நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் அதர்வா முரளி! வெளியானது பர்ஸ்ட் லுக்!

நடிகர் அதர்வா முரளியின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்கும் ’DNA’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது!

 

1 /5

‘டாடா’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஒலிம்பியா மூவிஸ் எஸ் அம்பேத் குமார் தயாரிக்கும் ‘DNA’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.   

2 /5

'மான்ஸ்டர்', 'ஒரு நாள் கூத்து', 'ஃபர்ஹானா' படப்புகழ் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் அதர்வா முரளி கதாநாயகனாக நடிக்கிறார்.   

3 /5

விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட 'சித்தா' படத்தில் தனது சிறப்பான நடிப்பிற்காக பாராட்டுகளைப் பெற்ற நிமிஷா சஜயன், கதாநாயகியாக நடிக்கிறார். அதர்வா முரளியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.    

4 /5

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் அதர்வா முரளியின் புதிய தோற்றம் ரசிகர்கள் மத்தியில் படம் குறித்தான ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது. இயக்குநர் நெல்சன் தனது வெவ்வேறு ஜானர்களைத் தனது முந்தையப் படங்களில் முயற்சி செய்து வெற்றியும் கண்டவர்.   

5 /5

இவருடன் ‘DNA’ படத்தில் திறமையான நடிகர்கள் அதர்வா முரளி மற்றும் நிமிஷா சஜயன் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் டிரைலர், ஆடியோ மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.