தமிழகத்தில் மீண்டும் மின் கட்டணம் உயர்வு! அன்புமணி ராமதாஸ் முக்கிய தகவல்!

ஜீலை மாதம் முதல் மின்கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.  மின் கட்டணம் உயர்த்துவது நியாயம் இல்லாதது என அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Jun 5, 2023, 07:31 AM IST
  • தமிழக அரசு மினகட்டணம் உயர்த்கூடாது.
  • பாமக இதனை எதிர்த்து போராட்டம் நடத்தும்.
  • மின்கட்டண உயர்வு அறிவிப்பை எதிர்க்கிறோம்.
தமிழகத்தில் மீண்டும் மின் கட்டணம் உயர்வு! அன்புமணி ராமதாஸ் முக்கிய தகவல்! title=

தர்மபுரி மாவட்ட விளையாட்டரங்கில் அதியமான் கிரிக்கெட் கிளப் நடத்தும் ஏம்ஆர் கிரிகெட் கோப்பைக்கான பே ட்டிகள் கடந்த இரண்டு வாரமாக நடைபெற்றுவருகிறது. அதன் இறுதி ஆட்டித்தில் வெற் பெறுவர்களுக்கு 2 லட்சம் வழங்கப்படுகிறது. இதன் இறுதி போட்டைியை துவக்கி வைத்து பத்திரிக்கையாள்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இதேபோன்ற பல போட்டிகள் நடத்த வேண்டும். கிராமபுற மாணவ மாணவிகளுக்கு  ஊக்கமும் பயிற்சியும் வழங்கி இந்திய அளவில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும். கோடை விடுமுறையில் மாணவர்கள் இளைஞர்கள் தவறான பாதைக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே இந்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.  தர்மபுரி மாவட்டத்தில் காவிரி உபரி நீர்  திட்டம் இரண்டு ஆண்டுகளாக எந்தவித முன்னேறமும் இல்லை. சட்டமன்றத்தில் இதற்கான ஆய்வு நடத்தப்படுகிறது என தெரிவிக்கிறார்கள். ஆண்டுக்கு 3டிஎம்சி நீர் கடலில் கலக்கும் காவிரிநீரை தான் கேட்கிறோம்.

தர்மபுரி மாவட்டத்தின் ஏரி குளங்குக்கு நிரப்ப கேட்கிறோம். தர்மபுரி மாவட்டத்தில் நிலத்தடியில் ப்ளோரசிஸ் பிரச்சனை உள்ளது. மாவட்ட மக்கள் பயன்பெற பல போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தினோம். கடந்த ஆட்சியாளர்களிடம் கேட்டோம். ஆனால் நிறைவேற வில்லை. அதனால் முதல்வர் அறிவிக்க வேண்டும்.
தர்மபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக சிப்காட் தொழிற்பேட்டை பணி தற்போதுதான் நடக்க துங்கியுள்ளது. மொரப்பூர் ரயில்பாதை திட்டம் செயல்படுத்த  100 கோடி ஒதுக்ப்பட்டு பணிகள் நடக்கிறது. கள்ள சாராயம் சாவிற்கு பிறகு  2000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாம்பரம் பகுதிகளில் பார்களில் உரிமம் இல்லாத பார்கள் மூடப்பட்டுள்ளது. இந்த குடிப்பழக்கங்கள் எத்தனை ஆண்டுகளாக உள்ளது?அது நடப்பது அனைத்து தரப்பினருக்கும் தெரியும். காவல்துறை மீதும் வருவாய்துறை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் படிக்க | கழுதைங்க புலி வேஷம் போடுது... கோவனத்தோட ஓட விடுங்கையா - திமுக எம்எல்ஏ மயிலை வேலு ஆவேசம்

500 டாஸ்மார்க் கடைகள் மூடப்போவதாக கூறி பல மாதங்கள் ஆகிறது. ஆனால் முன்னால் முதல்வர் கலைஞர் பிறந்தாநாளில் அந்த ஆணை நிறைவேறும் என எதிர்பார்த்தோம். ஆனால் ஏமாற்றம் அளிக்கிறது. ஜீலை மாதம் முதல் மின்கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.  மின் கட்டணம் உயர்த்துவது நியாயம் இல்லாதது. தமிழக அரசு மினகட்டணம் உயர்த்கூடாது. பாமக இதனை எதிர்த்து போராட்டம் நடத்தும். மின்கட்டண உயர்வு அறிவிப்பை எதிர்க்கிறோம்.  மினகட்டண ஒழுங்குமுறை ஆணையும் ஒவ்வொரு இன்ஃபுலேசன்  கணக்கு  காட்டி .4.7% சதவீதம் கணக்கு காட்டி மீண்டும் 8 மாதத்தில் உயர்த்த உள்ளார்கள்.அதனை ஏற்றுக்கொள் முடியாது.  

