சோலாப்பூரியில் நெளிந்த புழுக்கள்; வசந்த பவன் கொடுத்த அதிர்ச்சி!

சென்னை அண்ணா நகர் VR மாலில் செயல்பட்டு வரும்  நம்ம வீடு வசந்த பவன் ஹோட்டலில் வாடிக்கையாளர் ஆர்டர் செய்த  சோலாப்பூரியில் உயிருடன் நெளிந்து சென்ற புழுக்களால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 16, 2022, 03:22 PM IST
  • நம்ம வீடு வசந்த பவன் ஹோட்டலில் வாடிக்கையாளர் ஆர்டர் செய்த சோலாப்பூரியில் உயிருடன் நெளிந்து சென்ற புழுக்கள்.
  • பூரிக்கு தயார் செய்துவைத்திருந்த பூரி மாவிலும் துர்நாற்றத்துடன் உயிருடன் புழுக்கள்
  • சென்னை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி அபராதம் வசூலித்தனர்.
சோலாப்பூரியில் நெளிந்த புழுக்கள்; வசந்த பவன் கொடுத்த அதிர்ச்சி! title=

சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராணி என்பவர் நேற்றிரவு தன் மகனுடன் சென்னை திருமங்கலத்தில் செயல்படக்கூடிய அண்ணா நகர் VR மாலில் நேற்று இரவு உணவு உண்ண மூன்றாம் தளத்தில் செயல்பட்டு வரும் நம்ம வீடு வசந்த பவன் ஹோட்டலுக்கு சென்று  தன்னுடைய மகனுக்கு  ஆர்டர் செய்த சோலா பூரியை சாப்பிடும் போது அதில் அதிக  துர்நாற்றத்துடனும் 5 க்கும் மேற்பட்ட  புழு மற்றும் பூச்சிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக ஹோட்டலின் நிர்வாகத்தை கேட்ட பொழுது சரியான பதில் அளிக்காததால் உடனடியாக சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு தொலைபேசி மூலம், பூரியில் புழு இருந்த புகைப்படத்துடன் புகார் அளித்தனர்.

தகவல் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சுந்தரமூர்த்தி ஆய்வு செய்த பொழுது சோலாப்பூரிக்கு பிசைந்து வைத்திருந்த மாவில் அதிகப்படியான புழுக்கள் இருந்ததாகவும் மேலும் மாவு கெட்டுப் போனதில் புளித்த வாடை அடித்ததாகவும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நம்ம வீடு வசந்த பவன் உணவகத்தில் உள்ள சமையலறை முழுவதும் ஆய்வு செய்து அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் விரைவில் உணவகத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரி தெரிவித்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார்.

மேலும் படிக்க | நான் கூட "பீஃப் பிரியாணி" சாப்பிடுவேன்.. உணவு என்பது தனி மனித உரிமை -அமைச்சர் மா.சு

மேலும் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லக்கூடிய சென்னை அண்ணா நகர் வி ஆர் மாலில் உள்ள நம்ம வீடு வசந்த பவன் உணவகத்தில், அதுவும் சோலாப்பூரில் புழு இருந்தது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அந்த பகுதியில் செயல்பட உணவகங்களை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  நம்ம வீடு வசந்த பவன் ஹோட்டலில் வாடிக்கையாளர் ஆர்டர் செய்த  சோலாப்பூரியில் உயிருடன் நெளிந்து சென்ற புழுக்களால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

Zee தமிழ் நியூசிக்காக செய்தியாளர் தமிழரசன்.

மேலும் படிக்க | துறைமுக நுழைவாயிலை சரிசெய்து மீனவர்கள் இறப்புகளை தடுக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News