பணித்திறனாய்வு போட்டியில் வெற்றிப்பெற்ற காவலர்களுக்கு பரிசு தொகை!

இந்திய காவல் பணித்திறனாய்வுப் போட்டியில் வெற்றிப்பெற்ற காவலர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பரிசுத் தொகை வழக்கி பாராட்டினார்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 6, 2018, 04:59 PM IST
பணித்திறனாய்வு போட்டியில் வெற்றிப்பெற்ற காவலர்களுக்கு பரிசு தொகை! title=

இந்திய காவல் பணித்திறனாய்வுப் போட்டியில் வெற்றிப்பெற்ற காவலர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பரிசுத் தொகை வழக்கி பாராட்டினார்!

கடந்த 2015-ஆம் ஆண்டு ஹரியானாவில் நடைப்பெற்ற 59-வது அகில இந்திய காவல் பணித்திறனாய்வுப் போட்டியில் வென்ற காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 79,00,000 ரூபாய் பரிசுத் தொகை வழக்கி பாராட்டினார்.

இந்தப் போட்டிகளில் தமிழக காவல்துறை அணி 7 தங்கம் மற்றும் 4 வெள்ளிப் பதக்கங்கள் என மொத்தம் 16 பதக்கங்கள் வென்றுள்ளனர்.

இதில் தங்கம் வென்றவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வெண்கலப் பதக்ககம் வென்றவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் ரூபாய் முதலமைச்சர் அவர்கள் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல பிரிவுகளிலும் வெற்றிப் பெற்ற காவலர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டதாகவும் தமிழக அரசுக்குறிப்பில் குறிப்பிடப்பட்டள்ளது!

Trending News