இனிமையானதாக மாறிய வானிலை! இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் -வானிலை மையம் அலர்ட்

Tamil Nadu Weather Updates: அடுத்த 3 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்? தமிழ்நாடு மழை நிலவரம் குறித்து வானிலை மையம் கொடுத்த அறிவிப்பு என்ன?

Written by - Shiva Murugesan | Last Updated : May 2, 2023, 10:59 AM IST
  • இன்னும் மூன்று நாட்களுக்கு மழை தொடரும் -வானிலை ஆய்வு மையம்
  • பல மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை குறிப்பிடத்தக்க அளவில் குறையும்.
  • பல பகுதிகளில் சாலை ஓரங்களில் மழை நீர் தேங்கி இருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமம்.
இனிமையானதாக மாறிய வானிலை! இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் -வானிலை மையம் அலர்ட் title=

Rain Alert In Tamil Nadu: தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே கோடை வெயில் சுர்ரென சுட்டெரித்துக்கொண்டு இருந்த நிலையில், ஓரிரு நாட்களாக இடைவிடாத மழைக் காரணமாக தமிழக மக்களுக்கு வெப்பத்திலிருந்து சற்று ஓய்வு கிடைத்துள்ளது. மேலும் தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவி வருவதால், இன்னும் மூன்று நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் குறையும்:
நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு மே 4-ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்றும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், மே 5 ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை குறிப்பிடத்தக்க அளவில் குறையும் எனவும் அறிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை:
கோயம்புத்தூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், நாமக்கல், சேலம், ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும் படிக்க: பிடிஆர் ஆடியோ விவகாரம் குறித்து காட்டமாக பேசிய முக ஸ்டாலின்!

சாலை ஓரங்களில் மழை நீர் தேக்கம்:
தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது சில நாட்களாக மழை பெய்து வருவது சற்று ஆறுதலை அளித்திருக்கிறது. அதேநேரத்தில் பல பகுதிகளில் சாலை ஓரங்களில் மழை நீர் தேங்கி இருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

இனிமையானதாக மாறிய வானிலை:
நாடு முழுவதும் வானிலை மிகவும் இனிமையானதாக மாறி இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல், நாட்டின் பல பகுதிகளில் வெப்பம் மற்றும் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து மக்கள் நிம்மதி அடைந்தனர். கேரளா, தமிழ்நாடு, தெற்கு கர்நாடகா, வடகிழக்கு இந்தியா, மத்திய மற்றும் கிழக்கு உத்தரபிரதேசம், மேற்கு பீகார் ஆகிய பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை தொடரும் என்று ஐஎம்டி (IMD) தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது. தலைநகர் டெல்லியில் நேற்று (மே 1, திங்கள்கிழமை) பலத்த மழை பெய்தது.

சென்னை வானிலை நிலவரம்:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை!

இன்றைய வானிலை நிலவரம் (மே 2, செவ்வாய்க்கிழமை):
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

நாளை வானிலை எப்படி இருக்கும் (மே 3, புதன்கிழமை):
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

மேலும் படிக்க: 21 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News