மஞ்சுமல் பாய்ஸ் எதிரொலி! வேலிகளை தாண்டி குணா குகைக்குள் செல்ல முயன்ற 3 பேர்!

Manjummel Boys Movie Guna Cave: மஞ்சுமல் படத்தை பார்த்து அதே போல குணா குகைக்குள் செல்ல முயன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Written by - RK Spark | Last Updated : Mar 12, 2024, 03:28 PM IST
  • மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் எதிரொலி.
  • குணா குகைக்குள் செல்ல முயன்ற 3 பேர்.
  • வனத்துறை கைது செய்து விசாரணை.
மஞ்சுமல் பாய்ஸ் எதிரொலி! வேலிகளை தாண்டி குணா குகைக்குள் செல்ல முயன்ற 3 பேர்!  title=

Manjummel Boys Movie Guna Cave: மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் எதிரொலி காரணமாக கொடைக்கானல் குணா குகை சுற்றுலா தளத்தில் உள்ள‌ பாதுகாப்பு வேலிகளை தாண்டி குகைக்குள் செல்ல‌ முய‌ன்ற‌ 3 இளைஞர்களை வனத்துறையினர், வ‌ன‌த்துறை அலுவ‌ல‌க‌ம் அழைத்து வ‌ந்து விசாரணை செய்து வருகின்றனர்.  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக குணா குகை சுற்றுலா தலம் உள்ளது, இந்த சுற்றுலா தலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சுமல் பாய்ஸ் என்ற மலையாளம் படம் படம்பிடிக்கப்பட்டு, கடந்த சில வாரங்களுக்கு முன்பு படம் வெளியாகி பெறும் வெற்றி பெற்றது, மேலும் இந்த திரைப்படத்தில் நண்பர்கள் ஒன்றாக இணைந்து உரிய‌ அனும‌தியின்றி குணா குகைக்குள் சென்று கண்டு ரசிக்கும் நிலையில், உடன் வந்த நண்பர் ஒருவர் குகைக்குள் தவறி விழுந்து உயிருக்கு போராடுகிறார்.

மேலும் படிக்க | பொன்முடி எம்எல்ஏவாக தொடர வாய்ப்பு... தண்டனை நிறுத்தி வைப்பு - உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்த நிலையில், உடன் வ‌ந்த‌ நண்பர் ஒருவ‌ர் குகைக்குள் இறங்கி மீட்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் வெளியான சில நாட்களாக குணா குகைக்கு சுற்றுலாப்பயணிகளின் வருகையானது அதிகரித்தே காணப்படுகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பாரத்(24) ம‌ற்றும் விஜய்(24) ஆகிய இரண்டு இளைஞர்கள் ம‌ற்றும் இராணிப்பேட்டையை சேர்ந்த ரஞ்சித் (24) உள்ளிட்ட மூவரும் குணாகுகை ப‌குதியில் அமைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ வேலியை அத்துமீறி தாண்டி சென்று புகைப்படம் எடுத்துள்ளனர். மேலும் குணாகுகை உட்புற‌ ப‌குதிக்கும் செல்ல‌ முய‌ன்றதாகவும் கூற‌ப்ப‌டுகின்ற‌து, இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் யோகேஸ் குமார் மீனா இந்த‌ப்ப‌குதியில் திடீரென‌ ரோந்து பணியில் ஈடுபட்டபோது குகைப்ப‌குதிக்குள் செல்ல‌ முய‌ன்ற‌ மூவ‌ரையும் பார்த்து அதிர்ச்சிய‌டைந்துள்ளார்.

பின்னர், அவ‌ர்க‌ளை பாதுகாப்பாக‌வும், ப‌த்திர‌மாகவும் வனத்துறை அலுவலக‌த்திற்கு அழைத்து வந்து எத‌ற்காக‌ க‌ம்பி வேலியை தாண்டி குகைப்பகுதிக்கு மூவரும் சென்ற‌ன‌ர் என‌ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குணாகுகை சுற்றுலாத‌ல‌த்தில் உள்ள‌ குகைப்ப‌குதிக்கு செல்ல‌ முய‌ல்ப‌வர்க‌ள் மீது க‌டும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌டும் என‌ வ‌ன‌த்துறையின‌ர் எச்ச‌ரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.

மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் வசூல்!

மக்களால் விரும்பப்படும் மிக சிறந்த படமாக மஞ்சும்மேல் பாய்ஸ் மாறி உள்ளது. படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒருமாதம் ஆகா போகும் நிலையில், இன்னும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்று வருகிறது. இப்படத்தில் சௌபின் ஷாஹிர், லால், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மஞ்சுமெல் பாய்ஸ் படம் மூன்றாவது வார இறுதியில் வெள்ளிக்கிழமை 5.5 கோடியும், 17ஆம் சனிக்கிழமை 8.5 கோடியும், ஞாயிற்றுக்கிழமை 8.9 கோடியும் வசூலித்தது. இதன் மூலம் இந்த படத்தின் மொத்த உள்நாட்டு நிகர வசூல் 86.4 கோடியாக உயர்ந்துள்ளது. மஞ்சுமெல் பாய்ஸ் ஏற்கனவே இந்திய பாக்ஸ் ஆபிஸில் 100 கோடியை கடந்துவிட்டது. இந்தியாவில் படத்தின் மொத்த வசூல் 18 நாட்களுக்குப் பிறகு 102.75 கோடியாக உள்ளது.

மேலும் படிக்க | மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி... மூன்று நாள் சுற்றுப்பயணம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News