மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்ளும் தேர்தல் முறைகேடுகளும்! கட்சிகளுக்கு ஏற்ப மாறும் காட்சிகள்!

EVM And Allegations: பாகிஸ்தானில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்திருந்தால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருக்காது என்று இம்ரான் கான் கூறினார்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 17, 2024, 03:11 PM IST
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்ளும் தேர்தல் முறைகேடுகளும்! கட்சிகளுக்கு ஏற்ப மாறும் காட்சிகள்! title=

2024ம் ஆண்டு சர்வதேச அளவில் தேர்தல் ஆண்டாக மாறியிருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் ஒரு புறம் மும்முரமாகிறது என்றால், மறுபுறம் ரஷ்யாவில் தேர்தல், இந்தியாவில் நேற்று தான் தேர்தல் அறிவிப்பு வெளியானது என்றால், பாகிஸ்தானில் தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. இப்படி உலகில் முக்கியமான தேர்தல் ஆண்டாக இருக்கும் இந்த ஆண்டும் வாக்குப் பதிவும் வாக்குச்சீட்டும் முக்கிய கவனம் பெறுகின்றன.

பாகிஸ்தான் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) இருந்திருந்தால், தேர்தலில் நடைபெற்ற அனைத்து முறைகேடுகளுக்கும் ஒரு மணி நேரத்தில் தீர்வு கிடைத்திருக்கும் என பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் செய்தியாளர்களிடம் பேசும் போது, ​​மின்னணு  வாக்குப்பதிவு இல்லாதது பெரிய குறையாகிவிட்டது என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் நிறுவனர் இம்ரான் கான் அல்-காதர் அறக்கட்டளை வழக்கின் விசாரணைக்குப் பிறகு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சியின் சின்னத்தை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் ரத்து செய்திருந்தாலும், தேர்தலில் இம்ரானின் கட்சி வேட்பாளர்கள் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்ட் 90 இடங்களில் வெற்றி பெற்றனர்.

பாகிஸ்தானின் தேசிய சபையில் அதிக இடங்களை பிடித்தபோதும், அவர்களை விட குறைந்த தொகுதிகளை வென்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துவிட்டது.

தனது கட்சி 3 கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும், மீதமுள்ள 17 அரசியல் கட்சிகள் சேர்ந்து அதே எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும்  இம்ரான் கான் கூறினார். 

மேலும் படிக்க | இந்தியாவுடனான உறவில் எவ்வித முன்னேற்றமும் இருக்காது:  பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம்

இந்த பின்னணியில் தேர்தல் பற்றி பேசிய இம்ரான் கான், பாகிஸ்தானில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM Machine) இருந்திருந்தால் தேர்தல் முறைகேடுகள் அனைத்தும் தீர்க்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்தார். இந்தத் தகவலை இம்ரான் கானின் கட்சியின் சமூக ஊடகப் பதிவும் உறுதி செய்கிறது.  

பாகிஸ்தான் தேர்தல் ஆணையம், சில அரசியல் கட்சிகள் மற்றும் சில ஸ்தாபனங்கள், மின்னணு வாக்குப்பதிவை அறிமுகப்படுத்தும் திட்டத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்று இம்ரான் கான் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார். பொதுத் தேர்தல்களில் மக்களின் வாக்கு என்ற உரிமையை திருடியது "உயர் துரோக நடவடிக்கை" என்று இம்ரான் கான் குற்றம் சாட்டுகிறார்.

அமெரிக்காவில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அலுவலகத்திற்கு வெளியே நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஆதரித்த இம்ரான் கான், எதிர்ப்பாளர்கள் எழுப்பிய 'இராணுவ எதிர்ப்பு' முழக்கங்கள் பற்றி கருத்து சொல்வதை தவிர்த்துவிட்டார்.

இம்ரானின் கட்சி, சர்வதேச நிதியம் மற்றும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எழுப்பியதுடன், தேர்தல் செயல்பாட்டில் உள்ள குறைபாடுகளையும் சுட்டிக்காட்டியது.

தனக்கு எதிரான சதியின் ஒரு பகுதியாக பிடிஐ தனது தேர்தல் சின்னமான 'Bat' (கிரிக்கெட் மட்டை) பறித்ததாக குற்றம் சாட்டிய முன்னாள் பிரதமர் மக்கள் வாக்கு மூலம் வழங்கிய உத்தரவை திருடுவது தேசத்துரோகத்திற்கு நிகரானது என்று அவர் கூறினார்.  

மேலும் படிக்க | Lok Sabha Election 2024: மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிப்பு... தமிழ்நாட்டில் எப்போது தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News