ஆட்டோவில் நகையை தவறவிட்ட தம்பதி-போலீசாருக்கு துப்பு கொடுத்த ‘துணிவு’ படம்!

ஆட்டோவில் நகையை தவறவிட்ட கண் பார்வையற்ற தம்பதியரின் நகைகளை எடுத்து சென்ற ஆட்டோ டிரைவர் கைது.   

Written by - Yuvashree | Last Updated : Sep 6, 2023, 03:34 PM IST
  • மதுரவாயலை சேர்ந்த கண் பார்வையற்ற தம்பதி நகையை ஆட்டோவில் தவற விட்டுள்ளனர்.
  • இதனை போலீஸார் 8 மணி நேரத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
  • இதற்கு துணிவு படம் உதவியுள்ளது.
ஆட்டோவில் நகையை தவறவிட்ட தம்பதி-போலீசாருக்கு துப்பு கொடுத்த ‘துணிவு’ படம்!  title=

சென்னையை சேர்ந்த கண்பார்வையற்ற தம்பதி, ஆட்டோவில் 8 சவரன் நகையை தவறவிட்டுள்ளனர். அந்த ஆட்டோவை கண்டுபிடிக்க அஜித் குமாரின் ‘துணிவு’ திரைப்படம் உதவியுள்ளது. 

கண்பார்வையற்ற தம்பதி..

மதுரவாயல், ஜானகி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் மாரிசாமி- பவானி தம்பதியினர். கண் பார்வை குறைபாடுடைய இவர்கள் நேற்று முன் தினம் தி. நகரில் உள்ள நகைக்கடையில் சேமிப்பு திட்டத்தின் மூலம் கட்டிய பணத்திலிருந்து 5 பவுன் நகைகளை வாங்கியுள்ளனர். இதையடுத்து, மதுரவாயல் ஏரிக்கரை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து வீட்டிற்கு செல்ல ஆட்டோவில் சென்றுள்ளனர். 

வீட்டிற்கு வந்து பார்த்தபோது தான் அவர்கள் வாங்கி வந்த தங்க நகைகள் மற்றும் செல்போன் ஆகியவை இல்லாதது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அதிர்ச்சியான அவர்கள், தாங்கள் வந்த ஆட்டோவில் நகை மற்றும் செல்போனை தவற விட்டது தெரிந்து கொண்டனர். இது குறித்து மதுரவாயல் போலீசில் புகார் அளித்தனர். 

மேலும் படிக்க | ஊசி.. மாத்திரை..கஞ்சா..! விக்ரம் படம் போல நிஜ சம்பவம்! அதிர்ந்து போன மதுரை போலீஸ்!

துப்பு கொடுத்த துணிவு படம்..

மதுரவாயல் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த நிலையில் அவர்கள் வந்த ஆட்டோவில் நடிகர் அஜித்தின் ‘துணிவு’ படம் ஒட்டப்பட்டு இருந்த அடையாளத்தை வைத்து அந்த ஆட்டோவை தீவிரமாக தேடினர். இந்த நிலையில் ஆட்டோவை வாடகை எடுத்து ஓட்டி வந்த தீனதயாளன் என்பது தெரியவந்தது.

நகை மற்றும் செல்போன் ஆகியவை காணாமல் போனது குறித்து போலீசார் தீனதயாளனை பிடித்து விசாரித்துள்ளனர். கண்பார்வையற்ற தம்பதியினர் ஆட்டோவில் தவறவிட்ட நகை, செல்போன் ஆகியவற்றை அந்த நபர் எடுத்து வைத்துக்கொண்டு கொடுக்காமல் ஆட்டோவில் சவாரிக்கு சென்று வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து நகை, செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து பார்வையற்ற தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் படிக்க | சென்னையில் தொடரும் ரவுடி கொலைகள்! தொழில் போட்டியால் கொல்லப்பட்ட பிரபல ரவுடி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News