இளைஞர் தலை சிதைத்து கொலை..! சென்னையில் பயங்கரம்!

Chennai Crime News : சென்னையில் அதிர்ச்சிகர சம்பவம் நடைப்பெற்றுள்ளது. சென்னை பாரிமுனையில், ஒரு இளைஞன் தலை சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Yuvashree | Last Updated : May 19, 2024, 02:11 PM IST
  • சென்னையில் பயங்கரம்
  • இளைஞரின் தலை சிதைத்து கொலை
  • நண்பர் கைது
 இளைஞர் தலை சிதைத்து கொலை..! சென்னையில் பயங்கரம்! title=

சென்னை கொடுங்கையூர் எம்ஜிஆர் நகர் எழில் நகர் ஆறாவது தெருவை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவருக்கு 20 வயதாகிறது. இவர் பாரிமுனையில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் மீது ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையில் ஏற்கனவே இரண்டு கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.

மது குடிக்க சென்றுள்ளார்..

ரஞ்சித் குமார், தன்னுடன் கூலி வேலை செய்யும்  ராயபுரத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரை நேற்று இரவு வீட்டிற்கு மது குடிக்க அழைத்துள்ளார். இரவு முழுவதும் இருவரும் மது அருந்தியுள்ளனர். பின்னர் இருவரும் வீட்டின் மொட்டை மாடியில் படுத்து உறங்கியுள்ளனர்.

மேலும் படிக்க | வானிலை நிலவரம்: ‘இந்த’ மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! சென்னையின் நிலை என்ன?

இன்று காலை ஐந்து மணிக்கு  எழுந்தசரவணன், உனது தங்கையை பிடித்துள்ளது. அவரை அழைத்து வா என்று கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித் குமார் வீட்டுக்கு வந்த கட்சியை எடுத்து வந்து சரவணன் சரமாரியாக வெட்டி அவரது தலையை சிதைத்து கொலை செய்தார்.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொடுங்கையூர் போலீசார் ரஞ்சித் குமாரை கைது செய்தனர்.

மேலும் படிக்க | 10 லட்சம் ரூபாய் கடனுக்கு 5 கோடி ரூபாய் சொத்தை பறிமுதல் செய்ய முயற்சி! தனியார் வங்கி மேனேஜர் மீது புகார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News