அஜித் உங்களுக்கு வீடுகட்டி தரப்போறாரு! - துணிவாக மோசடி செய்த நபர் ; ஏமாந்த ரசிகர்

கஷ்டப்படும் ரசிகர்களுக்கு நடிகர் அஜித் வீடு கட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி, ஒருவரிடம் இருந்து 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் திருநெல்வேலியல் நடந்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 19, 2022, 10:59 PM IST
  • நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அலுவலகத்தில் பணியாற்றுபவராக ஒருவரை அறிமுகப்படுத்தியுள்ளார்.
  • அதன்மூலம், அந்த ரசிகரை நம்பவைத்து பணம் வாங்கியுள்ளார்.
அஜித் உங்களுக்கு வீடுகட்டி தரப்போறாரு! - துணிவாக மோசடி செய்த நபர் ; ஏமாந்த ரசிகர் title=

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஐயப்பன் - ராஜேஸ்வரி தம்பதியினர். ஐயப்பன் தீவிரமான அஜித் ரசிகர் என்று கூறப்படுகிறது. இதனை பயன்படுத்திக் கொண்டு திருநெல்வேலி மாவட்டம் தாளையத்து பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர், தான் அஜித் ரசிகர் மன்ற தலைவரின் மேலாளர் தனக்கு நெருக்கமானவர் என்று கூறி நம்ப வைத்துள்ளார். 

மேலும், நடிகர் அஜித் அவர்கள் கஷ்டப்படும் ரசிகர்களுக்கு மாவட்டம் வாரியாக கணக்கெடுத்து 15 லட்சம் ரூபாய் செலவில் வீடு கட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும், தனது கணவரை ஏமாற்றி விட்டதாக ராஜேஸ்வரி தனது புகார் மனுவில் குறிப்பிட்டார். 

வீடு கட்டி தருவதற்கு முதலில் பத்திரப்பதிவுக்கான தொகை ஒரு லட்சம் செலுத்த வேண்டும் என்றும் அதன் பின்பு வீடு கட்டுவதற்கான தொகை 15 லட்சமும் பத்திரப்பதிவிற்கான தொகையும் சேர்த்து உங்களின் வங்கி கணக்கிற்கு வந்துவிடும் என்று சிவா கூறியுள்ளார்.

மேலும் அவரை உறுதிபட நம்ப வைப்பதற்கும் அவரிடம் இருந்து பணத்தை பெறுவதற்கும் நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா அலுவலகத்தில் பணிபுரியும் சங்கர் என்பவரை போலியாக தயார் செய்து ஐயப்பனிடம் பேசிவைத்துள்ளார். 

மேலும் படிக்க | பதான் பிகினி சர்ச்சை : 'உங்க மகள் கூட சேர்ந்து...' ஷாருக்கிற்கு ஷாக் கொடுக்கும் பாஜக!

அதுமட்டுமல்லாமல், ஐயப்பன் பணிபுரியும் இடத்திற்கு சென்று இருபது ரூபாய் போலி பத்திரத்தில் கையெழுத்து பெற்றுக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். இதன் மூலமாக சிறிய சிறிய தொகையாக ஏறத்தாழ ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் வரை சிவாவிடம் கொடுத்து ஐயப்பன் மற்றும் ராஜேஸ்வரி தம்பதியினர் கொடுத்துள்ளனர். 

பின்னர், தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த தம்பதி, சிவாவிடம் கேட்டதற்கு இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

இந்நிலையில், தங்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிப்பதுடன் தாங்கள் அறியாமையால் இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும் என்றும் வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஐயப்பன்  மனைவி ராஜேஸ்வரி புகார் தெரிவித்துள்ளார். 

ஏழ்மை நிலையை பயன்படுத்திக் கொண்டு, நடிகர் அஜித்தின் ரசிகர் இடமே அவரது ரசிகர் மன்றம் பெயரில் ஒருவர் மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | அஜித்தை பின்பற்றும் விஜய்...? வருகிறது வாரிசு படத்தின் 3ஆவது பாடல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News