விஜய் எனக்கு உதயநிதி ஸ்டாலின் மூலம் கிடைத்த அண்ணன் - அன்பில் மகேஷ்!

Anbil Mahesh: நடிகர் விஜய்யை பொறுத்தவரைக்கும் எனக்கு, உதயநிதி ஸ்டாலின் மூலம் கிடைத்த அருமையான அண்ணன் என்று அன்பில் மகேஷ் கூறி உள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Feb 3, 2024, 01:27 PM IST
  • விஜய் எனக்கு அண்ணன் போன்றவர்.
  • உதயநிதி மூலம் எனக்கு பழக்கமானார்.
  • நேரில் சந்தித்தால் நாள் முழுக்க பேசுவார்.
விஜய் எனக்கு உதயநிதி ஸ்டாலின் மூலம் கிடைத்த அண்ணன் - அன்பில் மகேஷ்! title=

திருச்சி தேசிய கல்லூரியில் வருகின்ற 7ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ள 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் ICRS எனப்படும் பன்னாட்டு கருத்தரங்கம் தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர் பன்னாட்டு கருத்தரங்கில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சிறந்த விளையாட்டு வல்லுனர்கள் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இருந்து உடற்கல்வியியல் அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பங்கேற்று கருத்தரங்கை வழங்க உள்ளனர்.

மேலும் படிக்க | முரசொலி நில வழக்கு மீதான விசாரணை பிப்ரவரி 12ம் தேதிக்கு ஒத்தி வைப்பு!

அதில் என்னுடைய முனைவர் பட்டம் தொடர்பான ஆய்வு கட்டுரையும் சமர்ப்பிக்க உள்ளேன். மேலும் தமிழகத்தில் சிறந்து விளங்கக்கூடிய விளையாட்டு வீரர்களையும் சிறப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, கேலோ இந்தியா, செஸ் ஒலிம்பியாட் போன்று இந்த கருத்தரங்கம் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்று சிறப்பிக்கும் ஒன்றாக இருக்கும். இதனை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார் என்றார். நடிகர் விஜய்யை பொறுத்தவரைக்கும், எனக்கும், உதயநிதி ஸ்டாலின் மூலம் எங்களுக்கும் கிடைத்த அருமையான அண்ணன்.

நேரடியாக பேசும் போதும் அன்பொழுக பேசக்கூடியவர் தான். உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தது போல நானும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். திராவிடம் என்ற வார்த்தை நடிகர் விஜயின் கட்சியின் பெயரில் இல்லாதது குறித்த கேள்விக்கு, "கட்சி துவங்குவது என்பது அவரவர்களுடைய விருப்பம். கட்சியின் பெயர் வைப்பது என்பது அவர் அவர்களுடைய எண்ணம். அவர்களுடைய கொள்கை என்னவென்று தெரிய வரும் போது, அவர்களது நோக்கம் என்னவென்று தெரியவரும்" என்றார். தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். இவருக்கு சீட்டு கொடு, அவருக்கு சீட்டு கொடு, இந்த கூட்டணிக்கு சீட்டு கொடு என்று யாரும் சொல்லக்கூடாது. ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வேட்பாளரை, அனைவருக்கும் பிடித்த வேட்பாளரை நிறுத்துவோம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

நிற்பது முத்தமிழ் அறிஞர் கலைஞர் என எண்ணி செயலாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.  தொகுதி பங்கீடு குறித்து முதல்வரே முடிவெடுப்பார் என அமைச்சர் அன்பில் திட்டவட்டமாக கூறினார்.  ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டு பட்டியலில் சேர்ப்பதற்கு ஆலோசனை செய்து வருகிறோம். அதன்பிறகே மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய முடியும் என்றார்.

அண்ணா நினைவு நாள் 

தஞ்சாவூரில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு நாளை முன்னிட்டு அதிமுக கட்சி சார்பில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் உருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் மாநகர செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், பின்னர் ஒரு நிமிடம் மௌன அஞ்சலியும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் செலுத்தினர், முன்னதாக தஞ்சை சிவகங்கை பூங்காவிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு அதிமுகவினர் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்தனர், இதில் அமைப்புச் செயலாளர் காந்தி, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திருஞானம், விவசாய பிரிவு இணை செயலாளர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும்படிக்க | விஜய் தொடங்கிய கட்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள்: அமைச்சர் முத்துசாமி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News