மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் மீனவர்களை சந்திப்பு!

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று திருவனந்தபுரத்தில் மீனவர்களை சந்தித்து பேசியுள்ளார்.  

Last Updated : Dec 4, 2017, 11:54 AM IST
 மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் மீனவர்களை சந்திப்பு! title=

தென்மேற்கு பருவ மழையானது மேற்கு திசையில் 230 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி. கடந்த 5  நாட்களாக கடுமையாக புயல் சூழ்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை மழை சற்று கடுமையாக இருந்து வந்ததால் மழைக்குப் பின் தண்ணீர் தேக்கம் ஏற்பட்டு வறட்சி நீங்கி நீர்நிலைககளில் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. 

குமரி மாவட்டத்திற்கு புயல் எச்சரிக்கை வரும் முன்பே கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று விட்டனர். விழிஞ்சம், திருவனந்தபுரம்,சின்னமுட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றவர்கள் ஒக்கி புயலின் தாக்குதலில் சிக்கிக் கொண்டனர்.

இதை தொடர்ந்து, தற்போது ஒகி புயல் காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் போக்குவரத்துக்கு நெறிசல் ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். கடற்படை மற்றும் கடலோரக் காவர் படையினர் பாதிக்கபட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 952 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

கொட்டித்தீர்த்த மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.கன்னியாகுரி மற்றும் திருவனந்தபுரத்தில் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.

கன்னியாகுமரியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். 

இந்த நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று  கன்னியாகுமரிக்கு வருகை தந்தார். அவர் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில், துணை முதல் அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கு பின்னர் புயல் பாதித்த பகுதிகளை அவர் நேரில் சென்று பார்வையிட்டார்.

அதை தொடர்ந்து, தற்போது மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று திருவனந்தபுரத்தில் மீனவர்களை சந்தித்து பேசியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில்;- ஒகி புயலினால் பாதிப்படைந்த மீனவ குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி கூறியுள்ளார்.

Trending News