ஜாலியா ஒல்லியாகலாம் வாங்க! இந்த ஜூஸ் உடல் எடையை குறைப்பதோடு ஆரோக்கியமானதும் கூட...

Weight Loss Tips Juices: உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு சுலபமான சத்தான ஜூஸ் டிப்ஸ் இது. உடல் பருமனை குறைக்க விரும்பினால், அதற்கான உணவுப் பட்டியலில் இடம் பெற வேண்டிய ஆரோக்கியமான பானங்களில் இந்த ஜூஸ் சேர்க்கப்படவேண்டும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 8, 2022, 01:48 PM IST
  • உடல் எடையை குறைக்க சத்தான ஜூஸ்
  • உடல் பருமனை குறைக்க ஆரோக்கியமான பானம்
  • காய்கறிகளே உடல் எடையை குறைக்கும் மாயம்
ஜாலியா ஒல்லியாகலாம் வாங்க! இந்த ஜூஸ் உடல் எடையை குறைப்பதோடு ஆரோக்கியமானதும் கூட... title=

Weight Loss Tips Juices: உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு சுலபமான சத்தான ஜூஸ் டிப்ஸ் இது. உடல் பருமனை குறைக்க விரும்பினால், அதற்கான உணவுப் பட்டியலில் இடம் பெற வேண்டிய ஆரோக்கியமான பானங்களில் இந்த ஜூஸ் சேர்க்கப்படவேண்டும். காய்கறிகளும், பழ வகைகளும் உடல் எடை குறைப்புக்கு உதவுபவை. ஆனால், அவற்றையும் சாறு எடுத்து, விதவிதமான கலவையில் அருந்தலாம். விதவிதமான வண்ணமயமான காய்களும், பழங்களும் ஜூஸ் செய்ய ஏற்றவை. அவற்றில் இரண்டு மட்டும் உங்களுக்காக.

பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ஜூஸ் ருசியானது, வாய்க்கு சுவையானது.  இதில் பெரும்பாலும் கீரை, வெள்ளரி, பச்சை ஆப்பிள், கொத்தமல்லி மற்றும் புதினா ஆகியவை அடங்கும். நீங்கள் விரும்பினால், அதில் எலுமிச்சை மற்றும் இஞ்சியும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் ஆகிய அனைத்தும் நிறைய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை என்பதால், உடல் பருமனை குறைப்பதுடன், ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இந்த ஜூசுக்கு ஏபிசி ஜூஸ் என்று அழைக்கின்றனர்.

காய்கறி ஜூஸின் நன்மைகள்: ஆராய்ச்சியின் படி, பச்சை இலைக் காய்கறிகள் உடலின் வீக்கத்தன்மையை குறைப்பதோடு மட்டுமல்லாமல், வயது தொடர்பான பிரச்சனைகள் மற்றும் மனநலப் பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகின்றன.

அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்ட காய்கறிகள், சருமத்தில் பாக்டீரியா வளர்ச்சியைக் குறைத்து, சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் உதவுகிறது. இஞ்சி போன்ற மூலப்பொருட்கள், உடல் எடையைக் குறைப்பதில் நன்மை பயக்கும். புதினா மற்றும் ஆப்பிள் போன்றவை, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.

ஏபிசி ஜூஸ்
இந்த சாறு ஒரு அதிசய பானம் என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் இதில் உள்ள ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் ஆகிய மூன்று பொருட்களும் அனைவருக்கும் சிறந்த சூப்பர்ஃபுட்களில் ஒன்றாகும். இது பல உடற்பயிற்சி மற்றும் உடல்நலக் குறைபாடுகளுக்கு பயனுள்ள பானங்களில் ஒன்றாகும். ஏபிசி ஜூஸில் துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் வைட்டமின்கள் ஏ, பி6, சி மற்றும் பிற ஊட்டச்சத்துக்களும் உள்ளன.

மேலும் படிக்க | ஆரோக்கியத்தை கொடுக்கும் சோளக்கருது! இங்க சாப்பிட்டா ஆரோக்கியத்துக்கே ஆப்பு வைக்கும்

ஏபிசி ஜூஸ் நன்மைகள்
ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதோடு, ஏபிசி ஜூஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இது உங்கள் சருமத்தின் நச்சுத்தன்மையை நீக்கி, அதை ஆரோக்கியமாக மாற்றும். அதுமட்டுமின்றி, இது உங்கள் சருமத்தை இளமையாகவும், இறுக்கமாகவும் மாற்ற உதவுகிறது.

உடல் எடை இழக்க விரும்புவோருக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இந்த ஆரோக்கிய பானத்தில், குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளது என்பது ஆரோக்கியமான அம்சம் ஆகும். ஆரோக்கியமான முடி மற்றும் சிறந்த செரிமானத்திற்கு இந்த பானம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News