அண்ணா சீரியல் அப்டேட்: கனியை பார்க்க விலை பேசிய வேலு மாணிக்கம்.. ஜகா வாங்கிய பரணி, ஷண்முகம் கொடுத்த பதிலடி

Anna Today's Episode Update:  ‌தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 30, 2024, 12:40 PM IST
  • அண்ணா: இன்றைய எபிசோட்.
  • நான் என் அண்ணனை விட்டு வர மாட்டேன்: கனி.
  • சாப்பிடாமல் எழுந்து செல்லும் ஷண்முகம்.
அண்ணா சீரியல் அப்டேட்: கனியை பார்க்க விலை பேசிய வேலு மாணிக்கம்.. ஜகா வாங்கிய பரணி, ஷண்முகம் கொடுத்த பதிலடி title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அண்ணா' சீரியல்.

அண்ணா: இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கனியின் அப்பா பணத்துடன் ஷண்முகம் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

நான் என் அண்ணனை விட்டு வர மாட்டேன்: கனி

அதாவது வேலு மாணிக்கம் நீங்க கேட்குற பணத்தை கொடுக்கிறேன், ஒரே ஒரு முறையாவது என் பொண்ணை பார்க்க விடுங்க என்று சொல்ல ஷண்முகம் எவ்வளவு கோடி கொடுத்தாலும் என் தங்கச்சியை விட்டு தர மாட்டேன் என்று சொல்ல கனி வெளியே வந்து நான் என் அண்ணனை விட்டு வர மாட்டேன் என்று சொல்ல வேலு மாணிக்கம் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகிறார். 

அடுத்து எல்லாரும் சாப்பிட உட்கார வைகுண்டம் எப்படியும் 1 கோடி ஆகும் போல, நம்மால் வாங்க முடியாது. இதை விட்டுடலாம் என்று சொல்ல ரத்னாவும் ஆமாம் அண்ணாம், நான் ஏதாவது ஒரு ஸ்கூல்லேயே வேலை பார்த்துக்கறேன் என்று சொல்ல பரணியும் இப்போ இருக்கிற சூழ்நிலையில் கஷ்டம் தான் போல என்று சொல்கிறாள். 

 சாப்பிடாமல் எழுந்து செல்லும் ஷண்முகம்

இதை கேட்ட ஷண்முகம் நீ தானே கல்யாணம் பண்ணலாம் என்று சொன்னதுக்கு தங்கச்சியோட கனவை நிறைவேற்றுபவன் தான் நல்ல அண்ணன்னு சொன்ன, என்ன நடந்தாலும் என் தங்கச்சியோட கனவை நான் நிறைவேற்றுவேன் என்று சொல்லி சாப்பிடாமல் எழுந்து செல்கிறான். ஷண்முகம் சாப்பிடாமல் போக கனி அண்ணன் சாப்பிடும் போது தான் இப்படியெல்லாம் பேசுவியா என்று அப்பாவை திட்டி அவளும் சாப்பிடாமல் எழுந்து செல்ல வைகுண்டம் நானும் சாப்பிடல என்று சென்று விடுகிறார். 

மேலும் படிக்க | தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் புது அப்பேட் கொடுத்த படக்குழு

நைட் நேரத்தில் ஷண்முகம் தூங்காமல் யோசனையில் இருக்க பரணி என்னாச்சு என்று கேட்க எனக்கு என்ன பண்றதுனு தெரியல என்று வருத்தப்படுகிறான். இருந்தாலும் என் அப்பன் முருகன் என்னை கைவிட மாட்டான் என்றும் சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

அண்ணா: சீரியலை எங்கு பார்ப்பது?

அண்ணா சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | மகாமுனி பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்கும் அர்ஜுன் தாஸ்! வெளியானது ட்ரைலர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News