அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு! காரணம் என்ன?

Latest News K Annamalai Police Case : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான காரணம் என்ன? முழு விவரம்.  

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Yuvashree | Last Updated : Apr 23, 2024, 10:41 AM IST
  • அண்ணாமலை மீது வழக்குப்பதிவு
  • கடலூர் பெண் கொலையானது குறித்து பொய் தகவல்..
  • முழு பின்னணி என்ன?
அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு! காரணம் என்ன?  title=

Latest News K Annamalai Police Case : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது X தளத்தில் கோமதியை அடித்து கொலை செய்த திமுகவினரை கைது செய்ய வலியுறுத்தியும் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு க ஸ்டாலினுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

அந்தப் பதிவில் கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி என்பவர், தேர்தல் பதிவு நாளன்று, குடும்பத்தினர் கண்முன்னே திமுகவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும், தேர்தலில் தங்கள் கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக, திமுகவினர் இந்தப் பாதகச் செயலை செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருப்பதாகவும், இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட திமுகவினரை இன்னும் இந்த திமுக அரசு கைது செய்ததாகத் தெரியவில்லை என்றும் அவர் தனது பதிவில் கூறியிருந்தார்.

அரசியலமைப்புச் சட்டம், குடிமக்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையான வாக்களிக்கும் உரிமையைக் கூட, தங்கள் விருப்பப்படிதான் நடத்த வேண்டும் என்ற திமுகவின் சர்வாதிகாரப் போக்கு, ஜனநாயகத்துக்கு மிகுந்த ஆபத்தானது என்று எக்ஸ் தள பதிவில் கூறியிருந்த அவர், ”இந்தியாவைக் காப்பாற்றப் போவதாகக் கனவு கண்டு கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், முதலில் தனது கட்சிக்காரர்களிடம் இருந்து தமிழக மக்களைக் காப்பாற்றும் வேலையைப் பார்க்க வேண்டும். உடனடியாக, இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து, கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் படிக்க | கோவை: வாக்குப்பெட்டி வைத்திருக்கும் அறைக்கு அருகே சென்ற கார்! பரபரப்பு

இந்நிலையில் கோமதி கொலை விவகாரம் தொடர்பாக திமுகவினர் அடித்து கொலை செய்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் திமுக பிரமுகர் சுவாமி நாதன் என்பவர் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், அண்ணாமலை மீது வன்முறையை தூண்டுதல் மற்றும் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புதல் என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் படிக்க | பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News