மேகதாது அணை கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் ஆசை வார்த்தகைகள் கூறினார்கள். அதனை கடுமையாக தமிழக அரசு எதிர்க்க வேண்டும். முன்னாள் நீர்பாசன அமைச்சராக இருந்து 1000 கோடி நிதி ஒதுக்கி முயற்சி செய்தார். 104 டிஎம்சி மேட்டூர் 93 டிஎம்சி மழை அதிகாரித்தால் நீர்வரத்து உயரும்
104 டிஎம்சியில் கடந்த காலத்தில் நமக்கு நீர் கிடைக்கவில்லை.  171 டிஎம்சீ நீர் வந்தால் நமக்கு ஒரு சொட்டு நீர் கூவ கிடைக்காது. கர்நாடக அரசு மீது 1 சதவீதம் கூட நம்பிக்கை இல்லை. தமிழக அரசு மேகதது அணைகட்டு விவகாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும். மத்தியஅரசும் அதற்கு வாய்ப்பு அளிக்க கூடாது.  தர்மபுரி மாவட்டத்தரல் ராகி அதிக அளவில் உற்பத்தியாகிறது. இங்கு கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்யும் அளவிற்கு உற்பத்தி இருந்தும் கர்நாடக மாநிலத்தில் ராகி கொள்முதல் செய்யப்படுகிறது. கமிஷனுக்காக இப்படி செய்கிறார்கள், இந்த ஆண்டை ஐநா சபையில் சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளார்கள், பிரதமரும் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க | ஒடிசாவில் இருந்து வந்த சிறப்பு ரயில்... பாதுகாப்பாக தமிழகம் திரும்பிய 137 தமிழர்கள்

தமிழகத்தில் மூன்று மருத்துவ கல்லூரிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. டாக்டர் ரேலா (கல்லீரல் மாற்று சிகிச்சை சிறப்பு  மருத்துவர் உலகஅளவில் சிகிச்சை செய்தவர் ஸ்டேன்லி மருத்துவ கல்லூரியில்  படித்தவர்).  தர்மபுரியில் உள்ள மருத்துவ கல்லூரி மற்றும் இந்தியாவில் 140 கல்லூரிகளுக்கு ரத்தாணை செய்யப்படு்ள்ளது. இது மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள 150 கல்லூரிகளுக்கு நோட்டிஸ் அனுப்ப்பட்டுள்ளது. இங்கு மருத்துவர்கள் தேவை பற்றாக்குறையாக உள்ளது. இந்தியாவில் மட்டும் 10 லட்சம் மருத்துவர்கள் தேவை படுகிறது, 1700 பேருக்கு மருத்துவர்கள் தேவையாக உள்ளனர், ஆனால் 700பேருக்கு மட்டுமே மருத்துவர்கள் உள்ளனர். இந்தாண்டு கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் துவங்க உள்ளது அரசு பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது. வட மாவட்டங்களில் இதே நிலை உள்ளது. ஆசிரியர்கள் கலந்தாய்வு நேரத்தில் ஆசிரியர்களை நியமித்து மீண்டும் தென்மாவட்டங்களுக்கு சென்று விடுகின்றனர் .இதனால் தேர்ச்சி விகிதத்தில் கடைசி 15 இடங்கள் வட மாவட்டங்களாக உள்ளது. இது வேதனையளிக்கிறது. பள்ளிகளில் சரியான கட்டுமானங்கள் இல்லை.

10.5% மே மாத்துடன் முடிவடைகிறது. இதன் தகவல்கள் சேகரித்து வருகிறோம். மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் தேவை. இது சமூக நிதி பிரச்சனையாகும். கல்வியில் 40 ஆண்டுகளாக இதே நிலமைதான் 10.11.12 ம் வகுப்பு தேர்வுகளில் இதே நிலைதான் உள்ளது. இதற்கு இடஒதுக்கீடுதான் தீர்வாகும்.  அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர்கள்  ரெய்டு குறித்து பலமுறை சொல்லிவிட்டேன். அறிஞர் அண்ணாவின் கொள்ளை பூரண மதுவிலக்கு. அதுவே கட்சியின் கொள்கை.  ஒடிசா ரயில் விபத்து கோரமாண விபத்து. விபத்து காட்சிகளை பார்த்து பெரும் சோகம்  அடைந்தேன். தொடர்ந்து மூன்று ரயில்கள் விபத்து, நூற்றுக்கணாகான பேர் சிகிச்சையில் உள்ளனர். மனதளவில் ஆயிரக்கணக்கான பேர்  பாதிப்பில் உள்ளனர்.  புல்லட் ரயீ் சூப்பர் பாஸ்ட் ரயில் கொண்டுவருவதை விட்டுவிட்டு பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும். இந்த ஆண்டு 6 ஆயிரம் கோடி ரூபாய் நிதி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை வரவேற்கிறோம். ரயில்வே பாதுகாப்பிற்கு நிதி ஒதுக்கீடு செய்து பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும். புதிய நவீன வசதிகள் செய்ய வேண்டும். சிகிச்சை பெறுபவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க தமிழக அரசு முன் வரவேண்டும் என பேட்டியளித்தார்.

மேலும் படிக்க | அடுத்து என்ன என்பது மத்திய அரசுக்கு தெரியவில்லை - ரயில் விபத்து குறித்து ஆ. ராசா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News