Hero Splendor: ஸ்பிளெண்டர் புது பைக்கை ஆன்லைனில் வாங்குவது எப்படி? இஎம்ஐ 2800 ரூபாய்

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்பிளெண்ட் பைக்குகளை பிளிப்கார்ட் தளத்தில் ஆன்லைனில் வாங்கலாம். வெறும் 2800 ரூபாய் இஎம்ஐ செலுத்தினால் போதும்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 29, 2024, 09:26 PM IST
  • ஸ்பிளெண்ட்ர் பைக் ஆன்லைனில் வாங்கலாம்
  • பிளிப்கார்ட் தளத்தில் இஎம்ஐ வசதி இருக்கிறது
  • 2800 ரூபாய் மாத தவணை செலுத்தினால் போதும்
Hero Splendor: ஸ்பிளெண்டர் புது பைக்கை ஆன்லைனில் வாங்குவது எப்படி? இஎம்ஐ 2800 ரூபாய் title=

உங்களுக்காக ஒரு பைக் வாங்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் Hero Splendor பைக்கை ஆன்லைனிலேயே வாங்கலாம். Flipkart தளத்திலிருந்து ஆர்டர் செய்து அதுவும் குறைந்தபட்ச EMI தவணையில் உங்களின் பைக் கனவை நனவாக்கலாம். இந்த பைக் உங்களின் சிறந்த மைலேஜ் கொடுக்கும். நீண்ட தூர பயணங்களுக்கும் ஏற்றது. இந்நிலையில், இந்த பைக்கை ஆன்லைனில் வாங்குவது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்களை பார்க்கலாம்.

Hero Splendor பிளஸ் பைக் விலை

ஹீரோ நிறுவனத்தின் இந்த பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.79,861. இவ்வளவு தொகையை உங்களால் ஒரே நேரத்தில் செலுத்த முடியவில்லை என்றால், ஈ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் மூலம் குறைந்த இஎம்ஐ தவணையில் வாங்க முடியும். அதுவும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஆர்டர் செய்து ஸ்பிளெண்ட் பிளஸ் பைக்கை வாங்கலாம். இந்த பைக்கின் மாதாந்திர EMI, ரூ.2,808 மட்டுமே செலுத்தினால் போதும். 5 வருட வாரண்டியும் இந்த பைக்கிற்கு உண்டு.

மேலும் படிக்க | இந்தியாவிலேயே முதல்முறை... குறைந்த விலையில் வருகிறது ஜியோ 5G மொபைல்கள்! 

Hero Splendor+: எஞ்சின் மற்றும் மைலேஜ்

இந்த பைக்கில் 97.2 cc இன்ஜின் இருக்கும். எலக்ட்ரிக் ஸ்டார்ட் ஆப்ஷனுடன் வரும் இந்த பைக்கின் MF பேட்டரி 12V - 3Ah ஆகும். இந்த பைக் 80 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும். நகரத்தில் ஓட்டுகிறீர்கள் என்றால் அங்கும் சராசரியாக லிட்டருக்கு மைலேஜ் 60 முதல் 65 கிலோமீட்டர்கள் கொடுக்கும்.

Hero Splendor+ மாடல்கள் விலை

ஹீரோ ஸ்பிளெண்டர் டிரம் பிரேக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.75,485. Splendor I3S ரூ.76,750, Splendor I3S Black Accent விலை ரூ.76,750 ஆகும். Splendor + I3S Matte Axis Gray விலை ரூ.78,250. உங்களுக்கு எந்த பைக் உகந்ததோ, அந்த பைக்கை வாங்கவும். இஎம்ஐ-ல் வாங்குபவர்கள் உங்களின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டில் இந்த தொகைக்கான மதிப்பு இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | குறைந்த EMI மூலம் கார் வாங்கணுமா... இந்த 5 மாடல்கள் ஈஸியாக கிடைக்கும் - முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News