மக்களுக்கு தரமான உணவு, மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்திட உத்தரவு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனுக்குடன் எடுத்திட முதலமைச்சர்  உத்தரவு

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 11, 2021, 01:25 PM IST
மக்களுக்கு தரமான உணவு, மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்திட உத்தரவு title=

தமிழக அமைச்சர்கள் மற்றும் மாவட்ட சிறப்புக் கண்காணிப்பு அலுவலர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெள்ள நிவாரண நடவடிக்கைகளைத் துரிதப்படுத்திட முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு நிவாரண நடவடிக்கைகளைக் கண்காணித்து, பணிகளைத் துரிதப்படுத்திட அந்தந்த மாவட்டத்திற்குட்பட்ட அமைச்சர்களையும் மாவட்டங்களுக்கு சிறப்புக் கண்காணிப்பு அலுவலர்களாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மாவட்டங்களில் மழை, வெள்ள நிலவரங்களைக் குறித்து கேட்டறிந்தார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனுக்குடன் எடுத்திட அறிவுறுத்தினார் முதலமைச்சர்.

ALSO READ | சென்னை பிரதான சாலையில் தொடர்ந்து ஏற்படும் ராட்சத பள்ளங்கள்: பொதுமக்கள் அச்சம்

மேலும் ஆங்காங்கே நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தரமான உணவு, மருத்துவ வசதி மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்படுவதை உறுதி செய்திடவும் உத்தரவிட்டார். 

மேலும், துறை அலுவலர்கள் பயிர் சேதங்களைத் தவிர்க்கும் வகையில், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

இதற்கு முன்னதாக இன்று (1-11-2021 தலைமைச் செயலகத்தில், மாநிலத்தில் மழை வெள்ள நிலை குறித்தும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்திட முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இன்றும் (வியாழக்கிழமை) எதிர்பார்க்கப்படும் கடுமையான மழைக்கு முன்னதாக IMD சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் வெள்ள மீட்புப் பணிகளை தொடர்ந்து தமிழக அரசு கவனித்து வருகிறது. 

ALSO READ | LIVE TN Rain Updates: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News