டக்குனு வந்துவிட்டது 5.5ஜி... 5ஜி சேவைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

5G And 5GA Network: தற்போதுள்ள 5ஜி சேவைக்கு அடுத்து 5.5ஜி இணைய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 3, 2024, 01:28 PM IST
  • ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இந்தியாவில் 5ஜி சேவையை வழங்குகின்றன.
  • இவை வரம்பற்ற அளவில் வழங்கப்பட்டு வருகின்றன.
  • விரைவில் இதற்கு தனி கட்டணம் வசூலிக்கப்படலாம்.
டக்குனு வந்துவிட்டது 5.5ஜி... 5ஜி சேவைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?  title=

Difference Between 5G And 5GA Network: இந்தியாவில் இணைய சேவை பயன்பாடு என்பது தற்போதைய காலகட்டத்தில் மிகவும் அதிகமாகி உள்ளது எனலாம். தொழில்நுட்ப வளர்ச்சியால் ஸ்மார்ட்போன் நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பு மக்களிடம் சென்றடைந்துள்ளது. வர்க்க ரீதியிலும், சமூக ரீதியிலும் பல தரப்பு மக்களிடம் ஸ்மார்ட்போன் பெரும் தாக்கத்தை செலுத்துகிறது. 

வாட்ஸ்அப், யூ-ட்யூப் உள்ளிட்ட செயலிகளின் பயன்பாடு அதிகம் இருப்பதால், டேட்டாக்களும் மக்களால் அதிகம் செலவிடப்படுகிறது எனலாம். கடந்தாண்டு வெளியான ஒரு அறிக்கையின்படி, இந்தியர்கள் ஒரு மாதத்தில் சராசரியாக 20ஜிபி டேட்டாவை பயன்படுத்துவதாக தெரிகிறது. 2027ஆம் ஆண்டில் ஒருவர் 46ஜிபி டேட்டாவை பயன்படுத்துவார் என கணக்கிடப்படுகிறது. மேலும், வீடியோக்கள் பார்ப்பது, வீடியோக்களை உருவாக்குவது இந்தியாவில் அதிகமாகியிருப்பதால் டேட்டா பயன்பாடும் அதிகமாகியிருப்பதாக கூறப்படுகிறது. 

இந்தியாவில் 5ஜி சேவை

இந்தியாவில் தற்போது 4ஜி பலராலும் பயன்படுத்தப்பட்டாலும் 5ஜி சேவையும் அதிகமாகி வருகிறது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இந்தியாவில் தற்போது 5ஜி சேவையை வரம்பற்ற வகையில் வழங்கி வருகின்றன. 5ஜி சேவையை பயன்படுத்த 5ஜி ஸ்மார்ட்போன்களும் அதிகம் சந்தையில் வருகின்றன. அனைத்து நிறுவனங்களும் தற்போது 5ஜி சேவைக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகின்றன. மேலும், அனைத்து விலை வகையிலும் மொபைல்களை கொண்டு வருகின்றன. 

ஜியோ, ஏர்டெல் தவிர வோடபோன் இன்னும் சில நாள்களில் 5ஜியை அறிமுகப்படுத்தலாம் என தெரிகிறது. குறிப்பாக, ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் மொபைலில் மட்டுமின்றி வயர்லெஸ் தளத்திலும் இணைய சேவையை வழங்கி வருகின்றன. மேலும், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களே விரைவில் 5ஜி சேவைக்கு கட்டணம் வசூலிக்கவும் வாய்ப்பிருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | ஒரே ஒரு ரீச்சார்ஜ் செய்தால் மூன்று ஓடிடி இலவசம்! 701 ரூபாய் மட்டுமே

சீனாவில் 5.5ஜி

தற்போது 5ஜி சேவை உலகம் முழுக்க சென்றடைந்திருக்கும் சூழலில், இன்னும் சில நகரங்கள் 5ஜியை பெற காத்திருக்கின்றன. இந்நிலையில், தற்போது 5.5ஜி நெட்வோர்க் சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. சீன தொலைத்தொடர்பு நிறுவனமான China Mobile இந்த நெட்வோர்கை அறிமுகப்படுத்தியுள்ளது. 5ஜி மற்றும் 5.5ஜி ஆகிய நெட்வோர்க்கிற்கு என்ன வித்தியாசம் என்பதை இங்கு காணலாம். 

5.5ஜி சேவை என்பது 5ஜி சேவையின் அடுத்த வெற்ஷனாகும். இதனை 5ஜி-Advanced அல்லது 5GA என்றும் அழைக்கிறார்கள். அதாவது 4ஜி சேவைக்கு பிறகு 4ஜி-Advanced அல்லது 4G LTE என்பதை போல்தான் இதுவும்... இதில் இணைய வேகமும், இணைப்பும் மேம்படும் என கூறப்படுகிறது. 5ஜி மற்றும் 5.5ஜி என்பது முற்றிலும் வேறான நெட்வொர்க் இல்லை. சற்றே மேம்படுத்தப்பட்ட வெர்ஷன்தான் 5.5ஜி. 

இந்தெந்த பிரச்னைகளுக்கு தீர்வு

5.5ஜி நெட்வொர்க் 10Gbps பதிவிறக்கம் வேகமும், 1Gbps பதிவேற்ற வேகத்தை வழங்க முடியும். இது 5ஜி சேவையை விட சிறந்தது. 5ஜி நெட்வொர்க்குகளின் குறைபாடுகளை சமாளிக்க 5.5ஜி அறிமுகப்படுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு, இது 5ஜி மற்றும் 6ஜி சேவைக்கு இடையே ஒரு பாலமாக செயல்படும் என கூறப்படுகிறது. கூடுதலாக, இது நெட்வொர்க் தாமதம், நம்பகமான இணைப்பு மற்றும் பேட்டரி நுகர்வு போன்ற பிரச்னைகளை குறைக்கும் எனவும் கூறப்படுகிறது. தற்போதுதான் சீனாவுக்கு இந்த தொழில்நுட்பம் வந்துள்ளது. விரைவில் இந்தியாவிலும் வர வாய்ப்பிருக்கிறது. 

மேலும் படிக்க | ஜியோ ஸ்கெட்ச் போட்டா மிஸ் ஆகுமா? 12 ஓடிடி, 10ஜிபி டேட்டா 150 ரூபாய் அசத்தல் பிளான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News