ஜெ., நினைவிடத்தில் கண்ணீர் மல்க சசிகலா அஞ்சலி - வீடியோ

Last Updated : Dec 30, 2016, 07:43 PM IST
ஜெ., நினைவிடத்தில் கண்ணீர் மல்க சசிகலா அஞ்சலி - வீடியோ title=

ஜெயலலிதா நினைனவிடத்தில் கண்ணீர் மல்க சசிகலா அஞ்சலி.

அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா நடராஜன் நாளை காலை கட்சி தலைமை அலுவலகத்தில் பதவி ஏற்று கொள்கிறார். இந்நிலையில் ஜெயலலிதா நினைனவிடத்தில் கண்ணீர் மல்க சசிகலா அஞ்சலி செலுத்தினார். 

முன்னாள் முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்தவர் ஜெயலலிதா. இவர் உடல் நலக்குறைவால் கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். 

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் 29-ம் தேதி நடைப்பெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த தீர்மானத்தின் நகல் சசிகலாவிடம் வழங்கப்பட்டது.

இந்தநிலையில் ஜெயலலிதா சமாதிக்கு இன்று  சென்ற சசிகலா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் எம்ஜீஆர், அண்ணா ஆகியோரது நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி செலுத்தினார். சசிகலா அஞ்சலி செலுத்தும் போது தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் தம்பிதுரை மற்றும் அமைச்சர்களும் உடன் இருந்தனர். 

 

 

Trending News