நல்ல விஷயங்கள் பற்றி பேசுவோம்! எடப்பாடி குறித்த கேள்விக்கு டிடிவி தினகரன் பதில்!

தேனி மாவட்டம் கம்பம் நகருக்கு வருகை தந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  

Written by - RK Spark | Last Updated : Apr 21, 2024, 05:12 PM IST
  • என்டிஏ கூட்டணி இந்த தேர்தலில் வெற்றி பெரும்
  • மோடி அவர்கள் மீண்டும் பிரதமராக வரவேண்டும்.
  • நல்ல வாக்கு சதவீதம் பெரும் என நம்பிக்கை உள்ளது.
நல்ல விஷயங்கள் பற்றி பேசுவோம்! எடப்பாடி குறித்த கேள்விக்கு டிடிவி தினகரன் பதில்! title=

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தேனி பாராளுமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளருமான டி டி வி தினகரன் இன்று கம்பம் நகருக்கு வருகை புரிந்தார். கம்பத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மது பால் தாயி அம்மன் கோவில் விழாவிற்கு வருகை புரிந்த அவருக்கு கம்பம் நுழைவு பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மற்றும் கூட்டணி கட்சியைச் சார்ந்தவர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்பளித்தனர். அதனைத் தொடர்ந்து கம்பம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மது பால் தாயி அம்மன் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்ட அன்னதானத்தில் கலந்துகொண்டு உணவருந்தினார். 

மேலும் படிக்க | நாடு முழுவதும் 60.03% வாக்குகள் பதிவு... 'இந்த' மாநிலம் தான் அதிகம் - இது பாஜகவுக்கு சாதகமா?

அதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஈடுபட்ட டிடிவி தினகரன் அவர்கள் பேசுகையில், தேர்தல் முடிந்த பின்பு இரண்டு நாட்களாக இங்கு தான் உள்ளேன், செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் நீங்க அமோக வெற்றி பெறுவீர்கள் என கூறுகின்றனர். நான் கருத்துக்கணிப்பெல்லாம் நடத்தவில்லை மக்கள் சொல்கிற கருத்துக்களை கேட்டுக்கொள்கிறேன். 14 ஆண்டுகளுக்குப் பின் அரசியல் ரீதியாக வந்தாலும் இடையில் சில ஆண்டுகளாக இந்த தேனி பகுதிக்குள் வந்து சென்று கொண்டுள்ளேன். தற்போது வேட்பாளராக வந்த போது மக்கள் அவரது இல்லங்களில் ஒருவராக என்னை பாவித்து உற்சாகமாக வரவேற்கின்றனர். தேனி நாடாளுமன்ற தொகுதியில் எல்லோரும் என்னை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

99 இல் நான் தேர்தலில் நின்றேன் அப்போது ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை, அதுக்கப்புறம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்டவற்றில் பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2011 பிறகு தேர்தலில் பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவியுள்ளது. நான் ஆர் கே நகர் தொகுதியில் போட்டியிட்டபோது கூட ஓட்டுக்கு நான் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சார்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் பழனிச்சாமி அப்போது போற்றுக்கு 10 ஆயிரம் 6 ஆயிரம் கொடுத்த போது பயந்து கொண்டு அவர்கள் பார்த்த இடத்தில் பத்து இருவது வீடுகளில் ஏதோ டோக்கன் கொடுத்ததாக தகவல் வந்தது. அதனை என் கவனத்திற்கு வந்தவுடன் நிறுத்தி விட்டேன். உடனே நான் டோக்கன் கொடுத்தேன் என தவறான செய்தியை கிளப்பினர்.

தற்போது இந்த தேர்தலில் இங்கு யார் பணம் கொடுத்தது என்பது உங்களுக்கு தெரியும் என பேசினார். மேலும் தேனி மக்களுக்கு நான் யார் என்பது தெரியும் 11 ஆண்டுகள் எம்பியாக இருந்தபோது மக்கள் கேட்டது அனைத்தையும் செய்துள்ளேன். எம்பி பண்டு அரசு திட்டங்கள் மட்டும் அல்லாது என்னால் முடிந்த தனிப்பட்ட முறையில் செய்துள்ளேன். கட்சி ஜாதி வித்தியாசம் இன்றி ஏழை எளிய மக்கள் என்னை நாடி வந்தவர்கள் அனைவருக்கும் என்னால் இயன்றவை செய்துள்ளேன் என கூறினார். என்னை வந்து ஒவ்வொருவரும் அவர்களது வீட்டுப் பிள்ளையாக கருதுகின்றனர். சொந்தமாக கருதி என்னை வரவேற்கின்றனர், அவர்களை அவமதிக்கும் விதமாக ஓட்டுக்கு பணம் கொடுக்க விரும்பவில்லை. அவர்கள் என்னை வெற்றியிடச் செய்த வண்டு தொடர்ந்து அவர்களுக்கான என்ன ஒரு உதவி செய்ய வேண்டுமோ அதனை செய்வேன் இங்கு நிற்கவில்லை என்றாலும் எந்த தொகுதியில் நின்றாலும் நான் அதை செய்வேன்.

என் டி ஏ கூட்டணி இந்த தேர்தலில் மோடி அவர்கள் பிரதமராக வரவேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டு மக்களும் அவருக்கு ஆதரவளிக்கும் விதமாக இந்த முறை உறுதியாக நல்ல வெற்றியை வெறும் மேலும் நல்ல வாக்கு சதவீதம் பெரும் என நம்பிக்கை உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி குறித்து கேட்டபோது கோவிலில் அமர்ந்து நல்ல விஷயம் பேசுகிறோம் பாசிட்டிவான விஷயங்கள் பேசுகிறோம் சில மனிதர்கள் வந்து எதிர்மறையானவர்கள் மனிதர்கள் அல்லாது அறக்கத்தனமான ஜென்மங்களை பற்றி இங்கு பேசுவது சரியல்ல எனக் கூறினார்.

மேலும் படிக்க | கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல்.. தமிழக கேரள எல்லைகளில் சோதனை தீவிரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News