மோடியை எதிர்க்கும் துணிவு யாருக்கும் இல்லை - அண்ணாமலை பேச்சு!

மூன்றாவது முறையாக மோடியை பிரதமராக்க வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர். மோடியை எதிர்க்கும் துணிவு எந்த அரசியல் தலைவர்களுக்கும் இல்லை என்று அண்ணாமலை பேசி உள்ளார்.  

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Feb 24, 2024, 10:03 AM IST
  • மூன்றாவது முறையாக மோடியை பிரதமராவார்.
  • எதிரணியினர் தெறித்து ஓடுகின்றனர்.
  • மோடியை எதிர்க்கும் துணிவு யாருக்கும் இல்லை.
மோடியை எதிர்க்கும் துணிவு யாருக்கும் இல்லை - அண்ணாமலை பேச்சு! title=

இந்தியா முழுவதும் மோடியின் புகழ் பட்டி தொட்டி எல்லாம் பரவி இருக்கிறது, இந்திய அரசியல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு தேர்தல் மோடிதான் வெற்றிபெற போகின்றார். 2024 என்பதற்காக நடத்தகூடிய தேர்தல் எதிர் அணியினர் பிச்சி ஓடிகொண்டு இருகின்றனர், கனிமவள கொள்ளையை தடுத்து இயற்கை வளங்களை பாதுகாத்து பசுமை பூமியாக மாற்ற பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் அண்ணாமலை சங்கரன்கோவில் பொதுக்கூட்டத்தில் பேசி உள்ளார். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நேற்று மாலை நடைபெற்றது. 

மேலும் படிக்க | ஆளும் திமுக அரசின் குறைகளையும் ஊழல்களையும் அம்பலப்படுத்தும் என் மண் என் மக்கள் யாத்திரை!

சங்கரன்கோவில் பயணியர் விடுதி முன்பு தொடங்கிய யாத்திரை மெயின் ரோடு வழியாக நகைக்கடை பஜார், கீழரத வீதி, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி வழியாக வந்து வடக்கு ரத வீதியில் முடிவடைந்தது பின்னர் அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது, வருகிற 27-ம் தேதி பல்லடத்தில் நடைபெறும் யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். 2024-ல் மிகப்பெரிய புரட்சிக்கு மக்கள் தயாராகிக்கொண்டு உள்ளனர். இந்தியா முழுவதும் மோடியின் புகழ் பரவியுள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக அரசு உள்ள பகுதிகள் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று வருகிறது. 

மூன்றாவது முறையாக மோடியை பிரதமராக்க வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர். எதிரணியினர் தெறித்து ஓடுகின்றனர், மோடியை எதிர்க்கும் துணிவு எந்த அரசியல் தலைவர்களுக்கும் இல்லை.  மோடிக்கு எதிராக எந்த ஆயுதமும் வேலை செய்ய முடியவில்லை. தென்காசியில் வளர்ச்சியை கொண்டுவர வேண்டும். தொழிற்சாலைகளை கொண்டுவர வேண்டும் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா வந்த பின்னர் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை, ஆனால் அவருக்கு ஏராளமான வளர்ச்சிகள் வந்துள்ளது. ஒரு ரவுடி போல் எம்எல்ஏ ராஜா செயல்படுகிறார். தென்காசி எம்பியாலும் எந்த வேலையும் நடக்கவில்லை. மாநில அரசும் சரியில்லை. 

எனவே நீங்கள் மோடியை நம்ப வேண்டிய காலம் இது. கோபாலபுர குடும்பம் தமிழக சொத்தெல்லாம் தனது சொத்தாக பார்க்கிறது எனவே மோடியை நம்ம வேண்டிய நேரம் ஆகவே தென்காசி மாவட்ட மக்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.   இந்த பொதுக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பின் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி, முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா, யாத்திரை பொறுப்பாளர் நரேந்திரன், இணை பொறுப்பாளர் அமர் பிரசாத் ரெட்டி, தென்காசி மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா, மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார் உள்ளிட்ட ஆயிரகணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க | அதிமுக துரோகிக்கு சிறை தண்டனை - எடப்பாடி பழனிசாமி அதிரடி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News