Maruti Suzuki மின்சார கார்: எப்போது அறிமுகம்? விவரம் இதோ

மாருதி சுஸுகி ஏற்கனவே டீசல் எஞ்சின் கார்களை தயாரிப்பதை நிறுத்திவிட்டது. விரைவில் CNG தயாரிப்புகளை கொண்டு வருவதோடு, எதிர்காலத்திற்கான நெகிழ்வான எரிபொருள் வாகனங்களை (Flexible-fuel Vehicle) உருவாக்கவும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 30, 2021, 12:22 PM IST
  • மாருதி சுஸுகியின் மின்சார கார்கள் எப்போது சந்தைக்கு வரும்?
  • மாருதி சுஸுகி ஏற்கனவே டீசல் எஞ்சின் கார்களை தயாரிப்பதை நிறுத்திவிட்டது.
  • மாருதி சுஸுகி நிறுவனம் சிஎன்ஜி-க்கு முக்கியத்துவம் அளிக்கின்றது.
Maruti Suzuki மின்சார கார்: எப்போது அறிமுகம்? விவரம் இதோ title=

புதுடெல்லி: நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் மின்சார கார்கள் பிரிவு குறித்து சந்தையில் பல பேச்சுகள் உள்ளன. டாப் எண்ட் பட்ஜெட் கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் மின்சார கார்கள் எப்போது சந்தைக்கு வரும் என்ற இந்த கேள்விக்கான பதிலை அறிய மக்கள் ஆர்வமாக உள்ளனர். இது பலரது மனதில் உள்ள கேள்வியாக உள்ளது. இந்தியாவில் அதிக வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனம் மாருதி என்பதால், மின்சார வாகனத் துறையிலும் மக்கள் மாருதியின் வாகனங்களை எதிர்பார்க்கின்றனர்.

மாருதி சுஸுகி எலெக்ட்ரிக் எப்போது சந்தையில் அறிமுகம் ஆகும்? 

இந்தக் கேள்விக்கு இப்போது விடை கிடைத்துவிட்டது என்று கூறலாம். நிறுவனத்தின் கூற்றுப்படி, மின்சார வாகனங்களுக்கான (Electric Vehicles) பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மாருதியின் மின்சார வாகனங்கள் 2025 அல்லது அதற்கும் முன்பே அறிமுகம் ஆகக்கூடும். நிறுவனம் இன்னும் அறிமுகத்துக்கான சரியான தேதியை வெளியிடவில்லை என்றாலும், அறிமுக தேதியை தாய் நிறுவனமான சுசுகி முடிவு செய்யும் என்று உறுதியாகக் கூறியுள்ளது. 

இதனுடன், சிஎன்ஜி-யுடன் எதிர்காலத்தில் வரக்கூடிய ஃப்ளெக்ஸ்-எரிபொருள் வாகனத்தையும் உருவாக்கி வருவதாகவும் மாருதி சுசுகி கூறியுள்ளது. தற்போது, ​​நாட்டின் மிகப்பெரிய மின்சார கார் நிறுவனம் டாடா மோட்டார்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பரில் டாடா மோட்டார்ஸ் 1 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்சார வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

சந்தையில் மின்சார வாகனத்திற்கான தேவை எப்படி உள்ளது? 

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா கூறுகையில், “1000 வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் நல்ல எண்ணிக்கைதான். ஆனால், இதில் எங்களுக்கு அத்தனை உற்சாகம் ஏற்படவில்லை. மாதம் 1000 வாகனங்களை மட்டும் விற்று நாங்கள் மகிழ்ச்சியடைய முடியாது. அதற்கு மேலே செல்ல வேண்டும். சந்தையில் மின்சார வாகனங்களுக்கு நல்ல தேவை இருக்க வேண்டும். நாங்கள் மின்சார வாகனங்களை விற்பனை செய்ய ஆரம்பிக்கும் நிலையில், ஒவ்வொரு மாதமும் இருப்பில் மட்டும் சுமார் 10 ஆயிரம் வாகனங்களாவது இருக்க வேண்டும்" என்றார்.

ALSO READ: உலகின் Cheapest Electric car Strom R3: அசத்தல் தோற்றம், அபாரமான அம்சங்கள் 

Flex-fuel இயந்திரங்களில் கவனம் செலுத்துகிறது நிறுவனம்

மாருதி சுஸுகி ஏற்கனவே டீசல் எஞ்சின் கார்களை தயாரிப்பதை நிறுத்திவிட்டது. விரைவில் CNG தயாரிப்புகளை கொண்டு வருவதோடு, எதிர்காலத்திற்கான நெகிழ்வான எரிபொருள் வாகனங்களை (Flexible-fuel Vehicle) உருவாக்கவும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அரசாங்கம், 6 மாதங்களில் அனைத்து வகையான வாகனங்களுக்கும் ஃப்ளெக்ஸ் எரிபொருள் இன்ஜின்களை கட்டாயமாக்கும் என சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நிறுவனம் இன்னும் சிஎன்ஜி-க்கு முக்கியத்துவம் அளிக்கின்றது

நாட்டில் சிஎன்ஜிக்கான (CNG) தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மாருதி சுஸுகி நம்புகிறது. சிஎன்ஜி கார்களின் தேவையை வலியுறுத்திய பார்கவா, தனிப்பட்ட போக்குவரத்திற்காக சிஎன்ஜி வாகனங்களை ஊக்குவிக்கும் கொள்கையை அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது என்றார். 

இந்த நேரத்தில் CNG-க்கான தேவை அதிகரித்து வருகிறது. மேலும் Maruti Suzuki India Limited (MSIL) போர்ட்ஃபோலியோவில் காத்திருப்பு பட்டியலில் பெரும்பகுதி CNG கார்களுக்கானது. தற்போது, ​​நிறுவனம் மாருதி சுசுகி ஆல்டோ முதல் வேகன்ஆர், செலிரியோ மற்றும் எர்டிகா போன்ற மாடல்களில் தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட சிஎன்ஜி ஆப்ஷனை வழங்குகிறது.

ALSO READ:Humble One: சூரிய ஒளியால் சார்ஜ் ஆகும் மின்சார கார்கள்!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News