இந்திய சமையலறையில் காணப்படும் இந்த 5 மசாலாப் பொருட்கள் மிகவும் நன்மை பயக்க கூடியது. இது சிறுநீரகம் முதல் கல்லீரல் தொடர்பான நோய்கள் மட்டுமல்லாது உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
Cumin Water as Weight Loss Drink: சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் விரைவாக உடல் எடையை குறைக்க முடியும். அவற்றில் ஒன்றான ஒரு மேஜிக் பானத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி சிறந்த வழி என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் நேரமின்மையால் சிலர் உடற்பயிற்சி செய்ய முடியாத சூழ்நிலை இருப்பவர்களுக்கு இந்த ஆயுர்வேத பானம் பெரிதும் உதவும்.
சீரகம்
தினமும் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதை உணரலாம். சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, கலோரிகளை எரிக்கும். சீரகத்தில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால் தொப்பையைக் குறைக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.