அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சு! உப்பிட்டவரை உள்ளளவும் நினை! உப்புக்கு மாற்று உண்டா?

Salt And Health : அறுசுவைகளில் உப்பு மிகவும் முக்கியமானது. ஆனால், ஒருவர் அளவுக்கு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உப்பை உண்டால், உணவே விஷமாக மாறும். 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 27, 2024, 12:09 AM IST
  • அளவுக்கு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உப்பை உண்டால் என்னவாகும்?
  • அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சு!
  • உப்பிட்டவரை உள்ளளவும் நினை!
அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சு! உப்பிட்டவரை உள்ளளவும் நினை! உப்புக்கு மாற்று உண்டா? title=

Lifespan & Salt : உப்புக்கு உள்ள முக்கியத்துவம் உலகில் வேறு எந்த பொருளுக்கும் இல்லாதது என்றே சொல்லலாம். ஒருவரின் நன்றியுணர்ச்சியுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படும் உப்பு, அடிப்படையான சத்து. அறுசுவைகளில் உப்பு மிகவும் முக்கியமானது. ஆனால், ஒருவர் அளவுக்கு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உப்பை உண்டால், உணவே விஷமாக மாறும். அளவுக்கு மேl உடலில் படியும் உப்பு, உடலில் உருவாகும் நோய்கள் அனைத்திற்கும் காரணமாகிறது.

உப்பு நுகர்வு அதிகரிப்பு

இன்றைய மாறிய வாழ்க்கைமுறையால் ஏற்படும் நோய்களுள் முக்கியமான உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உப்பு உதவுகிறது. ஆனால், அதிக உப்பு உடலில் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். வெறும் இரத்த அழுத்தம் மட்டுமல்ல, உடலில் அதிக உப்பு சேர்ந்தால், பல நோய்கள் வாடகை இல்லாமல் உடலில் குடியேறும். 

எனவே, உப்புக்கு மாற்று என்பது இன்று பரவலாக பேசப்படுகிறது. வழக்கமான உப்புக்கு பதிலாக, வேறு வகையான உப்பு மாற்றீடுகளை மருத்துவக்ரள் பரிந்துரைக்கின்றனர். அவற்றின் மூலம் உயர் இரத்த அழுத்தப் பிரச்சனையைக் குறைக்கலாம்.

உப்பு மாற்றீடுகள் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுமா? என்பது தொடர்பாக சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், வழக்கமாக நாம் பயன்படுத்தும் உப்பை மாற்றியமைக்கும் உப்பைப் பயன்படுத்துவதன் மூலம் உயர் இரத்த அழுத்தம் 40 சதவிகிதம் குறைவதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | IT Employees: ஐடி செக்டார்ல வேலை செய்றீங்களா? கொலஸ்ட்ரால், அனீமியா உடல் பருமன் ஆபத்து எச்சரிக்கை!

சீனாவின் ஆய்வு

சீன விஞ்ஞானிகளால் செய்யப்பட்ட இந்த ஆய்வில், உப்பு பயன்படுத்துவதற்கு பதிலாக, அதில் 25 சதவீதத்தை குறைத்துக் கொண்டு, பொட்டாசியம் குளோரைடு பயன்படுத்தத் தொடங்கினார்கள். உப்புக்க்கு மாற்றாக காளான், எலுமிச்சை, கடற்பாசி, போன்ற 12 சதவீத உலர்ந்த உண்ணக்கூடிய சுவைகள் மற்றும் அமினோ அமிலங்கள் கொண்ட உணவுகள் பயன்படுத்தப்பட்டன.  

சோடியம் குறையும்

உப்பு மாற்றீடுகள் உணவு சோடியத்தை குறைக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இருந்தாலும் கூட, இந்த மற்றீடுகளும் அளவுக்கு அதிகமாக போய்விடக்கூடாது. உப்பு மாற்று என்பது வழக்கமான உப்பை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள் ஆகும்.

உப்புக்கு மிகவும் பொதுவான சுவை மாற்றாக பொட்டாசியம் குளோரைடு உள்ளது. அதேபோல, பொட்டாசியம் பைகார்பனேட், பொட்டாசியம் சிட்ரேட் அல்லது பொட்டாசியம் லாக்டேட் ஆகியவையும் உப்புக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகின்றன. இரத்த அளவையும் இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும் சோடியம் என்றால், பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே இது சோடியத்தின் உயர் இரத்த அழுத்த விளைவை நடுநிலையாக்குகிறது பொட்டாசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Adulteration: அதிர வைக்கும் உப்பு கலப்பட செய்திகள்! கலப்பட உப்பை கண்டறிவது எப்படி?

உப்புக்கு மாற்றாக மூலிகைகள், மசாலாப் பொருட்கள், பூண்டு மற்றும் சிட்ரஸ் பழங்கள் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி சில புதிய வகையான உப்பு மாற்றீடுகள் உருவாக்கப்படுகின்றன. சோடியம் உட்கொள்வதைக் குறைப்பது மற்றும் பொட்டாசியம் உட்கொள்வதை அதிகரிப்பது உயர் இரத்த அழுத்தத்தை திறம்பட குறைக்கும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

இருந்தாலும்கூட, அதிகப்படியான பொட்டாசியம் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அல்லது உயிருக்கு ஆபத்தான எந்த நோய்க்கும் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். உயர் இரத்த அழுத்தம், ஒரு ஆபத்தான நோய். இதில், தமனிகளில் இரத்த அழுத்தம் கணிசமாக அதிகரிக்கிறது மற்றும் தமனிகளில் இரத்த ஓட்டத்தை பராமரிக்க இதயம் இயல்பை விட அதிகமாக வேலை செய்ய வேண்டும். உயர் இரத்த அழுத்தம் மாரடைப்புக்கு முக்கிய காரணமாக மாறுவதால், உப்பை அளவாக பயன்படுத்துவது நல்லது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது).

மேலும் படிக்க | பச்சையா சாப்பிட்டா நோயெல்லாம் கிட்டவே வராது! நோய் தீர்க்கும் வெங்காயத்தின் மருத்துவ குணம்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News