அண்ணன் கொலை? அம்மா - தங்கை எடுத்த விபரீத முடிவு! கண்கலங்க வைத்த சம்பவம்!

Tamil Nadu Latest News: அண்ணன் இறந்த இரண்டே மாதத்தில் தங்கையும் தாயும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை பதறவைக்கும் இந்த நிகழ்வின் பின்னணி என்ன என்பதை விரிவாக காணலாம்.

Written by - Bhuvaneshwari P S | Edited by - Sudharsan G | Last Updated : Oct 26, 2023, 01:00 PM IST
  • கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கிரி என்பவர் விபத்தில் உயிரிழந்தார்.
  • அது விபத்தில்லை திட்டமிட்ட கொலை என அவரின் தாயார் புகார் தெரிவித்துள்ளனர்.
  • ஆனால், இதில் போலீசார் முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
அண்ணன் கொலை? அம்மா - தங்கை எடுத்த விபரீத முடிவு! கண்கலங்க வைத்த சம்பவம்! title=

Tamil Nadu Latest News: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த உங்கட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிரி. இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்ற போது முதியவர் ஒருவர் மீது மோதி விபத்தில் சிக்கினார். இதில் அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சாலை விபத்தில் தலையில் காயமடைந்த கிரி கோமோவிற்கு சென்றார். தொடர் சிகிச்சையில் இருந்த அவர் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி உயிரிழந்தார்.

சோகத்தில் தாய், மகள்

இவரது இறப்பை அடுத்து தாய் காமாட்சியும், தங்கை காவ்யாவும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். கிரிக்கு நடந்த விபத்து எதார்த்தமாக நடந்தது இல்லை என்றும் அது திட்டமிட்டு நடத்தப்பட்டது என்றும் அவரது தங்கையும், தாயும் போலீஸில் புகார் அளித்தனர். கிரிக்கு ஒருவருடன் நீண்ட நாட்களாக மோதல் இருந்ததால் அந்த நபரை விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். அதோடு விபத்து நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். அதோடு இந்த புகார் தொடர்பாக தொடர்ந்து காவல்நிலையத்துக்கு சென்று வந்துள்ளனர். அப்படித்தான் நேற்றும் இவர்கள் சூளகிரி காவல் ஆய்வாளரை சந்தித்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் படிக்க | Thanjavur News: திருமணமான புதுப்பெண் மர்ம மரணம்! கணவன் அடித்து துன்புறுத்தினாரா?

தற்கொலைக்கு காரணம் என்ன?

வீட்டிற்கு வந்த காமாட்சியும், காவ்யாவும் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கிரி இறப்பிற்கு காரணம் தெரியவில்லை என்றும், புகார் அளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர்கள் உறவினர்களிடம் புலம்பியுள்ளனர். அதோடு தங்கள் இறப்பை அடுத்தாவது போலீசார் கிரிக்கு நடந்த விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலா என விசாரிப்பார்கள் என்று அவர்கள் நம்பியதாக கூறப்படுகிறது. 

தாய், மகள் தற்கொலையை அடுத்து போலிசாரின் அலட்சியம் தான் இவர்கள் மரணத்துக்கு காரணம் எனக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து பாகலூர் காவல் ஆய்வாளர் சரவணன், ஒசூர் டிஎஸ்பி பாபு பிரசாந்த் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் இருவரது உடலையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உறவினர்கள் அனுமதிக்கவில்லை.

போலீசார் மீது நடவடிக்கை

பின்னர் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூர் நேரில் வந்து, இந்த வழக்கில் போலிசார் கவன குறைவாக செயல்பட்டிருந்தால் ஒரே நாளில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன் பின்னர், இரு சடலங்களையும் ஆம்புலன்சில் ஏற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 

அண்ணன் மீதான பாசத்தால் தங்கையும், மகன் மீதான பாசத்தால் தாயும் அவர் இறந்த ஒன்றை மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காண்போரை கண்கலங்க செய்துள்ளது. ஒருவேளை போலீசார் கிரியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தாயும், தங்கையும் புகார் அளித்த போது உரிய விசாரணை நடத்தி இருந்தால் இந்த இரு உயிர்களையும் காப்பாற்றி இருக்கலாம் என உறவினர்கள் புலம்பி வருகின்றனர்.

(தற்கொலை எதற்கும் முடிவல்ல: தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், சினேகா அமைப்பின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம்.)

மேலும் படிக்க | மணல் திருடி வந்த கும்பலை பிடித்த அதிகாரிகள்!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News