பதில் இல்லை என கனிமொழி கூறினார். இதுதான் அவர்கள் நாட்டை பாதுகாக்கும் நிலை, பாஜக ஆட்சியை வீட்டிக்கு அனுப்ப வேண்டும் என கனிமொழி கேட்டுக் கொண்டார். அப்பகுதியில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்ட கனிமொழி அடுத்ததாக கடலையூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது திமுக நிர்வாகிகள் கனிமொழிக்கு வீரவாள் பரிசாக வழங்கினார்.

மேலும் படிக்க | பெற்றோர் கவனத்திற்கு.... இந்த வகுப்புகளுக்கு ஏப்.12 வரை ஸ்பெஷல் கிளாஸ்... தேர்வுகள் ஒத்திவைப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News