தேர்தல் களம் சூடுபிடிச்சாச்சு! அரசியல் கட்சிகளுக்கே ஆப்பு வைக்கும் பொதுமக்கள்!

Election Awareness Of People : வினோதமான முறையில் கோரிக்கை அடங்கிய பேனரை வைத்த ஊர் பொதுமக்கள் அரசியல் கட்சிகளுக்கு தேர்தலுக்கு முன்னதாக அதிர்ச்சியை அளித்துள்ளனர்! 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 2, 2024, 07:40 AM IST
  • தேர்தல் திருவிழா களை கட்டிவிட்டது
  • மக்களை கேள்வி கேட்க வைக்கும் தேர்தல்
  • வாக்குரிமையை உணர்ந்த விழிப்புணர்வாளர்களின் எச்சரிக்கை
தேர்தல் களம் சூடுபிடிச்சாச்சு! அரசியல் கட்சிகளுக்கே ஆப்பு வைக்கும் பொதுமக்கள்! title=

Voters Warning To Political Parties : அரசியல் கட்சிகளுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்! எனும் தலைப்பில் வினோதமான முறையில் கோரிக்கை அடங்கிய பேனரை வைத்த ஊர் பொதுமக்கள் அரசியல் கட்சிகளுக்கு தேர்தலுக்கு முன்னதாக அதிர்ச்சியை அளித்துள்ளனர். தங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் அரசியல் கட்சிகளுக்கு மட்டும் தான் வரும் தேர்தல்களில் நாங்கள் ஓட்டு போடுவோம் என்று சொல்லும் வினோதமான பேனர் இது.

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் தாலுக்கா, இலத்தேரியில் இரயில்வே கேட் பல ஆண்டுகளாக உள்ளது இந்த ரயில்வே கேட்டை கடந்து சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் அன்றாட வேலைகளுக்கும் பள்ளி கல்லூரிகளுக்கு மற்றும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றாலும் இந்த ரயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும்.

இதற்கு முன் கேட் மூடிவிட்டால் இருசக்கர வாகனங்கள் கேட்டை சுற்றி வருவார்கள் அதனால் மக்களுக்கு பெரும் சிரமம் இல்லாமல் இருந்தது இப்போது அந்த வழியையும் இருசக்கர வாகனங்கள் செல்லாதவாறு ரயில்வே துறை அதிகாரிகள் அடைத்து விட்டார்கள் கேட் மூடிவிட்டால் கேட்டை திறக்க சுமார் 1 மணிநேரம் ஆகிறது.

மேலும் படிக்க | பயணிகளின் கனிவான கவனத்திற்கு! ரயிலில் பயணிப்பவர்கள் எப்போது தூங்கக்கூடாது? தெரியுமா?

இதனால் பொதுமக்கள் குறிப்பாக பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் இவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள் இது சம்பந்தமாக ரயில்வே துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை அதனால் இந்த 20 கிராம பொதுமக்களும் ஒன்றிணைந்து பேனர் ஒன்று வைத்துள்ளனர்.

அந்த பேனரில் இதன் மூலம் தெரிவிப்பது என்னவென்றால் கேட்டிற்கு சிறிது தொலைவில் பல ஆண்டுகளுக்கு முன் இருந்த இரட்டைக்கண் பாலம் உள்ளது இப்போது தூர்ந்து பயனற்று போயிருப்பதால் அதை தூர் வாரும் அரசியல் கட்சிகளுக்கு மட்டும் தான் வரும் தேர்தல்களில் நாங்கள் ஓட்டு போடுவோம்.

மேலும் படிக்க | Paytm Payments வங்கி: பணமோசடி விவகாரத்தில் ரூ 5.49 கோடி அபராதம்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

இதை செய்ய முன்வரும் கட்சிக்கு பொதுமக்கள் ஆகிய நாங்கள் உறுதுணையாக இருப்போம் இதனை 10 நாட்களுக்குள் செய்யவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என அன்பாக எச்சரிக்கிறோம்.

வினோதமான முறையில் கோரிக்கை அடங்கிய பேனரை வைத்த ஊர் பொதுமக்களின் கோரிக்கை சர்ச்சைக்கான காரணம் அல்ல, தேர்தலில் மக்களே மகேசன் என்பதை உணர்ந்து, அதை இப்படி பொதுப்படையாக பேனர் அடித்து வெட்ட வெளிச்சமாக்கியிருப்பது தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

மேலும் படிக்க | ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: டிஏ கணக்கீட்டு சூத்திரத்தில் மாற்றம், 0% ஆகும் அகவிலைப்படி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News