தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 3, 2021, 06:27 PM IST
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் title=

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாகவும், தெலுங்கானா (Telangana) முதல் தென் தமிழகம் (South Tamilnadu) வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், இன்று மதுரை, திருச்சி, தேனி, திண்டுக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (Meteorological Department)  கூறியுள்ளது.

ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், விருதுநகர்,  பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் , ராணிப்பேட்டை,  ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் நாளை மறு நாள், அதாவது ஜூன் 5ம் தேதி அன்று, டெல்டா மாவட்டங்களிலும், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் (Meteorological Department) கூறியுள்ளது.

ALSO READ | திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பேருந்துப் பயணம்: முதல்வர் ஸ்டாலின்

மேலும், ஜூன் 6 மற்றும் 7ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளை சேர்ந்த சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தமிழகத்தின் (Tamil nadu) பிற மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இன்று குமரிக் கடல் பகுதிகள் மற்றும் இலங்கையின் தெற்கு கடலோர பகுதிகளில்,மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில்  பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஜூன் 3ம் தேதி முதல் முதல் ஜூன் 5 வரை தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவுகள் மற்றும் கேரள கடலோர பகுதிகளில், மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில்  பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கலலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில், தென் மேற்கு பருவமழை  இன்று தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | Petrol Price 3 June 2021: இன்னும் அதிகரிக்கவுள்ளன விலைகள், அரசு தலையிடுமா?

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News