பொங்கல் பரிசு தொகுப்பு: ரேஷன் அட்டைதாரர்களே நோட் பண்ணிக்கோங்க..!

தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கவும், அதில் என்னென்ன பொருட்கள் இடம்பெறும் என்பதும் முடிவு செய்யப்பட்டுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 2, 2024, 10:50 AM IST
  • தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகை
  • விரைவில் அறிவிக்கிறது தமிழக அரசு
  • அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் உண்டு
பொங்கல் பரிசு தொகுப்பு: ரேஷன் அட்டைதாரர்களே நோட் பண்ணிக்கோங்க..! title=

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஓரிரு நாட்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகைக்கு முன்னதாகவே ரேஷன் கடைகளில் பரிசு தொகுப்புகள் வழங்கி முடிக்கப்படும் என்று தெரிகிறது.

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு, மற்றும் பிற பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் அதே முறையில் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு தாமதமாகி உள்ளது என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | எண்ணூர் போராட்டம்... இன்னொரு ஸ்டெர்லைட் போராட்டமாக மாறிவிடக்கூடாது - சவுக்கு சங்கர்!

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ், மாதாந்திர ரூ.1,000 பண உதவி வழங்கப்படுகிறது. இந்த பணமும் பொங்கலுக்கு முன்பாகவே பயனாளர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பரிசு தொகையை உயர்த்தி வழங்கலாமா? என்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்தாலோசனை நடத்தினர். அதில் தமிழகத்தின் நிதி நெருக்கடியை கவனத்தில் கொள்ளப்பட்டது. அதனால் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பை உயர்த்தி வழங்கலாம் என்ற பரிசீலனை கைவிடப்பட்டது. இதனிடையே, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் எந்த முறைகேடும் நடைபெறக்கூடாது, டோக்கன் வழங்கும் ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்றபிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார். அடுத்தவாரம் இந்த திட்டம் தொடங்கி வைப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

மேலும் படிக்க | புத்தாண்டு கொண்டாடுபவர்களுக்கு காவல்துறையின் முக்கிய அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News